Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பூக்கள் திரைப்படத்தின் பாடல்கள் அறிமுக விழா !
#1
பூக்கள் திரைப்படத்தின் பாடல்கள் அறிமுக விழா !

http://www.tamilnet.dk/tamilan/html/module...rticle&sid=1029

புகைப்படங்கள்

<img src='http://www.tamilnet.dk/news/dk/pookkal-cd.jpg' border='0' alt='user posted image'>

அலைகள் மூவீஸ் தயாரிக்கும், முத்துமாரி அம்மன் கிரியேசன்ஸ் வழங்கும் பூக்கள் திரைப்படத்தின் இனிய பாடல்களின் வெளியீட்டு விழா நேற்று ஞாயிறு மாலை 16.00 மணிக்கு டென்மார்க் கேர்னிங் நகரில் உள்ள லின்ட் பாடசாலையில் வெனு விமரிசையக ஆரம்பித்தது. கடவுள் வணக்கம், அமைதி வணக்கம் ஆகியவற்றோடு ஆரம்பித்த நிகழ்வு அரங்கு நிறைந்த மக்கள் திரளோடு நடந்தேறியது.

விழாவில் பூக்கள் திரைப்படத்திற்காக இசையமைக்கப்பட்ட பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு ( சிடி ) வெளியியிடப்பட்டது. இந்த இசைத்தட்டை இங்கிலாந்தில் பிரபலமாக உள்ள ஐங்கரன் நிறுவனத்தினர் வெளியீடு செய்துள்ளனர். முதல்தடவையாக தமிழக சினிமா பாடல்கள் அடங்கிய இசைத்தட்டுடன் இலங்கைத் திரைப்படத்திற்கு முன்னுரிமை வழங்கி இக்காரியத்தை ஐங்கரன் நிறுவனம் செய்திருந்தது. ஐங்கரன் அதிபர் திரு. கருணாமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

பூக்களின் திரைப்படக் காட்சிகள் அரங்கில் சிறு பொழுது காண்பிக்கப்பட்டு பெரும் பாராட்டு பெற்றது. அதேவேளை இசைத்தட்டின் பாடல்கள் பாடகர்கள் மேடைக்குவர இசைக்க விடப்பட்டது குறிப்பிடக்கூடிய ஒன்றாக இருந்தது. சுரத்தட்டை வாசிக்க பழக்கிய நோர்வே சுந்தரமூர்த்தி மாஸ்டர், சங்கீதம் கற்பித்த குமுதினி பிரித்திவிராஜ் ஆகியேரையும், பாடிய பாடகர்கள், ஒத்துழைப்பு வழங்கிய கலைஞர்கள் அனைவரையும் வசந்த் வாழ்த்தினார்.



விழாவை முரளிசர்மா ஓம் நமச்சிவாய என்னும் நாமம் எழுப்பி ஆரம்பித்து ஆடற் கலைஞனான நடராஜப் பெருமானை அரங்கிற்குள் ஒளிபாய்ச்ச வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அமைதி வணக்கத்தைத் தொடர்ந்து பூக்கள் திரைப்படத்தின் நடிகர் சுகேந்திரா வரவேற்புரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து திரைப்பட நடிகர்கள் அனைவரும் அரங்கில் தோன்றினார்கள். அத்தருணம் திரைப்பட இயக்குநர் கி.செ.துரை இந்த இசைத்தட்டு வெளியீட்டுக்கு காரணமான அனைவருக்கும் நன்றி கூறினார்.

மேற்படி இசைத்தட்டை சங்கீத, வயலின் ஆசிரியை இசைக்கலைமணி திருமதி குமுதா பிரிதிவிராஜன் அவர்கள் வெளியிட்டு உரையாற்றினார். இசைத்தட்டில் உள்ள பாடல்கள் அனைத்தையும் தான் கேட்டதாகக் குறிப்பிட்டு, இசையமைப்பாளர் கே.எஸ்.வஸந்தின் முயற்சிகளை பெரிதும் பாராட்டினார். ஒவ்வொரு பாடலையும் மிகுந்த கவனமெடுத்து தயாரித்துள்ளார். பாடிய அத்தனை பாடகர்களும் மிகவும் அருமையாகப் பாடியுள்ளனர் என்று கூறி பூக்கள் திரைப்படம் வெற்றிபெறும் என்று வாழ்த்தினார். இந்த இசைத்தட்டின் முதல் பிரதியை திரு. சு. சுப்பிரமணியம் எடுத்து வழங்க திருமதி. அகிம்சா டக்ளஸ் எழில்வளவன் பெற்றுக் கொண்டு தனது வாழ்த்துரையைத் தெரிவித்தார். அடுத்த பிரதியை திருமதி சாந்தினி உதயச்சந்திரன் பெற்றுக் கொண்டார்.

