Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வரலாறு சொல்லும் பாடங்கள்...!
#3
<b>சமாதானத்தின் பெயரால் ஏமாற்றப்பட்ட
பலஸ்தீனத் தலைவர் யசீர் அரபாத்</b>-
<i>பெ.முத்துலிங்கம்-</i>


நான்கு தசாப்தங்களாக பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக போராடிய யசீர் அரபாத் தம் மக்கள் சுதந்திரமான புூமியில் வாழ்வதினைக் காணாமலே மறைந்து விட்டார். இரண்டாம் உலக யுத்தத்தின் பின் தோன்றிய தேசிய விடுதலைப் போராட்டங்களைப் பொறுத்தவரை பலஸ்தீன விடுதலைப் போராட்டமும், தென்னாபிரிக்க தேசிய விடுதலைப் போராட்டமும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடுகளின் ஆதரவைப் பெற்ற போராட்டங்களாகும்.

இப் போராட்டங்களில் பலஸ்தீன போராட்டம் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் இஸ்ரேலிய மக்கள் பிரச்சினையை தீர்ப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவாகத் தோன்றியதொன்றாகும். நாடற்றவர்களாக்கப்பட்ட இஸ்ரேலியர்களுக்கு நாடு வழங்கும் முயற்சியின் விளைவால் பலஸ்தீனியர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டனர். தாம் இழந்த நாட்டினை பெறுவதற்காக போராடிய பலஸ்தீன மக்கள் பல நாடுகளில் தோன்றிய தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கும் ஆதரவும், இராணுவப் பயிற்சியும் அளித்து வந்தனர்.

<i>பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக பல்வேறு போராளி குழுக்கள் ஆயுதமேந்தி போராடிய போதிலும் யசீர் அரபாத்தின் பலஸ்தீன விடுதலை இயக்கமே அங்கீகரிக்கப்பட்ட விடுதலை இயக்கமாக கருதப்பட்டது.</i> சமாதானப் பேச்சுவார்த்தையின் போது யசீர் அரபாத்தின் தலைமையிலான இயக்கத்துடனே பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது. அரசியல், ஆயுத இயக்கத்திற்கு தலைமையளித்த சிறந்த அரசியல் இராணுவ மூலோபாயவாதியான யசீர் அரபாத் சமாதானப் பேச்சுவார்த்தையின் போது மிகக் கவனமாக தனது நகர்வுகளை மேற்கொண்டாராயினும், சோவியத் யுூனியனின் வீழ்ச்சியின் பின்னர் தோன்றிய சர்வதேச நிலைமையை கருத்திற் கொண்டு, மேற்கொண்ட நகர்வில் தோல்வி கண்டாரென்றே கூற வேண்டும்.

தொண்ணுாறுகளில் சோவியத் யுூனியன் வீழ்ச்சியுற்றப் பின் தோன்றிய சர்வதேச தனிபலத்தைக் கருத்திற் கொண்டு, முன்னெடுக்கப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தையில் யசீர் அரபாத் கலந்துகொண்டார். இச்சந்தர்ப்பத்தில் ஏனைய போராளிக் குழுக்கள் இதனை எதிர்த்த போதும் யசீர் அரபாத் புதிதாக தோன்றியுள்ள சர்வதேச தனிப்பலத்தையும், அதன் கைக்கூலியாக செயற்பட்டு வரும் இஸ்ரேலினையும் கருத்திற் கொண்டு சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

<b> பேச்சுவார்த்தைக் காலங்களில் பலஸ்தீன இயக்கம் இராணுவ ரீதியில் பலவீனமடைந்ததுடன், பேச்சுவார்த்தையின் இறுதியில் தாம் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட விடுதலைப் பிராந்தியத்தை விட சிறிய பிராந்தியத்தில் பலஸ்தீன நாட்டினை உருவாக்கிக் கொள்ள யசீர் அரபாத் சம்மதிக்க நேர்ந்தது. </b> Idea

<b>பலஸ்தீனர்கள் வாழ்ந்துவந்த பிரதேசங்களில், இஸ்ரேல் கடந்த நான்கு தசாப்தங்களாக குடியேற்றங்களை மேற்கொண்டமையினால் அகண்ட பலஸ்தீனத்தை இழக்க வேண்டிய சூழலுக்கு யசீர் அரபாத் தள்ளப்பட்டார். </b>Idea

