Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வீரரின் நினைவுகள் அழிவதில்லை....!
#1
<b>----------------------------------------------
[b]பூநகரித் தளம் மீதான தாக்குதல் வெற்றிவிழா இன்று</b>

பூநகரி கூட்டுப் படைத்தளம் மீது தழிழீழ விடுதலைப்புலிகளால் 1993ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஓப்பரேசன் தவளைத் தாக்குதலன் வெற்றி விழா நிகழ்வு இன்று பூநகரியில் நடைபெறவுள்ளது.

இவ் வெற்றிவிழா நிகழ்வின் போது பூநகரி தளம் தகர்ப்பில் வீரகாயமன 456 மாவீரர்களை நினைவுகூரும் அதேவேளை படைத்தலமையை திசை திருப்பும் முகமாக பலாலி பெருந்தளப் பகுதியில் நடத்தப்பட்ட கரும்புலித்தாக்குதலில் வீரகாவியமாகிய 15 கரும்புலிகளும் நினைவு கூரப்படுகின்றனர்.

தவளைத் தாக்குதலின் வெற்றி நிகழ்வு இன்று மாலை 4.00 மணிக்கு பூநகரி வாடியடியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் சிறப்புரைகள் கலைநிகழ்வுகள் எனப் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

puthinam.com
[b]---------------------------------------------

<img src='http://www.eelavision.com/gallery/5001-8443.jpg' border='0' alt='user posted image'>

கார்த்திகைத் திங்கள் 1993
ஆண்டிறிதிப் பரீட்சைக்காய்
விளக்கும் கையுமாய்
குந்தி இருக்க....
நள்ளிரவு தாண்டிக்
கிழக்குப் பக்கமாய்
பயங்கரக் குண்டுத்தாக்குதல்...
ஓடி வந்து உற்று நோக்கினால்
பூநகரிப் பக்கம் நாயடி விழுகுது
யாரடிப்பது....
இரவெண்டால் பொட்டியள் தான்
டேய்...
பங்கரக் கிளீன் பண்ணு
அங்க அடிக்க
அவன் இங்க ரவுணுக்க கொட்டுவான்....
அம்மாவுக்கு எப்ப பாரு பங்கர்தான்
பாவம் அவவுக்கு
பாசக் குஞ்சுகள் மீது அக்கறை
அங்கே பிரபாகரன் பிஞ்சுகள்
சகதிக்கால் விழுந்தடிச்சு
புலியாய் தவளையாய்
பாயுதுகள்....
அவைக்கார் பங்கர் தோண்டுவது
சிந்திக்கும் ஒரு மனம்
சில நொடியில் பயம் கவ்வ
அம்மா பக்கம் நியாயம் தேடிப்
பாய்ந்தோடிப் பதுங்கும்...!

மறுநாள் காலையும்
சண்டை தொடருது
செவிப்பறை கிழியுது
உதயன் பக்கம் சைக்கிளை மிதிக்க
பொறுங்கோ ஸ்பெசல் பேப்பர் வருமாம்...
அப்படியே ஒரு மிதி
ஈழநாதம் பக்கம்
நீண்ட கியூ...
அப்ப உதயனட்டையே வாங்குவம்
என்று திரும்ப
சீனாக்காரனின் F-7 சுப்பசொனிக்
உரசிப் பறக்குது
சைக்கிளப் போட்டிட்டு
கானுக்க விழுந்ததும்
காலால இரத்தம் வடிய
வீட்ட போய்
அம்மாவின்ர கை வைத்தியம்
பார்க்க....
மீண்டும் நினைவு..
எத்தனை சகோதரங்கள்
எத்தனை சகோதரிகள்
களத்தில் விழுந்தினமோ
எத்தினைக்குக் காயமோ
கண்கள் கலங்க....
நாங்கள் என்ன செய்யலாம்
இரத்தக் கொடுக்கலாம்
ம்ம்ம்...போனமுறை போக
நிறை காணாது எண்டு திருப்பி அனுப்பினவ...!
நினைவு கலையமுதலாய்
அம்மாவின் கையத்தட்டிப்போட்டு
எழும்பி ஓடி
பக்கத்தில இருந்த
அண்ணாமார் காம்ப் போய்....
அண்ண என்ன உதவி வேணும்
எங்களால முடிஞ்சத் செய்யுறம்....
தம்பி இப்ப நாங்கள் கொஞ்சம் பிசி
பிறகு வாங்கோ சொல்லுறம்....
அவையும் பதறித்தான் நிக்கினம்
மேலும் அவைய பதட்டப்படுத்தாம
சைக்கிளத் திருப்பி வீட்டுக்கு வந்தம்...!

கிட்டத்தட்ட 7 MI 8 கெலிகள்
வரிசையாப் போகுது
பூநகரிப்பக்கமாய்....
சிறீலங்காச் செய்தியைக் கேட்டால்
மெளனம்...பேச்சே இல்லை
பிறகு பின்னேரமாய்
உதயன் கிடைக்கத்தான்
செய்தி தெரிஞ்சுது....
பூநகரி சரியாம்
நாகதேவன் துறையும் சரியாம்
பொடியள் வோட்டர் ஜெட்டும் எடுத்திட்டாங்களாம்
சனம் வீதியெல்லாம்
கூடிக் கூடிக் கதைக்குது...!
எனக்கோ அதில இல்ல மனசு
அண்ணாமாருக்கு என்ன இழப்பு
இப்ப பொம்பர் வந்து அடிச்சா
அவையள் பாடு என்ன
கடவுளே அவைக்கு இழப்பைக் குறை
பத்திரமாய் அனுப்பி வை
இப்படியே என் நினைவு.....
பேப்பரும் கையுமாய்
வீட்டுக்கு வர
அண்ணா ஒருத்தர் கண்டு சொன்னார்
எங்க பக்கமும் சேதம் கொஞ்சம் கூடத்தான்
தம்பிமார்
கொஞ்சம் இளநீர் சேத்துத் தருவீங்களே....
ஓம் அண்ண இதுவும் செய்யாமல்
இந்த மண்ணில் நாங்கள் வாழ்வதா.....
உள்ள இடமெல்லாம் தேடி
பல குலை இளநீர் சில மணி நேரத்துக்க
அண்ணன் கையில் ஒப்படைக்க....
அவருக்கு சந்தோசம் கட்டித் தழுவி
ஆசுவாசப்படுத்தி அனுப்பினார்
அதன் பின்னாத்தான் பேப்பர் படிக்க
மனசு வந்திச்சு சங்கதி அறிய....!

அடுத்து வந்த நாட்கள்
கொஞ்சம் சோகம் தான்
சோக கீதங்கள் இசைக்க
எங்கள் சகோதரங்கள்
வித்தாகி விதைப்பட்ட
நிகழ்வுகள்...
மனசு கணத்தது
விடுதலைக்கு காணிக்கை
விலை அதிகம் தான்
வீர சுதந்திரம் வேண்ட
குருதிக்கு விடுதலை கொடுத்த
வேங்கைகள்
உயிரையும் அல்லவா
விடுவித்துத் துயில்கிறார்
அவர்கள் வீரக் கனவு
என்று நிறைவேறும்
அதற்காய் என்னால் இயன்றது செய்வேன்
சத்தியம் எடுத்தேன்
இன்றுவரை கடைப்பிடிக்கின்றேன்
என்று கடைப்பிடிப்பேன்
எங்கள் சகோதரங்கள் நினைவுகள்
மரணம் வரை என்னோடு வாழும்....!

<img src='http://www.eelavision.com/gallery/5001-8097.jpg' border='0' alt='user posted image'>

பூநகரித் தாக்குதலில் அழிக்கப்பட்ட இராணுவத் தாங்கி...நினைவுச் சின்னமாய்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
வீரரின் நினைவுகள் அழிவதில்லை....! - by kuruvikal - 11-13-2004, 12:33 PM
[No subject] - by tamilini - 11-13-2004, 01:17 PM
[No subject] - by Nada - 11-13-2004, 02:12 PM
[No subject] - by kavithan - 11-13-2004, 04:19 PM
[No subject] - by hari - 11-13-2004, 06:34 PM
[No subject] - by kuruvikal - 11-14-2004, 02:21 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)