11-17-2004, 05:19 AM
Sriramanan Wrote:நந்தா Wrote:அப்பு நிதர்சன் ஏனடிராசன் தேனீயும் , நுளம்பும் , குழவியும் தந்தா செய்தி நிதர்சனம் தந்தா அது பொய்யேடா கண்ணா ?இங்கை யாரும் தேனிக்கு வக்காளத்தும் வாங்கவில்லை. அதைப் பற்றி யாரும் மூச்சும் விடவில்லை. நிதர்சனம் இணையத்தினர் விடும் சில தவறுகளைத்தான் இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் வன்முறைகள் குறைந்து கொண்டு செல்கையில் நிதர்சனம் வன்முறைகள் அதிகரிப்பதாக உண்மைக்குப் புறம்பாக செய்தி வெளியிட்டால் அதைப் பற்றி அறிந்தவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவிக்கிறதிலை தவறில்லை. இந்தச் செய்தியை குளவியோ அல்லது நுளம்மோ அல்லது ப(நெ)ருப்போ அல்லது மீன் கத்தும் இணையங்களோ வெளியிட்டால் அதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஏனென்டா அவை எமது தேசியத்திற்கு எதிரானவை. ஆனால் விடுதலைப் புலிகளின் நிறுவனமான நிதர்சன நிறுவனத்தின் பெயரைப் பாவித்து உண்மைக்குப் புறம்பான அல்லது கீழ்த்தரமான செய்திகளை நிதர்சனம் வெளியிடுவதே எங்களிற்கு விசனத்தை உண்டாக்குகிறது.
சரியாச் சொன்னியள் ரமணன். இதைத்தான் நானும் முன்பு ஒருவருக்கு சுட்டிக்காட்டினேன். :roll:

