Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வெளிநாடுகளில் புலிகள் பற்றி அறிய
#3
அகிலத்திலுள்ள தேசங்கள் யாவும் பகைவர்களின் நோக்கங்கள், திட்டங்கள், பகைவர்களின் மறைப்பு உளவாளிகள் போன்ற அனைத்தினையும் தெரிந்து அறிந்து கொள்ள பகைவர்களுள் ?ஊடுருவல்?களை மேற்கொள்கின்றன.
பன்னெடு காலமாகவே உளவுமுறைகளும் ?ஊடுருவல்? உளவு மரபு ஆகவும், வலுமிக்க ஆயுதமாகவும் பேணப்பட்டுவருகின்றது.

?ஊடுருவல்? பகைவர்களின் அச்சுறுத்தல்களை முறியடித்த தேசத்தைக் காக்கவும், பகைவர்களோடு போர் புரியும் போது வெற்றி பெற்று தேசத்தைக்காக்கவும் பக்கபலமான ஆயுதமாக இருந்து வருகின்றது.

?ஊடுருவல்? செய்யும் உளவாளிகள் பொதுமக்களுள்ளும், உள்ளக நிர்வாகப் பிரிவுகளினுள்ளும், அதிஉயர் இரகசிய கட்டமைப்புக்குள்ளும், அதியுயர் இரகசிய கட்டமைப்புக்களினுள்ளும், அதி உயர் இரகசிய கட்டமைப்புக்களுள்ளும் ஊடுருவி செறிந்து நிலை பெறுகின்றனர்.

அவ்வாறாக ஊடுருவி இருக்கும் உளவாளிகளில் சரியான தருணத்தில் அறிவுபூர்வமாக இயங்க வல்லவர்களாக இருக்கின்றார்கள்.

அவர்கள் எவரும் சிறிதளவேனும் சந்தேகப்படாதவாறு தங்களை மறைத்துக் கொள்கின்றனர். அதாவது மொழி, கலை கலாச்சாரம், பண்பாடு, மதம், சமூக பழக்கவழக்கங்கள், இடச்சூழல் ஆகியவற்றிற்கு ஏற்ப தங்கள் மறைப்பை தயார்செய்துகொள்கின்றனர்.

அவர்கள் பாதுகாப்பு பலவீனங்களை, பொதுமக்களின் பலவீனங்களை, ஊடுருவல் செய்யவேண்டிய இலக்கின் பலவீனங்களையும் கண்டறிந்து அவற்றை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர்.

அவர்கள் தங்கள் உண்மை முகத்தை மறைத்து தங்களுக்கு பொருத்தமான முகமூடிகளை அணிந்து மாறுவேடங்களில் இயங்குகின்றனர்.

அவர்கள் திட்டமிட்டு இலக்கு வைத்து பழகுபவர்களுடன் நெருக்கமான நட்பை ஏற்படுத்திக் கொள்ளும் உளவியலாளார்களாக செயலாற்றுகின்றனர். அதாவது எந்தவொரு இரகசியத்தையும் தம்மோடு கதைக்கும் மனச்சூழலை உருவாக்கிக் கொள்கின்றனர்.

அவர்கள் ?ஊடுருவல்? மேற்கொள்ளவேண்டிய அதியுயர் இரகசிய மையத்துடன் தொடர்பு பட்டிருக்கும் ஐந்து உறவுவட்டங்களுள் தான் ஆரம்பமாக நுழைகின்றனர். அதாவது பொதுமக்கள், தெரிந்தவர்கள், சாதாரணமாக தொடர்புபட்டிருப்பவர்கள், நெருக்கமானவர்கள் என அவைகள் அமைகின்றன.

இவ்வாறாக படிப்படியாக ஊடுருவி அதியுயர் இரகசிய மையத்தினுள் உளவாளிகள் நிலைபெறும்போது பாதுகாப்பிற்கான இரும்புத்திரை நீங்கிவிடுகின்றது. அதனால் அந்தரங்க இரகசிய தகவல்களை பாதுகாக்க முடியாமலும், தாக்குதல் மற்றும் நாசவேலைகளை முறியடிக்க முடியாமல் போய்விடுகின்றது.

உளவு அமைப்புக்கள் உளவாளிகளால் செயற்படும் ?ஊடுருவல்?கள்தான் பெறுமதி வாய்ந்ததாக கருதி அவர்களை உச்ச இரகசிய வட்டத்தினுள் நாட்டுகின்றன. அவ்வாறாக ?நாட்டுதல்? களை செய்து உளவு வலயமைப்புக்களை அமைத்து நெருங்கமுடியாத பல இலக்குகளை அழித்துவருகின்றன.

இவ்வாறனான உளவு அணுமுறைகளால்தான்; அண்மையில் இந்தியாவில் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டான். வெளியாகியுள்ள தகவல்களின் படி வீரப்பனின் மரணச்சம்பவத்திற்குப் பின்னால் உளவுப்படையினரின் மாறுபட்ட அணுகுமுறைகளால் 100 சதவீதம் இருந்துள்ள தகவல்களை ஆய்வாளர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

வீரப்பனை ஒழித்தக்கட்டுவதற்கு பல ஆண்டுகளாக, பல பல்வேறு முயற்சிகளை அதிரடிப்படையினர் மேற்கொண்ட போதும் அவைகள் எதுவும் வெற்றியளிக்கவில்லை. அண்மையில் ?பட்டுப்பூச்சி? என பெயிரிடப்பட்டு வீரப்பன் மீதான தாக்குதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.

அதாவது அதிரடிப்படை வீரர்கள் சிறுசிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனிப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டன. அதில் புலனாய்வுக் குழுவினர் வீரப்பனுக்கு உதவிசெய்யும் மக்களோடு மக்களாக இரண்டறகடகலந்தனர்.

அவர்கள் கிராமங்களில் தோட்ட வேலையாட்கள், மரம்வெட்டுபவர்கள், ஆடுமேய்ப்பவர்கள், பார்வையற்றோர்கள், பிச்சைக்காரர்கள், சாமியார்கள் என பல்வேறு பிரிவுகளில் நிலைபெற்றிருந்தார்கள். அத்துடன் காட்டுப் பகுதியில் சேவையில் ?ஈடுபடும் பஸ்களின் நடத்தனர்கள், சாரதி என ஒரு வருக்கொருவர் தெரியாதவகையில் தொழிலாற்றினாகள்.

இவ்வாறு ஒரு புறமாக உளவு வலைப் பின்னல் பின்னப்ட்ட மறுபுறமாக ?வெள்ளத்துரை? என்கிற உளவாளி வீரப்பன் ஆட்களுடன் நெருக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டார். கால நகர்வில் வெள்ளத்துரை வீரப்பனின் மிக நம்பிக்கைக்குரிய ஒரவரானார்.

இப்படியாக உளவுப் பிரிவினரின் ஆக்கிரமிப்பிற்குள் வீரப்பன் வாழும் போதுதான் அவருக்கு கண்புரை நோய்க்கு சிகிச்சை பெற வேண்டி அவசியம் ஏற்படுகின்றது இது சரியான தருனத்தை பார்த்திருந்த உளவுப் பிரிவினருக்கு வாய்ப்பாக அமைந்தது.

வெள்ளத்துரை வீரப்பனின் கண்நோய்க்குச் சிகிச்சைக்கான ஒழுங்குகளை செய்தார். வீரப்பன் உளவுப் பிரிவினர் விரித்த சிகிச்சை வலைப்பிரிப்பில் தானாகவே வந்து வீழ்ந்தான். அவரின் 17 ஆம் ஆண்டுகால காட்டு ஆட்சியும் வீழ்சியுற்றது.

தமிழக, கர்நாடக மாநிலங்கள் தங்கள் படைப்பலத்தால் வீரப்பனை தீர்த்துக்கட்ட முடியாமல் திக்குமுக்காடி இருக்கும் சமயத்தில் தான் உளவுப்பிரிவினர். ?ஊடுருவல்? என்கின்ற வலுமிக்க ஆயுதத்தின் துணையோடு வீரப்பனை தீர்த்துக்கட்டி அவரின் காட்டுவாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

வீரப்பனை அழித்தொழிக்கும் முயற்சியில் உளவுப்பிரிவினர் உயிரைப் பணயம் வைத்தனர். இத்தகைய பண்டைய மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த உண்மையான ?ஊடுருவல்? சம்பவத்தை இங்கு பார்ப்போம்.

பாரசீயக மன்னன் ?டாரியஸ்? தனது படைகள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி பபிலோனியர்கள் மீது படையெடுத்தான் அவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு அவர்களின் கோட்டையை முற்றுகையின் கீழ் கொண்டு வந்தான்.

அந்த முற்றுகை ஒரு வருடம் ஏழுமாதங்கள் கடந்தவிட்ட போதிலும் அந்த கோட்டையை கைப்பற்ற முடியாமல் மன்னனும், அவர் போர் வீரர்களும் தோல்வியின் விளிம்பில் இருந்தனர். மன்னனால் சகல போர்த்தந்திரங்களையும், யுத்திகளையும் பயன்படுத்தப்பட்டும் எதுவுமே பயனளிக்கவில்லை.

