11-12-2004, 10:58 AM
வெளிநாடுகளில் புலிகள் பற்றிய தகவல்களை அறிய புலனாய்வு அதிகாரிகள் நியமனம்
சர்வதேச ரீதியில் புலிகள் தொடர்பான தகவல்களைத் திரட் டிக்கொள்ளும் நோக்கில், மேலும் நான்கு சிரேஷ்ட புலனாய்வுத்துறை அதிகாரிகள் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.கடந்த வாரம் நியமிக்கப்பட்ட இரு புலனாய்வுப் பிரிவு பொலிஸ் அதிகாரிகளுள் - தாய்லாந்து நாட்டுக்கு அனுப்பப்படவுள்ளனர். இவர்களுடன் சேர்த்து தாய்லாந் தில் மொத்தமாக ஏழு புலனாய்வு அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை - பிரிட்டனில் புலனாய்வுப் பணிகளில் ஈடுபடுபடுவதற்கு மேலும் இரண்டு புலனாய்வுப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பத்திரிகையாளர் என்ற போர்வையில் கடந்த பத்து வருடங்களாகத் தொழிற்பட்டு வந்த ஒரு அதிகாரி - மீண்டும் பிரிட்டனுக்கு அனுப் பப்பட்டார்.இதேவேளை - பிரிட்டனில் பணியாற்றிய இன்னொரு பெண் புலனாய்வு அதிகாரி நாடு திரும்பியிருப்பதாகவும் தெரியவருகிறது
eelazhanadu.com