Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இதயத்துள் ஒரு கோலம்...!
#14
என் இதயத்தின் மையெடுத்து
உன் பிறை நுதலில் திலகமிட்டு
உனக்காய் வாழ்வதாய் சத்தியம் செய்தேன்...!
(இது கூட்டணி காலத்து தேர்தல் யுக்தி...!)
இது உங்க காலப் பஞ்சாங்க யுக்தி... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

என் உயிர் நூல் இழைத்து
என்னை உன்னுடன் பின்னி வைத்து
ஓரங்கமானேன் ஓயாமல் உன்னோடிருக்க...!
(இது அர்த்தநாரீஸ்வரரின் பழைய யுக்தி..!)
இது எங்க அப்பா அம்மா காலப் பஞ்சாங்க யுக்தி..மங்கையின் ரசனை தெரியாதில்லா அதுதான் அங்கஇங்க இருந்து எடுத்துப் போட்டிருக்கு...காட்டிக் கொடுக்கிறீங்களே... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஒளியாய் என் பார்வை தந்து
ஒளிக்கும் நிலவாய் உன்னை வைத்தேன்
என்றும் நீ எனக்கு பெளர்ணமியாய் தோன்றிட....!
(இதில கண்ணிழந்தாச்சு.. அப்ப குருடன்..)
ஓரங்கமானப் பிறகு பார்வை ஒன்றுதானே...!கதை எழுதுற உங்களுக்கு இது தெரியாதா..ஓரங்க நாடகம் போல சரியா...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

காந்தல் மலரொடித்து கருவி செய்தேன்
உன் கரங்கள் பஞ்சணையாக்கி
என்னை அங்கே பதுக்கி வைக்க....!
(மலரை ஒடிச்சாச்சு.. மனிதாபிமானமில்லை..!)
மலராய் இருந்து மிதிபட்டது மங்கைக்குள் ஆனதும் மதிக்கப்படுகிறது.....இப்பதான் சரியான மனிதாபிமானம் காட்டப்படுகிறது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

கொவ்வையும் மாதுளையும் கண்டேன்
பொருத்தி ஒரு உருச்செய்து
உன் வதனமதில் ஒளித்து வைத்தேன்
சொல்லெனும் தேன் சொட்டும்
அட்சய பாத்திரமாக...!
(எதையெதை எப்படி பாவிக்கிறதென்றே தெரியேலை.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> )
தேன் குடித்துவிட்டு உடனே எறியும் பாத்திரமாய் அன்றி... செவியும் மனமும் மகிழும் தமிழ் தந்து இனிக்க வைப்பாள் என்பதற்காய் செய்த விசேட பாத்திரம்...(இல்ல... வெள்ளைக்காரிக்கு இங்கிலீசில Text அனுப்பத் தெரியாமலா இங்க மிணக்கடுறம்...எல்லாம் தமிழுக்காக...ஒரு தியாகம் தான்...!) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

மலையேறி முகில் பிடித்து
வாரியதை வளையப்பண்ணி நெடும் கூந்தலாக்கி
பெட்டகமாம் உன்னில் பொருத்தி வைத்தேன்
பொக்கிசமாக....!
(பேனோடை கொண்டந்தது மகாதப்பு..!)
பேன் வரக்கூடாது என்பதற்காய் தான் மலையேறிப் பிடித்தோம் முகில்...ஊருக்க பிடிச்சிருந்தா தொத்துப்பேன் தொத்திடுமில்லா...இப்ப கெயார் ஸ்பிறே எல்லாம் வாங்கிக் கொடுத்தா பேன் வராது....பொக்கிசமாய் வைக்கலாம்....ஆனா நெடுங்கூந்தல் வைக்கமாட்டினமாமே....ரைம் வேஸ்டாம்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

கடும் இருள் கவ்வ கருவியோடு ஏகி
ஆழிதனில் கண்டெடுத்தேன் கயல்தனை
மீன் தொட்டியாம் உன்னில் விட்டுவைக்க....!
(தொட்டீக்கை தண்ணி இருக்கான்னு பார்த்திருக்கணும்.. இதுவும் தப்புத்தான்.. பாவம் கயல்!)
உங்களுக்கு பார்வைக் கோளாறு...கொஞ்சத் தண்ணியா விட்டது... எல்லாத்தையும் கயல் உறிஞ்சி எடுத்து நல்லாத்தான் வாழுது...அடிக்கடி இழுத்த தண்ணி பாச்சுமே பார்த்ததில்லையோ.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆழ்கடல் முத்துக் குளித்தேன்
வலம்புரியோடு முத்துக் கண்டேன்
திருடியதை உன்னில் வைத்தேன் ஜொலித்துட...!
(திருடியதை வைக்க வேறு இடமா கிடைக்கலை.. உடனேயே எல்லாருக்கும் 'மெசேஜ்' பறந்திருக்கும்... ஒரு பொருளை பக்குவம் பண்ணத்தெரியாத ஆள்..)
சரியான இடத்தில்தான் வைச்சிருக்கு.... கை வைச்சிங்க தொலைஞ்சீங்க....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