பபிலோனியர்கள் பாரசீயக போர் வீரர்களைப் பார்த்து நையாண்டி செய்தனர். அதாவது பாரசீயர்களே! திரும்பிச் செல்வதை விடுத்து ஏன்? அங்கே குந்திக்கொண்டிருக்கின்றீர்கள் என வார்த்தைகளாலும், சைகைகளாலும் கேலி செய்தனர். இவைகள் பாரசீயக படைத்தளபதியான சோப்பிரேஸ் மனதில் காயத்தை ஏற்படுத்தின.

சோப்பிரஸ் பபிலோனியர்கள் கோட்டையின் வீழ்ச்சிக்குத்தான் மாத்திரமே தனிப்பொறுப்பை வகிக்கக்கூடியதான திட்டமொன்றை சிந்தித்தான். அதாவது கோட்டைக்குள் ?ஊடுருவல்? ஒன்றைச் செய்வதற்கான திட்டத்தை வகுத்தான். அதற்காக தன்னை தியாகம் செய்யவும் தீர்மானித்தான்.

அவன் தனது மூக்கையும், செவிகளையும் வெட்டி நீக்கிவிட்டு, தன்னை மேலும் விகாரப்படுத்த மொட்டை அடித்துக் கொண்டான். இந்த உருமாறிய தோற்றத்தோடு மன்னன் டாரியஸ் முன்னால் வந்து நின்றான்.

மன்னன் தன் தளபதியை அவ்வாறான கோலத்தில் கண்டதும் அவர் பெரிதும் மனம் கலங்கிப்போய் யார்? உனக்கு இந்தக் கொடுமையை இழைத்தார்கள் என பெரும் கோபத்தோடு, ஆவசேக் குரலில் கேட்டான்.

சோப்பிரஸ், மன்னனே! இது என்னுடைய வேலையே என சொல்லி அடுத்து தன் ?ஊடுருவல்? நோக்கத்தை, திட்டத்தை மன்னனுக்கு விபரித்தான். அதாவது மன்னன் டாரியஸீக்கும் தனக்கும் ஏற்பட்ட முரண்பாட்டால் மன்னனால் தனக்கு இழைக்கப்ட்ட கொடுமையே இது என்று சொல்லி பபிலோனியர்களிடம் சரணடைகிறேன் என்றான். மேலும் சோப்பிரஸ் தான் சரணடைந்த பத்தாவது நாளில் தங்களிடமுள்ள ஆற்றல் குறைந்த ஆயிரம் போர்வீரர்களை பபிலோனியர் கோட்டை ?செமிரேஸ்? நுழைவாயிலிற்க முன்பாக நிறுத்துங்கள்.

இதன் பின்னர் ஏழைவது நாளில் ?நினெவைன்ஸ்? நுழைவாயில் முன்னாள் மீண்டும் இரண்டாயிரம் போர்வீரர்களை நிறுத்துங்கள்.

அந்த ஏழாவது நாள் முடிந்ததும் இருபது நாட்களின் பின்னர் ?சல்டீன்? நுழைவாயிலில் நாலாயிரம் போர் வீரர்களை விடுங்கள்.

இந்த நாட்களுக்குப் பிற்பாடு இருபதாம் நாள் முடிய பாரசீயக அனைத்துப் போர்வீரர்களையும் பபிலோனியர் கோட்டை மதில் முழுவதையும் சுற்றித்தாக்க உத்தரவிடுங்கள் என்றான்.

இப்படியாக சோப்பிரஸ் தன் நோக்கத்தை, திட்டங்களை மன்னனுக்கு விபரித்த பிற்பாடு பபிலோனியர்களிடம் சரணடைந்தான்.

பாரசீயர்களின் கௌவரவத் தளபதி மூக்கு, காதுகளும் வெட்டப்பட்ட நிலையில் இரத்தம் கசிந்து கொண்டிருந்த வேளையில் தம்மிடம் வந்திருப்பதனைக் கண்ட பாபிலோனியர்கள் தங்கள் நண்பனாக இருப்பதற்கே வந்திருக்கின்றான் என்று அவனை முழுமையாக நம்பினர்.

பபிலோனியர்கள் தம்மிடமுள்ள படைப்பிரிவொன்றை சோப்பிரேசிடம் வழங்கி போர்க்களத்தில் இறங்கினர். அவன் பபிலோனியர்களின் படைப்பிரிவொன்றிற்கு தலைமை தாங்கி டாரியஸின் மூன்று போர் முயற்சிகளையும் முறியடித்து பபிலோனியா கோட்டையை காப்பாற்றினான்.

பபிலோனியர்கள் தங்களை காத்ததற்காகவும் சோப்பிரஸின் வீரத்திற்காகவும் அவர்களின் படைகள் அனைத்தினதும் தளபதியாகவும் கோட்டை மதிற்சுவர்களின் காவலர் தலைவராகவும் அவரை ஆக்கினர்.

