Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"In the name of Tigers" -
#14
ஈ.பி.டி.பி.யில் குழப்பம் - டக்ளஸ் ஒத்துக் கொண்டார்

ஜ கொழும்பு நிருபர் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 14 நவம்பர் 2004, 20:05 ஈழம்

ஈ.பி.டி.பி.யிலிருந்து முக்கியஸ்தர்கள் சிலர் வெளியேறி வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்கள் என்பதை டக்ளஸ் தேவானந்தா இன்று மறைமுகமாக எற்றுக் கொண்டுள்ளார்.

இந்த வெளியேற்றம் குறித்து இங்குள்ள ஊடகமொன்றிற்கு இன்று அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜெகன், நிசாந்தன், பாஸ்கரன் ஆகியோர் விடுமுறையில் வைத்திய தேவைக்காக போயுள்ளார்கள். அவர்கள் விரும்பினால் விலகலாம் அல்லது சேரலாம் இது அவர்களுக்கு மட்டுமல்ல பொதுவாக ஈ.பி.டி.பி. நிலைப்பாடு எனத் தெரிவித்துள்ளார்.

இவர்களில் ஜெகன் எனப்படும் கே.வி.குகேந்திரன் யாழ் மாவட்ட ஈ.பி.டி.பி அமைப்பாளர் என்பதும், ஜி.பாஸ்கரன் அற்புதன் படுகொலையின் பின்பு தினமுரசு ஆசிரியராகப் பணியாற்றியவர் என்பதும், நிசாந்தன் எனப்படும் எஸ்.மணிபல்லவராஜா, முன்னாள் நல்லூர் பிரதேச சபை தலைவர் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.

இவர்களைத் தவிர டக்ளஸிற்கு ஒரு காலகட்டத்தில் மிக நெருக்கமானவராக இருந்த மதனராஐh உள்ளிட்ட வேறு பலர் கருத்து முரன்பாடுகளால் ஏற்கனவே ஒதுங்கியிருப்பதாகவும் அவர்கள் கூட விரைவில் நாட்டை விட்டு வெளியேறலாம் என்றும் நம்பகமாகத் தெரியவருகிறது.

மதன், nஐகன், பாஸ்கரன் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களாக கடந்த காலத்தில் இருந்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு நிலையில் டக்ளஸின் வேறு சில செயற்பாடுகள் ஈ.பி.டி.பி.யின் உறுப்பினர்களால் தற்போது காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஈ.பி.டி.பி.யின் கொழும்பு அலுவலகத்தில் முக்கிய விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

ஈ.பி.டி.பி.யிலுள்ள பெண்மணியொருவருக்கு பல கோடி பெறுமதியான வீடு ஒன்றைக் கொழும்பில் வாங்கிக் கொடுத்தமை மற்றும் தனது தனிப்பட்ட நெருங்கிய தோழிக்கு கொழும்பில் இரண்டு வீடுகளை வாங்கிக் கொடுத்தமை ஆகியனவே ஈ.பி.டி.பி.யின் முக்கிய செயற்பாட்டாளர்களால் ஏனைய உறுப்பினர்களுக்குத் விபரமாகத் தெரியப் படுத்தப்பட்டுள்ளது.

டக்ளஸ் தனது தோழர்களிற்காக பிரமச்சாரியத்தைக் கடைப்பிடித்து தன்னை முழுமையாக அர்ப்பணிப்பதாகக் கூறிக் கொண்டு தனது தனிப்பட்ட ஆசைகளையே நிறைவேற்றி வருவதாலேயே அவர் பல தவறான முடிவுகளை எடுத்து வருவதாகவும், ஏனையவர்களின் நலன்கள் குறித்து எள்ளளவு அக்கறையும் செலுத்துவதில்லையெனவும் தெரிவித்த ஈ.பி.டி.பி.க்கு நெருக்கமான வட்டாரங்கள்,

தமிழர்களைப் பிளவுபடுத்தப் பிரதேசவாதத்தை தூண்டிய கருணாவை டக்ளஸ் இன்று நாடுவது புதிராக உள்ளது என்றும், டக்ளசும் பிரதேசவாதத்தை ஏற்றுக் கொண்டுள்ளார் என்றே தாம் கருதுவதாகவும், இவற்றை நேரடியாகக் கேட்பதற்கு ஏற்கனவே இடம்பெற்ற கொலைகள் இடம்தரவில்லை எனவும், இதன் காரணமாகவே தாங்கள் பலர் விலகிச் செல்லும் முடிவுகளை எடுத்துவருவதாகவும் மேலும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


நன்றி புதினம்
"
"
Reply


Messages In This Thread
"In the name of Tigers" - - by cannon - 09-21-2004, 02:21 PM
[No subject] - by cannon - 09-22-2004, 01:34 PM
[No subject] - by Nellaiyan - 09-22-2004, 07:28 PM
[No subject] - by raahul - 09-22-2004, 07:45 PM
[No subject] - by ganesh - 09-22-2004, 08:38 PM
[No subject] - by ganesh - 09-22-2004, 08:40 PM
[No subject] - by cannon - 09-22-2004, 10:33 PM
[No subject] - by ganesh - 09-22-2004, 11:16 PM
[No subject] - by Nellaiyan - 09-24-2004, 07:52 PM
[No subject] - by Nellaiyan - 09-24-2004, 08:09 PM
[No subject] - by கறுணா - 11-02-2004, 11:07 PM
[No subject] - by cannon - 11-02-2004, 11:41 PM
[No subject] - by Sriramanan - 11-04-2004, 01:42 AM
[No subject] - by Nellaiyan - 11-14-2004, 08:16 PM
[No subject] - by MEERA - 11-14-2004, 08:23 PM
[No subject] - by cannon - 11-14-2004, 08:45 PM
[No subject] - by cannon - 11-14-2004, 11:03 PM
[No subject] - by கறுணா - 11-15-2004, 04:37 PM
[No subject] - by Suji - 11-15-2004, 08:23 PM
[No subject] - by cannon - 11-18-2004, 09:49 PM
[No subject] - by கறுணா - 11-22-2004, 10:05 PM
[No subject] - by MEERA - 11-22-2004, 10:47 PM
[No subject] - by Jaya - 11-23-2004, 11:37 AM
[No subject] - by Bond007 - 11-23-2004, 01:40 PM
[No subject] - by sinnappu - 11-23-2004, 05:56 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)