<img src='http://www.tamilnet.dk/news/dk/pookkal-cd1.jpg' border='0' alt='user posted image'>

அடுத்து சிறப்பு விருந்தினர் தபேலாக் கலைஞர் திரு. சௌந்தரராகவன் உரையாற்றினார். அத்தருணம் அவர் கூறும்போது பாடல்களுக்கு இசையமக்கும்போது இரண்டு பெரிய விடயங்களை கவனிக்க வேண்டும் என்றார். சாதாரணமாக ஒரு இசை ஆல்பம் வெளியிடும்போது இசையமைப்பாளருக்கும் கவிஞர்களுக்கும் சுதந்திரமாக நடமாட ஒரு வெளியிருக்கும். ஆனால் சினிமாவுக்கு இசையமைப்பது என்றார் கதைக்கும் காட்சிக்கும் ஏற்ப இசையமைக்க வேண்டும். அது மிகவும் கடினமான காரியம், இந்தப்படத்தில் அந்தப்பணியை அனைவரும் சிறப்போடு செய்துள்ளனர் என்றார். அவருக்கான சிறப்புப் பரிசை வழங்கிய திரு. தே. உதயச்சந்திரன் சிறிய உரையொன்றையும் வழங்கினார்.

அன்றைய தினம் லின்ட் பாடசாலை அரங்கு முழுவதுமே பெரும்பாலும் இசைத்துறை, நாடகத்துறை, படைப்பிலக்கியம் சார்ந்த பெருந்தொகையான கலைஞர்கள் பங்கேற்று கருத்துரைகளை வழங்கினார்கள். புகைப்பட, சங்கீதக் கலைஞர் முரளி பேசும்போது ஈழத் தமிழரின் வர்த்தக சினிமா இதோ பிறந்துவிட்டது என்று பாராட்டினார். பூக்கள் திரைப்படத்தின் காட்சிகளின் துண்டுகளை பார்த்த பின்னர் உண்மையிலேயே புதிய நம்பிக்கை பிறந்துவிட்டது என்று பாராட்டிய அவர், அத்தோடு நம்மாலும் முடியும் என்று காட்டுவதற்கான கலைஞர்களை நான் இப்போது இந்த மேடையில் அடையாளம் காண்கிறேன் என்றார்.



கலைஞர் சண் பேசும்போது ஈழத் தமிழர்களின் திரைப்படங்களுக்கு நமது மக்கள் ஆதரவு தந்தால் நாம் வெற்றிபெறுவது கடினமான காரியமல்ல என்றும் கூறிய அவர், நீண்ட உரையொன்றை வழங்கினார். சினிமாவை ஏன் எடுக்கிறார்கள், இவர்களுக்கு வேலையில்லையா என்று சிலர் கேட்கிறார்கள். இது தவறு, சினிமா மிகப்பெரிய ஊடகம், அதனால் பல நல்ல விடயங்களை சொல்ல வழியிருக்கிறது என்றும் கருத்துரைத்தார். அவருக்கான பரிசை திரு. பொன். சிவகுமார் வழங்கினார். அடுத்து உரையாற்றிய வயன் தமிழ் இலக்கியமன்றத் தலைவர் திரு. தர்மா அவர்கள் இப்படியான முயற்சிகளின் வழியாக நாம் சமுதாயத்திற்கு பெரிய பணிகளை ஆற்ற முடியும் என்றார்.

சங்கீதபூசணம் அளவையூர் திலகேஸ்வரன் கூறும்போது சினிமா படத்திற்கு பாடல்களை பாடி, நமது கலைஞர்களே மேடையில் தோன்றி அப்பாடல்கள் பற்றி பேசி அதற்கான இசைத்தட்டை வெளியிடுவது எவ்வளவு பெரிய விடயம். இதை நினைத்தாலே புதிய நம்பிக்கை பிறக்கிறது, தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாக வேண்டும், இன்றுபோல என்றும் மகிழ்வு பொங்க வேண்டும் என்றார். எல்லாக் கலைஞர்களும் இதுபோல சிறப்படையும் படி முயற்சிகளைத் தொடர வேண்டுமென வாழ்த்தினர். அவருக்கான பரிசை தொழில் அதிபர். திரு. சிவனேசகுமார் வழங்கினார். அடுத்து திறீ ஓ போய்சின் நடனம் இடம் பெற்றது.

