11-15-2004, 03:14 PM
<b>இராணுவ வாகனம் மோதி புூசகர் பலி!
ஆத்திரமுற்ற மக்கள் வாகனத்துக்கு தீ வைப்பு!! </b>
யாழ்ப்பாணம் - வவுனியா வீதி கொடிகாமத்தில் இன்று முற்பகல் இராணுவ வாகனம் மோதி இந்து ஆலய புூசகரொருவர் ஸ்தலத்தில் பலியானார். இச்சம்பவத்தினால் ஆத்திரம் கொண்ட பொது மக்களினால் இராணுவ வாகனங்கள் தீ வைக்கப்பட்டன.
பலியான புூசகர் கல்வியங்காட்டைச் சேர்ந்த வரதராஜப்பெருமாள் ஹரிகரசர்மா வயது 24 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் மோட்டார் சைக்கிளில் இவ்வீதியில் சென்று கொண்டிருந்த சமயம் எதிரே வந்த இராணுவ பவுசர் வண்டி இவர்மீது மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ வாகனத்துக்கு முன்னால் சென்ற வாகனமொன்றை வேகமாக முன்னேற முயன்ற சமயம் இவ்விபத்து இடம்பெற்றது.
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/11/kodikamam_incident_01_31460_200.JPG' border='0' alt='user posted image'>
இச்சம்பவத்தையடுத்து அவ்விடத்தில் கூடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆத்திரமடைந்து இராணுவ பவுசர் வண்டியை தீ வைத்த போதிலும், அதிலிருந்த தண்ணீர் திறந்து விடப்பட்டதையடுத்து தீ அணைக்கப்பட்டது.
இதனைத் தவிர அவ்விடத்திற்கு விசாரனை நிமித்தம் வந்த இராணுவ பொலிசாருக்குரிய இரண்டு மோட்டார் சைக்கிள்களும் தீ வைக்கப்பட்ட போதிலும், அதுவும் பரவாமல் இராணுவத்தினரால் அணைக்கப்பட்டு விட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/11/kodikamam_incident_04_31472_435.JPG' border='0' alt='user posted image'>
இச்சம்பவங்கள் தொடர்பாக எமது செய்தியாளர் அனுப்பி வைத்துள்ள தகவல்கள் வருமாறு:-
குறிப்பிட்ட விபத்து இடம்பெற்றவுடன் அவ்விடத்தில் கூடிய பொதுமக்கள் இராணுவத்தினருக்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/11/kodikamam_incident_03_31468_435.JPG' border='0' alt='user posted image'>
இதனையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த மேலதிக இராணுவத்தினரும் கலகம் அடக்கும் பொலிசாரும் பொதுமக்கள் மீது கண்ணீர்ப்புகை, மற்றும் தடியடிப் பிரயோகம் செய்ததோடு ஆகாய வேட்டுக்களையும் தீர்த்தனர். இதனால் நிலமை மோசமடைந்து இவ்வீதி வழியாக ஒரு மணிநேரம் போக்குவரத்து சேவைகளும் தடைப்பட்டிருந்தன.
இவ்விடயம் அறிந்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் என்.ரவிராஜ், எஸ்.கஜேந்திரகுமார் ஆகியோர், சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுடன் உரையாடி நிலைமையை கட்டுப்படுத்தினர்.
இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு, தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு பிரதிநிதிகளும் அங்கு வருகை தந்திருந்தனர்;.
மரண விசாரனைக்காக சாவகச்சேரி பதில் நீதிபதி எஸ்.கந்தசாமி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார்.
செய்திகள் சேகரிக்கச் சென்ற இரு ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 10 பேர் வரை பொலிசாராலும் இராணுவத்தினராலும் தாக்கப்பட்டுள்ளார்கள். இதனைத் தவிர 5இற்கும் மேற்பட்ட பொலிசாரும் இராணுவத்தினரும் பொதுமக்களின் கல்வீச்சில் காயமடைந்துள்ளார்கள்.
குறிப்பிட்ட சம்பவங்கள் தொடர்பாக 3 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த போதிலும், பாராளுமன்ற உறுப்பினர் என்.ரவிராஜின் தலையீட்டையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
இராணுவ வாகன விபத்தில் பலியான வரதராஜப் பெருமாள ஹரிகர சர்மாவின் புூதவுடலை நீதிபதி வரமுன்பு இராணுவத்தினரும் பொலிசாரும் அப்புறப்படுத்த முற்பட்டதால் தான் மக்கள் ஆத்திரமுற்றதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.ரவிராஜ் தெரிவித்துள்ளார்.
கொடிகாமம் சம்பவம் குறித்து நேரில் பார்வையிடுவதற்காக சக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் சகிதம் அந்த இடத்திற்குச் சென்று திரும்பிய அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது,
சம்பவம் இடம்பெற்ற இடத்தை நீதிபதி வந்து பார்வையிடும் வரை அகற்றக் கூடாது என பொது மக்கள் உறுதியுடன் இருந்தார்கள்.
இதனால் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக இராணுவமும் பொலிசாரும் பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டார்கள். இதன் காரணமாகவே பொதுமக்கள் அவர்கள் மீது கற்களை வீசத் தொடங்கினார்கள்.
சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நாங்கள் சென்று நிலைமையை கட்டுப்படுத்தாமல் விட்டிருந்தால் நிலமை மோசமடைந்து இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் உயிரிழப்புக்களை சந்திக்க நேரிட்டிருக்கும்.
இராணுவம் மற்றும் பொலிசாரின் தாக்குதலில் 20 பொதுமக்கள் வரை காயமடைந்துள்ளார்கள். இதனைத் தவிர வன்முறைகளின் போது போர் நிறுத்தக் கண்கானிப்புக் குழுவினதும் எனது வாகனத்தினதும் முன்பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளது என்றார்.
இது ஒருபுறமிருக்க விபத்துடன் தொடர்புடைய இராணுவ வாகன சாரதி கொடிகாமம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இப் பிரதேசத்தில் நிலமை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.
நன்றி தமிழ்நெற் புதினம்