இருபதாம் நாள் மூடிய மன்னன் டாரியஸ் தன் அனைத்துப் போர் வீரர்களையும் ஒன்று திரட்டி பபிலோனிய கோட்டையைச் சுற்றித்தாக்கினர். பேர் கடுமையாக நடந்து கொண்டிருக்கும் போது டாரியஸின் போர்வீரர்கள் கோட்டை கதவுகளை திறந்து உள்ளே நுழைந்தபோது தான் பபிலோனியர்கள் ஏமாந்து தோற்றுப் போனார்கள். பாரசீயர்களிடம் பாபிலோனியா கோட்டை வீழ்ச்சியுற்றது.

மன்னன் டாரியஸின் பெரும் படைபலத்தால் வெற்றிகொள்ள முடியாமல் இருந்த பாபிலோனியக் கோட்டையை சோப்பிரசின் ?ஊடுருவல்? துணையோடு வெற்றிகொள்ளப்ட்டது.

மேலே எடுத்துச் சொல்லப்பட்டுள்ள இரு உண்மை ?ஊடுருவல்? சம்பவங்களும் ஊடுருவலின் வலிமையையும் பலத்தையும் இடித்துரைத்துள்ளது.

இது போன்ற ?ஊடுருவல்?களை பகை உளவுப்பிரிவினர் தமிழர் தாயகப் பகுதிகளுக்குள்ளும், உள்நிர்வாகக் கட்டமைப்புக்குள்ளும் அதிஉயர் இரகசிய வட்டத்தினருக்குள்ளும் மேற்கொள்ளவே முயற்சிக்கின்றன.

இந்த உளவு முயற்சியின் இலக்கு என்னவெனில் தமிழர்களின் படை பலத்தை உடைத்து, சிதைவுபடுத்தி பலவீனமாக்குவதாகவே இருக்கின்றது.

இந்த இலக்கை எட்ட பகை உளவுப் பிரிவினர் தமிழீழ விடுதலைப் போராட்த்திற்கு விசுவாசமாக உழைக்கக் கூடியவர்களைத் தமது உளவாளிகளை தயார்படுத்தி ஆங்காங்கே நாட்டுகின்றனர். அவ்வாறு நாட்டப்படுகின்றன உளவாளிகள் ஆழமாக வேரூன்றி நீண்டகால அடிப்படையில் உளவுப்பணிகளை செய்கின்றனர்.

இவ்வாறான பகைவர்களின் ஆபத்து மிக்க ?ஊடுருவல்? முயற்சிகளை நிர்மூலுமாக்க, தமிழர்கள் தமிழ்தேசிய பக்தியோடு, தங்களை சுற்றியிருக்கும் ஐந்து உறவு வட்டத்தினுள் புதிதாக உறவுகொள்பவர்கள் விடயத்திலும், தங்களுடன் வலிந்து நட்புக்கொள்ள முயல்பவர்கள் விடயத்திலும் விழிப்பாக இருக்கவேண்டும்.

அவ்வாறாக தமிழர்கள் விழிப்போடு இல்லாது இருப்பின் அது தங்களைச் சுற்றியிருக்கும். உளவு வட்டத்தினரையும் பகைவர்களையும் அறியாமல் இருப்பதாகவே இருக்கும்.

அப்படி அறியாமல் இருந்தால் தமிழர்களால் தமிழர்களே பெரும் பாதிப்புக்குள்ளாகவேண்டியே ஏற்படும்.

ஆகவே தமிழர்கள் பகைவர்களையும் தங்களைச் சுற்றியிருக்கும் உறவு வட்டத்தினரையும் அறிந்துகொள்ளும்போதே தமிழர்கள் கோட்டைக்குள் பகைவர்கள் ?ஊடுருவல்? களை தடுத்திடமுடியும்.
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>
Reply


Messages In This Thread
[No subject] - by Nada - 11-12-2004, 11:36 AM
[No subject] - by Suji - 11-12-2004, 11:55 AM
[No subject] - by Suji - 11-12-2004, 12:00 PM
[No subject] - by கறுணா - 11-12-2004, 03:55 PM
[No subject] - by vallai - 11-13-2004, 03:46 AM
[No subject] - by naaivaal - 11-13-2004, 11:19 AM
[No subject] - by MEERA - 11-13-2004, 11:54 AM
[No subject] - by naaivaal - 11-13-2004, 01:41 PM
[No subject] - by naaivaal - 11-13-2004, 01:44 PM
[No subject] - by naaivaal - 11-13-2004, 01:46 PM
[No subject] - by Nanthaa - 11-13-2004, 02:54 PM
[No subject] - by naaivaal - 11-13-2004, 11:37 PM
[No subject] - by Mathuran - 12-22-2004, 04:44 AM
[No subject] - by Mathuran - 12-23-2004, 07:20 AM
[No subject] - by vasisutha - 12-23-2004, 01:55 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)