தவில் வித்துவான் சங்கரதாஸ் இப்படத்தின் நடிகராகவும், இன்றைய நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக தன்னையும் அழைத்து சிறப்பித்தமைக்காக வாழ்த்துக்களைக் கூறினார். திரையில் படத்தின் ட்ரெயிலரைப் பார்த்து தான் அதிசயமடைந்ததாகக் கூறினார். அட நம்மாலும் இப்படிச் செய்ய இயலுமா என்பதை தான் இப்போது நம்பாமல் நம்புவதாகத் தெரிவித்தார்.

நடன ஆசிரியை திருமதி. சுமித்திரா சுகேந்திரா இயக்குநர் கி.செ.துரையின் பணி சிறப்படைய வேண்டுமென வாழ்த்தினார். பாடல்களைக் கேட்டபோது திரைப்படத்தின் சிறப்பு எப்படி அமையப் போகிறது என்பதை உணர முடிந்தது என்றார். எவ்வளவோ சிரமம்பட்டு இப்படியொரு காரியத்தை கண்விழித்து, ஓய்வு ஒழிச்சலின்றி செய்துள்ளார்கள் என்று வாழ்த்தினார்.

இந்த நிகழ்வில் திருமதி மாலா சத்தியமூர்த்தியின் மாணவியும், பத்மாசுப்பிரமணியத்திடம் பரதத்தைக் கற்று வந்துள்ளவருமான கிரு;ணபிரியா சத்தியமூர்த்தியவர்களின் இரு நடன உருப்படிகள் இடம் பெற்றன. நிகழ்வில் உரையாற்றிய திருமதி மாலா சத்தியமூர்த்தி வஸந்தின் திறமைகளை வாழ்த்தினார். அடக்கம், குரு பக்தி, கவனம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவற்றால் அவர் இவ்வாறு உயர்ந்து சாதனை படைக்கிறார் என்று போற்றினார்.

அடுத்து நடனஆசிரியை சசிதேவி சந்ரபாலனின் மாணவி சர்மிளி சந்திரபாலனின் நடனம் இடம் பெற்றது. இந்த நடன நிகழ்வை தயாரித்து வழங்கிய சசிதேவி அவர்கள் பூக்கள் திரைப்படத்திற்கான பிரதான பாடலுக்கு நாட்டிய அமைப்பை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் பூக்களின் பாடல்களை கேட்ட பின்னர் மிகவும் மகிழ்ந்ததாக தெரிவித்தார். விநாடி விநாடியாக பாடலைக் கேட்டதாகவும், அதை எப்படி உருவாக்கினார் என்று அதிசயமடைந்ததாகவும் கூறினார். அசிரியர் கி.செ.துரை எடுத்த முயற்சிகளில் எல்லாம் வெற்றிபெறுபவர், இம்முயற்சியிலும் வெற்றிபெறுவார் என்றும் வாழ்த்தினார்.

இசையமைப்பாளர் சோன் லுண்ட் அவர்கள் தமிழ் படத்தில் டேனிஸ்காரரான தனக்குக் கிடைத்த வாய்ப்பிற்காக தமிழ் மக்களுக்கு நன்றி கூறினார். இன்று டென்மார்க் லின்ட் நகரில் சாதனை படைத்த கலைஞர்கள் நாளை உலக அரங்கில் சாதனை படைப்பார்கள் என்று பொறிக்கப்பட்ட பரிசை இசையமைப்பாளர் வஸந்திற்கு வழங்கினார். இவருக்கான சிறப்பு இசைப்பரிசை திரு.வேலுப்பிள்ளை மனோகரன் அவர்கள் வாழ்த்திக் கௌரவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக பூக்கள் திரைப்படத்தின் காட்சிகளின் சில பகுதிகள் அவ்வப்போது காண்பிக்கப்பட்டது. பாடலைப்பாடிய குணலிங்கம், ஸ்ரலின்டோஸ், அர்ச்சனா, ஜனனி, லோகன், துசான், சாந்தினி, தன்யா ஆகிய கலைஞர்கள் தோன்றி தங்களுடைய அனுபவங்களை வெளியிட்டனர். திரு. குணலிங்கம் கூறும்போது இதுவரை ரி. எம். சௌந்தரராஜன் குரலில் பாடிவந்த நான் இந்தப்படத்தில் எனது சொந்தக் குரலில் பாட வேண்டுமென வஸந்த் வலியுறுத்தினார். ஒவ்வொரு பாடகரும் தனக்கே உரிய தனித்தன்மையுடன் பாட வேண்டும் என்று வலியுறுத்தினார். தாயயே ! தாயின் மண்ணே என்ற பாடல்தான் குணலிங்கம் என்ற பாடகனின் குரலைக் காட்டுகிறது என்றார். சிம்பொனி இசைக்குழு இயக்குநர் தேவன் தெரிவிக்கும்போது சாந்தினி பாடிய துன்பம் எல்லாமே என்ற பாடல் கருத்தம்மா படத்தில் வரும் போறாளே என்ற பாடலை விஞ்சி நிற்கிறது என்றார். ஜனனி, லோகன், துசான் போன்றவர்கள் நமது திரைக்குக் கிடைத்த சிறந்த வரவுகள் என்று பல கலைஞர்களும் பாராட்டினார்கள்.