தாஜ்மகாலில் கள்ளமாய் ஒரு பளிங்கெடுத்து
நயமான சிற்பியாய் நானிருந்து செய்திட்டேன்
ஓர் சோடி வளையல் என் பெயர் சொல்லி ஒலித்திட...!
(பவுணில செய்யாதது பெருங்குற்றம்..!)
பவுண் வேணாம்.. அது.. சவுண்ட் அலுத்துப் போச்சு.. இது இப்ப நம்ம ரகுமான் மியுசிக் மாதிரி இருக்கும்.... உல்டா பண்ண லேசில்லா..அடிக்கடி பெயர் மாத்துவாங்க இல்ல...அதுக்கு வசதியா...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நல்லூரான் வாசலில் யாசகம் செய்து
கந்தன் கருணை வாங்கி
பசும் வெள்ளி கொண்டு சலங்கை செய்தேன்
உன் பாதங்கள் பண்பாட....!
(பிள்ளையாரிடம் யாசகம் கேட்டாலாவது யானையாய் வந்து வெருட்டி கிருட்டி சாதிச்சிருப்பார்..!)
முருகனட்டத்தான் வெள்ளி மயில் இருக்கு....அது இரண்டு செட்டையக் கழட்டினாப் போதும்...சலங்கை செய்ய....! அதுபோக முருகன் லவ்ஸில கில்லாடி...வெறும் சலங்கை செய்தாப் போதுமா... சலங்கை பண்பாட லவ்ஸ் ஸோங் பல்லவி வேணாமோ...அதை (H)கிட்டானதா எடுக்க முருகனட்டத்தானே ஐடியாக் கேக்கோணும்....நீங்க உருப்பட மாட்டியள்...பழைய பல்லவியில நிக்கிறியள்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இறுதியில் தவமிருந்து அருள் பெற்று
இம்மலரை தருவித்து
அழகாய் நீ கொண்ட மேகத்தில் இட்டுவைத்தேன்
அதுபோல் வாடா மலராய் நீ இருக்க....!
இத்தனையும் யான் செய்ய நீயோ....
இது பழைய பஞ்சாங்கம்
"பாரா முகமாம்" என்று பழித்துவிட்டு
பரிதவிக்க விட்டியேடி பாவி....!
(இதில யார் பாவி என்றே புரியேலைங்க..)
புரியுறவைக்குப் புரிஞ்சிருக்கும்.... உங்களுக்குப் புரியல்லையா..அப்ப அது உங்களுக்கில்ல...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

உனக்காய் நான் புரட்டிய
பழைய பஞ்சாங்கங்கள் நீ அறிவாயோ
(புரட்டி என்ன பயன்.. அதில பொருத்தமெல்லோ பாத்திருக்கணும்?! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )
பொருத்தம் பாத்தது பிழையா... அப்ப சரியாச் சொல்லுங்க... நீங்க தானே அதில சர்வகலா வித்தகர்... இணைய வழி சேவையாமே...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அது ஏன் உனக்கு...??!
இருந்தும்...
என்றும் உனக்காய் காத்திருப்பேன்
எனி என் வாழ்வே நீதானடி....!
(இனியும் திருந்துறமாதிரித் தெரியேலை)
இப்பதான் திருந்தினது.. விடமாட்டன் என்றியளே... அப்ப திரும்பவும் காவிக்குப் போகச் சொல்லுறியளா.... ஆசாமியாக....சும்மா இருங்க வாழ்க்கையில கொஞ்ச நாளைக்கு கொத்தடிமையாயும் இருந்து பாக்கத்தானே வேணும்...அதுவும் மங்கையிடம்....எண்டு வெளிக்கிட்டா...நீங்க..உங்க அனுபவத்தைக் காட்டிப் பயமுறுத்துறீங்க....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

(முக்கிய குறிப்பு - யாவும் கற்பனை...!)
(மிக மிக முக்கிய குறிப்பு: சிவப்பிலுள்ளவையும் கற்பனை.) :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மிக மிக மிக முக்கிய குறிப்பு : பச்சையில் உள்ளவை சிவப்புக்கு கற்பனை...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kavithan - 11-12-2004, 04:42 PM
[No subject] - by tamilini - 11-12-2004, 04:44 PM
[No subject] - by kavithan - 11-12-2004, 04:46 PM
[No subject] - by kuruvikal - 11-12-2004, 05:00 PM
[No subject] - by hari - 11-12-2004, 06:29 PM
[No subject] - by kuruvikal - 11-13-2004, 01:17 AM
[No subject] - by sOliyAn - 11-13-2004, 04:59 AM
[No subject] - by hari - 11-13-2004, 05:14 AM
[No subject] - by வெண்ணிலா - 11-13-2004, 08:41 AM
[No subject] - by வெண்ணிலா - 11-13-2004, 08:54 AM
[No subject] - by hari - 11-13-2004, 09:32 AM
[No subject] - by வெண்ணிலா - 11-13-2004, 09:44 AM
[No subject] - by kuruvikal - 11-13-2004, 11:32 AM
[No subject] - by kuruvikal - 11-13-2004, 11:41 AM
[No subject] - by kavithan - 11-13-2004, 04:37 PM
[No subject] - by tamilini - 11-13-2004, 05:15 PM
[No subject] - by shanmuhi - 11-13-2004, 09:13 PM
[No subject] - by kuruvikal - 11-14-2004, 12:19 AM
[No subject] - by shanmuhi - 11-14-2004, 12:31 AM
[No subject] - by kuruvikal - 11-14-2004, 12:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)