<b>தோன்றியுள்ள புதிய இராணுவ சமபலத்தைக் கருத்திற் கொண்டு யசீர் அரபாத் சிறிய பலஸ்தீன நாட்டிற்கு இணங்கிய போதிலும் அந்நாட்டினை நடத்திச் செல்வதற்கு இஸ்ரேல் அனுமதிக்கவில்லை. சமாதான உடன்படிக்கையில் இணங்கியவாறு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவில்லை. ஐந்து வருடங்களுக்கு மேல் இழுத்தடிக்கப்பட்டது. </b> Idea

இந்நிலையில் ஏனைய விடுதலைக் குழுக்கள் இராணுவத் தாக்குதல்களை மேற்கொண்டன. இதனைச் சாட்டாக கொண்டு இஸ்ரேல் பதில் தாக்குதல்களை மேற்கொண்டதுடன், யசீர் அரபாத்தின் இராணுவ தலைமையகத்தை முற்றுகையிட்டு, கடந்த இரண்டரை வருடங்களாக அவரை அவரது இராணுவ முகாம்களுக்குள்ளேயே முடக்கி வைத்தது நோய்வாய்ப்பட்டு பாரிஸிலுள்ள இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வரை அதற்குள்ளேயே யசீர் அரபாத் வாழ நேர்ந்தது.

<b> பலஸ்தீனத்தின் தந்தையான யசீர் அரபாத் இவ்வாறு திறந்த சிறைக் கைதியாக்கப்பட்டவேளை, சமாதானப் பேச்சுவார்த்தையை ஊக்குவித்த நோர்வேயும் ஏனைய நாடுகளும் யசீர் அரபாத்தின் மீது இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையை முறியடிக்க முன்வரவில்லை. </b> Idea

சமாதானத்திற்கான நோபல் பரிசை யசீர் அரபாத்திற்கு வழங்க சிபாரிசு செய்த எந்தவொரு நாடும் இதனை தடுத்து நிறுத்த முன்வரவில்லை. ஈற்றில் பலஸ்தீன நாட்டிற்காக ஆயுதமேந்தி போராடிய யசீர் அரபாத், சமாதானத்திற்கு இணங்கிய போதிலும் சுதந்திர பலஸ்தீனத்தைக் காணாமலே இறந்துவிட்டார். சமாதானம் என்ற போர்வையில் யசீர் அரபாத் ஏமாற்றப்பட்டுள்ளார். :evil: Cry


யசீர் அரபாத்திற்கு நடந்த இச்சம்பவம் ஏனைய விடுதலை இயக்கங்களுக்கும் நல்ல பாடமாகும். Idea

<b>சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபடும் போதும் ஒரு போதும் தமது இராணுவ நடவடிக்கைகளை கைவிட்டு விடக்கூடாது. குறிப்பாக தமது இராணுவ பலத்தினை சமச்சீருடன் வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வைத்துக் கொண்ட அமைப்புகளே ஈற்றில் வெற்றி பெறும் நிலைப்பாட்டினை அடைந்துள்ளன.</b>

1975 ல் வெற்றி பெற்ற வியட்னாம் 1960 களிலும், 1970 களிலும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபடும் போது இராணுவ பலத்துடனே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அதுவே அதன் புூரண வெற்றிக்கு காரணமாக அமைந்தது. 1990இல் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஆபிரிக்க தேசிய காங்கிரஸ{ம் இவ்வாறான நிலைப்பாட்டினையே கடைப்பிடித்தது. ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தமது இராணுவப் பலத்தை வைத்துக் கொண்டே இறுதித் தீர்விற்கான பேச்சுவார்த்தையை மேற்கொண்டது. ஆனால், யசீர் அரபாத் அவ்வாறானதொரு நிலையை தொடர்ந்து பேணவில்லை. அதுவே எதிர்தரப்பு அவரையும் அவரது இயக்கத்தினையும் கண்டு அஞ்சாது தாம் கொடுப்பவைகளை பெற்றுக் கொள்ளும் நிலைக்குத்தள்ளியது.

<b><i>இராணுவ ரீதியாக வெற்றி கொள்ள முடியாத விடுதலை போராட்டங்களை சமாதான என்ற ஆயுதம் மூலமாகவே இன்றைய முதலாளித்துவம் வெற்றி கண்டுள்ளது. </i></b>சோஷலிச போராட்ட அமைப்புகளாயிருந்தாலென்ன தேசிய விடுதலை அமைப்புகளாயிருந்தாலென்ன, சமாதானம் எனும் பொறிக்குள் சிக்கியே முதலாளித்துவவாதிகளின் விருப்பிற்குட்பட்ட தீர்வினைப் பெற்றுள்ளன. கடந்த இரண்டு தசாப்தத்தில் உலக ரீதியாக மேற்கொள்ளப்பட்ட சமாதான நடவடிக்கைகளில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் மட்டுமே தமது விருப்பிற்கமைவான வெற்றியை சமாதானப் பேச்சுவார்த்தையின் மூலம் பெற்றுள்ளது.

