Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிறீலங்காவின் பாராளுமன்ற அரசியல்
#29
<b>இடைக்கால நிர்வாக அலகின்கீழ் பேச்சு நடாத்த ஜனாதிபதியோ ஜே.வி.பி.யோ தயாரில்லை:</b> <i>விமல் வீரவன்ச </i>

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே உடன்பாடு இல்லை என்று விடுதலைப் புலிகளினால் தெரிவிக்கப்பட்டுவருவது ஏற்கக் கூடியது அல்ல என்றும் சகல கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன என்றும் இன்றிரவு சுயாதீனத் தொலைக்காட்சியில் சந்திரிகா உரையாற்றியுள்ள அதேவேளை, அவரது கட்சியில் அங்கம் வகிக்கும் ஜே.வி.பி., லண்டனில் இதற்கு எதிர்மாறான கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தானும் தனது கூட்டணியிலுள்ள அனைத்துக் கட்சிகளும் தயாராகவுள்ளன.

தமதுஅரசாங்கத்துக்குள் ஒரே வகையான இணக்கப்பாடு சமாதான பேச்சுவார்த்தை தொடர்பில் இல்லை என தமிழீழ விடுதலைப்புலிகள் தெரிவிக்கும் குற்றச்சாட்டை மறுத்தார். ஜே.வி.பி.யும் இந்த இனப்பிரச்சினை பேச்சுவார்த்தையின் மூலம் தீhக்கப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், ஜனாதிபதி விரும்பினால் தன்னாட்சி அதிகார சபை தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுநடத்தலாம் என அந்தக் கட்சி இன்று தெரிவித்திருப்பதாகவும் குறி;ப்பிட்டார்.

எனவே தமிழீழ விடுதலைப் புலிகள் சமாதான பேச்சுவார்த்தை தொடர்பாக தமது இறுதி நிலைப்பாட்டை இம் மாதத்திற்குள் அறிவிக்க வேண்டும் என சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கூறினார்.

எனினும் ஜனாதிபதி சந்திரிகா கூறியதற்கு முற்றிலும் எதிர்மாறாக, லண்டனில் தற்போது தங்கியிருந்து சிங்கள தேசியப் பற்றாளர் அமைப்பினருடன் இணைந்து, சமாதான முன்னெடுப்புக்களுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்துவரும் ஜே.வி.பி. உறுப்பினர்களில் ஒருவரான பிரச்சாரச் செயலர் விமல் வீரவன்ச கருத்துக் கூறியுள்ளார்.

அங்கு உரையாற்றிய விமல் வீரவன்ச:

பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஜே.வி.பி.யே தடையாக உள்ளது என்ற பிரச்சாரம் பொய்யானது. உண்மையில் ஜனாதிபதி சந்திரிகாவிற்கு, இடைக்காலத் தன்னாட்சி அதிகார அலகின் கீழ் பேச்சுக்களை ஆரம்பிக்க எந்தவொரு எண்ணமும் விருப்பமும் இல்லை. Idea

அப்படி சந்திரிகாவுக்கு விருப்பம் இருந்திருந்தால், நோர்வே வெளிநாட்டமைச்சர் எந்தவித உடன்பாட்டையும் எட்டாது வெறுங்கையோடு திரும்பியிருக்க மாட்டார். Idea

ஆகவே, ஜே.வி.பி. மட்டுமல்ல, ஜனாதிபதி சந்திரிகாவிற்கும் பேச்சு வார்த்தைகளை ஆரம்பிப்பதில் உடன்பாடு இல்லை என்று தெளிவாக உரைநிகழ்த்தியுள்ளார். Idea

பி.பி.சி.யின் ஆங்கில சேவைக்கு விமல் வீரவன்ச வழங்கிய செவ்வியின் ஆங்கில வடிவத்தை, தற்போதைய சூழ்நிலை கருதி, கீழே ஆங்கிலத்தில் தருகிறோம்:

JVP's media secretary and parliamentarian Wimal Weervansa told BBC Sandehasya that the president does not have to worry about JVP's objections on ISGA.

"It is the media that selectively reports saying that the president is in favour of having talks based on the ISGA proposals," said Weeravansa.

Wimal Weeravansa along with Elle Gunawansa thero are in London as a part of the European propaganda campaign by the Patriotic National Movement (PNM).

<i>If the president is in favour of having talks based on the ISGA proposals, why did Jan Peterson have to go empty handed?"</i> queried Weeravansa.

Norway Foreign Minister Jan Petersen was in Sri Lanka meeting President Chandrika Bandaranaike Kumaratunge and Tamil Tiger leader Velupillai Prabhakaran in an attempt to revive stalled peace talks.

The position of several parties including the JVP is that any Interim Self Government that excludes a permanent solution to the national question, should not be considered as the basis for peace talks," Said Weeravansa.

நன்றி புதினம்

==========================
இதுக்கு அம்மணி என்ன சாகசம் காட்டப்போறாவோ?....மறுபடியும் பல்டியா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
Reply


Messages In This Thread
[No subject] - by Kanani - 06-09-2004, 12:52 PM
[No subject] - by kuruvikal - 06-09-2004, 01:39 PM
[No subject] - by Kanani - 06-23-2004, 01:16 PM
[No subject] - by vallai - 06-24-2004, 03:12 PM
[No subject] - by tamilini - 06-24-2004, 08:39 PM
[No subject] - by kuruvikal - 06-25-2004, 10:01 AM
[No subject] - by tamilini - 06-25-2004, 07:03 PM
[No subject] - by vallai - 06-27-2004, 06:18 AM
[No subject] - by tamilini - 06-28-2004, 04:42 PM
[No subject] - by vallai - 06-29-2004, 12:14 PM
[No subject] - by Kanani - 06-30-2004, 06:58 PM
[No subject] - by Kanani - 07-01-2004, 12:34 PM
[No subject] - by kuruvikal - 07-03-2004, 01:05 PM
[No subject] - by Kanani - 08-04-2004, 06:39 PM
[No subject] - by tamilini - 08-04-2004, 06:47 PM
[No subject] - by Kanani - 08-04-2004, 06:58 PM
[No subject] - by vasisutha - 08-04-2004, 07:37 PM
[No subject] - by tamilini - 08-04-2004, 08:13 PM
[No subject] - by Kanani - 10-06-2004, 01:34 PM
[No subject] - by Kanani - 10-08-2004, 03:21 PM
[No subject] - by tamilini - 10-08-2004, 03:45 PM
[No subject] - by tholar - 10-09-2004, 02:24 PM
[No subject] - by Kanani - 11-05-2004, 02:07 PM
[No subject] - by Kanani - 11-10-2004, 01:16 PM
[No subject] - by Kanani - 11-15-2004, 02:59 PM
[No subject] - by kuruvikal - 11-15-2004, 03:09 PM
[No subject] - by Kanani - 11-17-2004, 03:17 AM
[No subject] - by Kanani - 12-07-2004, 02:32 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)