11-15-2004, 02:32 PM
Sriramanan Wrote:Kuruvikal Wrote:சில பல்கலைக்கழக இணையத்தளங்களப் பார்த்தா அன் ஒவீசியலா பல தளங்கள் பல்கலைக்கழகங்களின் பெயரில் அரைகுறைத் தமிழ் தெரிந்த... ஆங்கிலப் புலமைவாதிகளால் ஏட்டிக்குப் போட்டியா நடத்தப்படுகிறது தெரிகிறது அதுதான்....???!குருவிகளே நீங்கள் இதை ஏன் எழுதினீர்கள் எண்டு எனக்குப் புரியவில்லை. இந்தாலும் அரைகுறைத் தமிழ் தெரிந்த ஆங்கில புலமைவாதிகள் எண்டு வருந்தும் நீங்கள் தயவு செய்து "அன் ஒவீசில்" போன்ற வற்றைத் தவிர்த்தால் நன்றாக இருக்கும்.
பிறகு சொல்லாதேங்க ஆங்கில மொழி ஆதிக்கத்துக்கு கீழேயும் மாணவர்கள் தமிழ் தெரிந்திருக்கிறார்களே என்று பெருமைப்படச் சொல்லி... தாயகத்தில் பல தமிழ் மாணவர்கள் சிங்கள மொழி ஆதிக்கத்தின் கீழ் தமிழும் ஆங்கிலமும் தெரிந்துதான் இருக்கின்றனர் என்பதையும் கவனியுங்கள்....!
உண்மையில் குருவிகள் ஆங்கிலச் சொல்லை தமிழில் தருவது தகவலுக்கு ஒரு கவனயீர்ப்பை அல்லது கட்டாய தேவை அல்லது சாதாரண எங்கள் பேச்சு நடையை பிரதிபலிக்கச் செய்வதற்காகவே அன்றி வேறிற்கில்லை...!
எங்களுக்குக் கவலை அளித்த விடயம்... பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் அமைப்புக்கள்.... என்ற வகையில் உருவாகும் செயற்பாடுகள் தமிழ் மொழிப் பாவனையை முற்றாகத் தவிர்ப்பதுதான்.... இப்போ தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்களில் கல்விகற்கும் தமிழ் மாணவர்கள் ஒரு தமிழ் அமைப்பை உருவாக்க வேண்டின் கெஞ்சிக் கூத்தாட வேண்டும்... அப்படி அனுமதி கிடைத்துவிட்டால் அவர்கள் தாங்கள் கொண்ட இலக்கை தெளிவாக அடைய முனைவதைக் காணலாம்... சிங்கள மாணவர்கள் போன்று....ஆனால் கனடா பிரித்தானியா போன்ற இடங்களில் பெயருக்குத்தான் தமிழ் மாணவர்கள் அமைப்புக்கள் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் இயங்குகின்றனவே தவிர அவை ஒரு கல்விச் சமூகத்துக்கே உரித்தான முறையில் ஓர் இலக்கைத் தீர்மானித்து அடைய முற்படுகின்றனவா என்றால் இல்லை...ஏதோ தங்களை பிரபல்யப்படுத்தவும் சுய தம்பட்டம் அடிக்கவும்...டிஸ்கோவுக்கு நைற் அவுட்டுக்கு கெற்றுகெதருக்கு அழைப்பதும் சினிமா சார் நிகழ்ச்சிகளை நடத்தவும் என்றுதான் இயங்குகின்றனர்... இதற்கும் தமிழ் மாணவர்கள் என்ற உச்சரிப்புக்கும் என்ன தொடர்பு வேண்டி இருக்கிறதோ....???! அதைச் சுட்டிக்காட்டத்தான் கேட்டோம்...மாணவர்களும் பெரும்பாலும் இளைஞர்கள் தானே....!!! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