எனவே யசீர் அரபாத்தின் அனுபவத்தை விடுதலை அமைப்புகள் கருத்திற் கொள்ள வேண்டும். <i>பலஸ்தீன இஸ்ரேல் சமாதானப் பேச்சுவாத்தையை முன்னெடுக்கப் பிரதானப் பங்குவகித்த நோர்வே, யசீர் அரபாத் பகிரங்கமாக சிறைவைக்கப்பட்டவேளை, அவரை மீட்பதற்கு து}து செல்லவில்லை</i>.

இன்றைய முதலாளித்துவ அமைப்பின் கீழ் சமாதான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க முன்வருவதாக கூறும் நோர்வே போன்ற நடுநிலை நாடுகள் ஈற்றில் குறிப்பிட்ட நாட்டின் முதலாளித்துவத்தினை பாதுகாப்பதற்கான நிகழ்ச்சி நிரலையே கொண்டிருக்கும். ஆரம்பத்தில் போராட்ட குழுக்கு ஆதரவான நிலைப்பாட்டினைக் கடைப்பிடித்து சமாதான பொறியில் சிக்கவைப்பதை தமது நோக்காக கொண்டிருக்கும். இலங்கையின் விடுதலை அமைப்புகளும் விதிவிலக்கல்ல. இன்று விடுதலைப் புலிகள் அமைப்பும் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட செய்வதில் நோர்வே வெற்றிக் கண்டுள்ளது.

படிப்படியாக அவ்வியக்கத்தையும் சமாதான பொறியில் சிக்கவைத்து ஈற்றில் முதலாளித்துவ அரசினால் தருவதை பெற்றுக் கொள்ளும் நிலைக்குச் கொண்டு செல்ல முயற்சிக்கும் என்பதில் ஐயமில்லை.

மோதல் தவிர்ப்பு நடவடிக்கையில் அல்லது மோதல் பரிமாற்றம் என்ற செயற்பாட்டில் நிபுணத்துவம் பெற்றவர்களைக் கொண்ட நாடுகள் சமாதானப் பேச்சுவார்த்தையில் கடைப்பிடிக்கும் முதலாவது உபாயம் மோதல் தவிர்ப்பினை கூடிய காலம்வரை கொண்டு செல்வதாகும். இதன் நோக்கம் போராட்ட அமைப்புகளை இராணுவ மனோ ரீதியாக பலவீனப்படுத்துவதாகும்.

பலஸ்தீன மக்களுக்கு விடுதலை பெற்றுத்தர கெரில்லா வீரனாக புறப்பட்ட யசீர் அரபாத் ஈற்றில் சமாதானத்திற்கான நோபல் பரிசை வென்றவராக மடிந்தார். ஆனால் அவரால் தமது மக்களுக்கு புூரண விடிவினை பெற்றுத் தர முடியாது போய்விட்டது.

சமாதானம் எனும் பொறியில் தாம் சிக்குண்டதை உணர்ந்தவுடன், அதிலிருந்து மீள பிரயத்தனங்களை முன்னெடுத்த போதும் உள்ளக ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் காணப்பட்ட சுூழ்நிலை அதற்கு இடமளிக்க வில்லை. சர்வதேச ஆதரவு இராணுவ மோதலுக்கு கிடைக்கவில்லை. மாறாக இடைக்கால கட்டமைப்பு அபிவிருத்திகளுக்கே கிடைத்தது. இவ் அபிவிருத்திக்கான உதவிகள் ஒரு புறமும், மறுபுறம் சமாதானத்தை நீடிக்கும் படியான அழுத்தமுமே சர்வதேச ரீதியாக அதிகரித்தது. இதன் பிரதி விளைவு தரப்படுவதை பெற்றுக் கொள்ளும் நிலைக்கே வழிவகுத்தது. சமாதான தந்தையாகப் பரிமாற்றமடைந்த பலஸ்தீனத்தின் தந்தை பலஸ்தீனத்தை காணாமலேயே இறந்துவிட்டார். இதுவே சர்வதேச சமாதானத் தீர்வு தரும் படிப்பினை. Idea

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (14.07.04)
Reply


Messages In This Thread
[No subject] - by Kanani - 10-30-2004, 11:14 PM
[No subject] - by Kanani - 11-17-2004, 02:57 PM
[No subject] - by ratha - 11-20-2004, 04:09 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)