11-14-2004, 08:02 AM
ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய பாக்கிஸ்தான் அணி சோகிப் மலிக்கின் விக்கெட்டை இழந்தவுடன் மிகவும் ஒரு மோசமான ஆட்டத்தை ஆடத்தொடங்கியது. அதன் தலைவர் இன்சமாம் உல் கக்கும் யூசும் ஜொகானாவும் மிகவும் மோசமான ஆட்டத்தை ஆடி பாக்கிஸ்தான் ஆணியை மிகவும் இக்கட்டான ஒரு சூழ்நிலைக்கு இட்டுச் சென்றனர். இதில் இன்சமாமின் ஆட்டம் மிகவும் பொறுப்பற்றதனமாகவும் வீசப்படும் பந்துகளைத் தடுத்தாடுவதில் கூட அக்கறையீனத்தைக் காட்டிக் கொண்டிருந்தார். ஆனால் யூசும் யுகானாவின் ஆட்டமிழப்புடன் காயம் காரணமாக வெளியேறிய சல்மான் பட் மீண்டும் மைதானத்திற்கு வந்தவுடன் இன்சமாம் உல் கக் மிகவும் ஒரு சிறப்பான ஆட்டத்தை ஆடத் தொடங்கினார். ஆனால் சல்மான் பட் ஆரம்பத்திலிருந்தே மிகவும் அனுபவம் வாய்ந்த ஒரு வீரரைப் போல் பதட்டமேதுமில்லாமல் நிதானமாகவும் வேகமாகவும் ஓட்டங்களைக் குவித்தார். இவரின் சிறப்பான ஆட்டமே இன்றைய பாக்கிஸ்தான் அணியின் வெற்றிக்குக் காரணம்.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

