Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கொலை வழக்கில் சங்கராச்சாரியர் கைது
#10
நான் என்ன வீரப்பனா?: சங்கராச்சாரியார் ஆவேசம்

சென்னை:

ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு தனி விமானத்தில் கொண்டு வரப்பட்ட ஜெயேந்திரர், போலீஸ் வேனில் ஏற மறுத்து போலீஸாருடன் கடுமையாக வாக்குவாதம் செய்தார்.

ஆந்திர மாநிலம் மகபூப் நகர் பகுதியில் கைது செய்யப்பட்ட ஜெயேந்திரர் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டார்.

விமான நிலையத்திலிருந்து அவரை காஞ்சிபுரம் அழைத்துச் செல்ல போலீஸ் வேன் தயாராக இருந்தது.

ஆனால் அவர் அதில் ஏற மறுத்தார். நான் என்ன வீரப்பனா, எனக்கு இவ்வளவுதான் மரியாதையா என்று போலீஸ் அதிகாரிகளிடம் அவர் ஆவேசமாகக் கேட்டார்.

இதையடுத்து அவரை போலீஸ் அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். எஸ்.பி. பிரேம்குமார், சங்கராச்சாரியாரிடம் சென்று, உங்களது மடத்துக்குச் சொந்தமான டாடா சுமோ வாகனத்திலேயே நீங்கள் செல்லலாம் என்று கூறியதையடுத்து அவர் சமாதானமடைந்தார்.

பின்னர் மடத்துக்குச் சொந்தமான டாடா சுமோ காரிலேயே காஞ்சிபுரத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூருக்குக் கொண்டு செல்லப்பட்டபோது போலீஸ் வேனில் தான் அழைத்துச் செல்லப்பட்டார்.

நோ சொன்ன நீதிபதி:

முன்னதாக காஞ்சிபுரத்தில் மாவட்ட நீதிபதி உத்தமராஜ் முன் ஆஜர்படுத்தப்பட்டபோது பேசிய சங்கராச்சாரியார், தனக்கு சர்க்கரை வியாதி இருப்பதாகவும், 70 வயதுக்கு மேல் ஆகி விட்டதாகவும், இதனால் தனக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் கோரினார்.

ஆனால் இதுகுறித்து சிறை நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறிவிட்ட நீதிபதி, சங்கராச்சாரியாரின் கோரிக்கையை ஏற்கவில்லை.
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 11-12-2004, 01:10 PM
[No subject] - by yarl - 11-12-2004, 02:05 PM
[No subject] - by Suji - 11-12-2004, 02:46 PM
[No subject] - by கறுணா - 11-12-2004, 03:43 PM
[No subject] - by kavithan - 11-12-2004, 04:36 PM
[No subject] - by Maramandai - 11-12-2004, 06:11 PM
[No subject] - by கறுணா - 11-12-2004, 09:24 PM
[No subject] - by Sriramanan - 11-13-2004, 02:45 AM
[No subject] - by Suji - 11-13-2004, 03:07 AM
[No subject] - by cannon - 11-13-2004, 04:22 PM
[No subject] - by kavithan - 11-13-2004, 04:58 PM
[No subject] - by ramya - 11-13-2004, 05:04 PM
[No subject] - by tamilini - 11-13-2004, 05:05 PM
[No subject] - by kirubans - 11-13-2004, 05:32 PM

Forum Jump:


Users browsing this thread: 4 Guest(s)