11-13-2004, 05:53 AM
கனடாவில் அவப்பெயரை உண்டு பண்ணும் தமிழ் இளைஞர் குழுக்கள்
கனடாவில் பல தமிழ் இளைஞர்கள் குழுக்களாகச் சேர்ந்து சட்டரீதியற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அதிக முறைப்பாடுகளைக் கனடாவிலிருந்து விடுமுறைக்குத் தாயகம் திரும்பும் பலரும் கவலை தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு குழுக்களாக நடமாடும் தமிழ் இளைஞர்கள் செய்யும் தவறுகள் பல சந்தர்ப்பத்தில் ஒட்டுமொத்தமான தமிழ்த் தேசியத்திற்கே இழுக்காக அமைவதாக கனடாவில் வாழ்ந்துவரும் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார். இவர்கள் சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமை தமிழ் மக்கள் மீது கனடா நாட்டவர்கள் வைத்திருக்கும் நற்பெயரைச் சீர்கெடுப்பதாகவும் இந்தக் குழுக்களின் நடவடிக்கைகள் அரசியல் சிக்கல்களையும் ஏற்படுத்துவதாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர் தெரிவித்தார்.
இவ்வாறு தொழிற்படும் ஆயுதக்குழு ஒன்று இன்றும் கனடாவில் பொலிசாரால் முற்றுகையிடப்பட்டு ஆயுதங்கள் கைபற்றப்பட்டதாகவும் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
நன்றி: நிதர்சனம்

<b>
?
- . - .</b>
?
- . - .</b>