Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Bushku valthukal
#1
சுவிசில் இருந்து வெளியாகும் ஒரு இலவசப்பத்திரிகையில் வெளியான செய்தியை படித்த பிறகு இதை எழுதுகிறேன்.

வணக்கம் ஜயா,
நீங்க பெரிய தொழில் அதிபர் என்டு எல்லாரும் சொல்றாங்க. நீங்க புஷ்க்கு வாழ்த்து தெரிவிச்சது நல்ல விஷயம். ஆனா அதுக்கு இவ்வளவு செலவு செய்திருக்றீங்ளே இது உங்களுக்கே கொஞ்சம் கேவலமா இல்ல? இன்டைக்கும் உங்கட நாடு வறுமைக்கோட்டின் கீழ் தான் ஜயா இருக்கு. நீங்க அத மறந்திருக்கலாம் ஆனா உங்கட நாட்டில உள்ள ஆயிரக்கணக்கில வறுமையில தவிக்கிற மக்கள் உங்கட கண்ணுக்கு தெரியாமல் போனது எனக்கு மன வேதனையா இருக்கு. புஷ் தேர்தல்ல வென்டா உங்கட நாட்டை பொருளாதார உச்சத்திற்கே கொண்டுபோகவாய்யா போறார்? உங்கட நாட்டுக்கு அமெரிக்கா நிதி உதவி செய்யலாம் அவங்க தாற அந்த பணம் உங்கட என்டு ஒரு தொழிலதிபரான உங்களுக்கு விளங்கவில்லையா? அவங்க உங்களுக்கு விற்கிற ஆயுதத்தின்ற லாபத்தில வாற ஒரு வீதத்தை அவங்க உங்களுக்கு நிதியா தாறாங்க. உங்கட இத்துப்போன மண்டைக்கு விளங்கிற மாதிரி சொல்லனும் என்டா, உங்கட பேர்சை அடிச்சு உங்களுக்கே நன்கொடை வழங்கிற மாதிரி.
நீங்க பண்ணின இந்த விளம்பரத்தின்ற செலவு, உங்கட நாட்டில வாழுற ஒரு சராசரி மனிதன்ற வருடாந்த வருமானத்தின் பத்து மடங்கு என்டு சொல்றாங்க. உங்கட நாட்டுக்கு இருக்கிற கடனை எப்படி அடைக்க போறம் என்டு உங்கட அரசாங்கம் மண்டைய போட்டு பிச்சுக்கொண்டிருக்கு. நீங்க என்னடா என்டா இன்னும் நடக்காத ஒரு விஷயத்துக்காக இவ்வளா செலவு பண்ணி இருக்றீங்களே. எவன்ற நாட்டுக்காக இவ்வளவு செலவு பண்ணுற நீங்க, ஏன் ஜயா உங்கட நாட்டுக்காக பண்றீங்க இல்லை? உங்கட நாடை விட உங்களுக்கு புஷ் முக்கியமா போய்டாரா?
உங்கள மாத்த முடியா என்டு எனக்கு நல்லா தெரியும். ஆனா இனி உங்கள மாதரி ஆக்கள் உருவாகக்கூடாது என்டு ஆசைப்படுறேன் ஜயா!
புஷ் ஆட்சிக்கு வந்த உங்களுக்கும், உங்கட நாட்டு பொருளாதாரத்துக்கும் என்ன பண்ண போறார் என்டு பொறுத்திருந்து தான் பாக்கனும்.
ஒரு வேளை புஷ் ஆட்சிக்கு வந்தா, அவர் ஆட்சிக்கு வாறதுக்கு நிங்க விளம்பரம் பண்ணி பணத்தை உங்கட நாட்டுக்கு நிதியா கூட வழங்கினாலும் வழங்குவார்.
உங்ட நாட்ட சேர்ந்த ஓராள ஈராக்கில கடத்தி வச்சிருக்கிறதா கேள்விப்பட்டேன். அவங்களை விடுதலை பண்ணச்சொல்லி ஈராக் பத்திரிகைகள்ள கொஞ்சம் விளம்பரம் பண்ணுவீங்களாய்யா?
Reply


Messages In This Thread
Bushku valthukal - by thaiman.ch - 11-17-2004, 11:44 AM
[No subject] - by swissgirl - 11-17-2004, 01:55 PM
[No subject] - by கறுணா - 11-17-2004, 02:41 PM
[No subject] - by aswini2005 - 11-17-2004, 04:02 PM
[No subject] - by S.Malaravan - 11-17-2004, 10:14 PM
[No subject] - by MEERA - 11-17-2004, 10:40 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)