வயன்கந்தசாமி அவர்கள் உருக்கமான உரையை வழங்கினார், நேரப்பற்றாக்குறை காரணமாக செந்தில்குமரன் சுருக்கமாக தனது வாழ்த்துக்களைக் கூறினார். திரு. செல்வக்கதிரமலை,திரு. தனபால், நடிகர்கள் ராஜராஜன், ரவி, சிறிகாந்த், வள்ளுவன், சிந்துராஜ், மனோகரன், ராணி மனோகரன், திருமதி. பொன்னண்ணா, கண்ணன், டிலா சச்சிதானந்தம், பத்மா ஜெயராஜ், சு.சிறீராஜன், செ. அர்ச்சனா ஆகியோர் கருத்துரைகள் வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பூக்கள் திரப்பட நடிகர் நடிகவிநோதன் செ.யோகராஜா நடிப்பில் இருந்து ஓய்வுபெற விடாமலே தன்னைப் பிடித்து இத்திரைப்படத்தில் ஒரு பாத்திரத்தில் நடிக்க வைத்துவிட்டார்கள் என்று கூறி, பாடல்களுக்கும் வாய்ப்பிற்கும் நன்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய கவிஞர் பொன்னண்ணா இந்த விழாவிற்கு மட்டுமல்ல பூக்களின் நு}றாவது நாள் வெற்றிவிழாவிற்கும் நாம் இதுபோல எழுச்சியுடன் கூட வேண்டும் என்று போற்றினார். அத்தருணம் அவர் கமேரா எடிட்டிங் ஆகியவற்றில் பணியாற்றிய ரவிசங்கரையும் பாராட்டினார். நிறைவாக இசைப்பாடல்களுக்கு வரிகள் எழுதிய ஆசிரியர் கி.செ.தரையின் நன்றியுரை இடம் பெற்றது. உலகமெல்லாம் பரந்திருக்கும் ஈழத் தமிழன் பூக்களைப் போல உலகமெல்லாம் நிறைந்திருக்கிறான். பூக்களை அழிக்க முடியாது அதுபோல ஈழத்தமிழினத்தையும் அழிக்க முடியாது என்பதே இத்திரைப்படத்தின் கருத்து என்றார். இந்த நிகழ்ச்சியை திருவாளர்கள் ஜெயராஜ், ஜெயமுரளிசர்மா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். இசையமைப்பாளர் வசந்த் பாராட்டுக்கள் மட்டும் முக்கியமல்ல குறைகளையும் சுட்டிக் காட்டுங்கள் திருந்துவதற்குக் காத்திருக்கிறோம் என்று கூறி, தயவு செய்து பாடல்களை கணினியில் பிரதிபண்ணி நமது முயற்சிகளுக்கு சிரமம் தர வேண்டாம் என்று அன்போடும், தன்னடக்கத்துடனும் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சிகள் இனிது நிறைவடைந்தன. பூக்கள் திரைப்படத்தின் தாவிப்பறக்கும் மயிர் கூச்செறியும் காட்சிகள் மக்கள் மனதில் மணம்பரப்பி நின்றன.

புகைப்படங்கள்

விழா மண்டபத்திலிருந்து அலைகள் நிருபர் சாம். இருதயராஜ்
Reply


Messages In This Thread
பூக்கள் திரைப்படத்தின் பாடல்கள் அறிமுக விழா ! - by ravi_dk - 11-14-2004, 01:59 PM
[No subject] - by tamilini - 11-14-2004, 03:57 PM
[No subject] - by Sabesh - 11-14-2004, 08:40 PM
[No subject] - by tamilini - 11-14-2004, 09:55 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)