11-11-2004, 01:44 PM
கள்ளத்தனமாய் எண்ணங்கள் ஆள
கலக்கமாய் மனதுடன்
காலங்கள் கடத்தி
காதல் என்று புலம்பினும்....
பருவ மயக்கத்தில்
காண்போருக்கு காட்டுவதற்காய்
கண் பார்த்து கால் பார்த்து
காசு பார்த்து காட்சி பார்த்து
காதல் என்று புலம்பினும்....
உள்ளுணர்வால் அக உணர்வால்
உள்ளங்கள் இரண்டும்
அடையாளம் இன்றியே
அன்புப் பாசைகளாய்
பரிமாறின் மட்டுமே
அது காதலாகும்......!
காலத்தால் என்ன
மரணம் கூடத் தோற்கும்
உண்மைக்காதல் முன்...!
இது பாட்டில் வந்த பொய்யுமல்ல
முன் அனுபவமுமல்ல.... கண்டது...!
ஆடவனை விட
தாவும் மனது
மங்கையினதே
ஆதலால் மந்தியது
மங்கைக்கே வகை...!
அதுமட்டுமா...
மங்கையவள்
சுயநலப் பிசாசும் கூட
தானும் தன்னுள்ளமும்
தன்னைப் பற்றித்தான் பேச்சும்...!
உள்ளமென்று வந்துவிட்டால்
உணர்வுகள் எங்கும் சமன்
உன் அன்புக்கு அடையாளம் தேடும் நீ
தன் அன்பைத் தேடுபவனுக்கு
உன் அடையாளம் தந்தாயா...??!
உன்னைப் போல்
ஆடவனுக்குள்ளும் ஏக்கங்கள்.....
உன்னைப் புரிந்து கொள்ளும் நீ
அவனை மட்டும்
ஏன் புரிய முயலவில்லை...???!
ஆளுக்காள் வாங்கிக் கொண்ட
உள்ளத்தை அடையாளப்படுத்த
அவை கொண்ட அன்புக்கு
விவேகம் இருக்கு
உனக்கு இல்லையே
வருத்தம் தான்....!
அடையாளம் காட்ட
அரைநொடி போதும்
அதற்காய் அன்பு உள்ளங்களை
கூந்தலில் இட்ட மலராய்
சீரழிக்காதே....!
ஆடவன் மனது
மலரிலும் மென்மை
அதை பாறையாய் மாற்றுதல்
மங்கையர் செயலே....!
புதிய உலகு மங்கையே
நீயாவது
புரிந்துகொள் தெளிந்துகொள்
உன்னவன் வாழ்வும் உன் வாழ்வும்
ஓர் இலக்கணம் ஆகும்...!
நிச்சயமாய்
பொழுதுபோக்கு இலக்கியமாய்
உண்மைக் காதல்
தன் வரலாறு எழுதாது....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
கலக்கமாய் மனதுடன்
காலங்கள் கடத்தி
காதல் என்று புலம்பினும்....
பருவ மயக்கத்தில்
காண்போருக்கு காட்டுவதற்காய்
கண் பார்த்து கால் பார்த்து
காசு பார்த்து காட்சி பார்த்து
காதல் என்று புலம்பினும்....
உள்ளுணர்வால் அக உணர்வால்
உள்ளங்கள் இரண்டும்
அடையாளம் இன்றியே
அன்புப் பாசைகளாய்
பரிமாறின் மட்டுமே
அது காதலாகும்......!
காலத்தால் என்ன
மரணம் கூடத் தோற்கும்
உண்மைக்காதல் முன்...!
இது பாட்டில் வந்த பொய்யுமல்ல
முன் அனுபவமுமல்ல.... கண்டது...!
ஆடவனை விட
தாவும் மனது
மங்கையினதே
ஆதலால் மந்தியது
மங்கைக்கே வகை...!
அதுமட்டுமா...
மங்கையவள்
சுயநலப் பிசாசும் கூட
தானும் தன்னுள்ளமும்
தன்னைப் பற்றித்தான் பேச்சும்...!
உள்ளமென்று வந்துவிட்டால்
உணர்வுகள் எங்கும் சமன்
உன் அன்புக்கு அடையாளம் தேடும் நீ
தன் அன்பைத் தேடுபவனுக்கு
உன் அடையாளம் தந்தாயா...??!
உன்னைப் போல்
ஆடவனுக்குள்ளும் ஏக்கங்கள்.....
உன்னைப் புரிந்து கொள்ளும் நீ
அவனை மட்டும்
ஏன் புரிய முயலவில்லை...???!
ஆளுக்காள் வாங்கிக் கொண்ட
உள்ளத்தை அடையாளப்படுத்த
அவை கொண்ட அன்புக்கு
விவேகம் இருக்கு
உனக்கு இல்லையே
வருத்தம் தான்....!
அடையாளம் காட்ட
அரைநொடி போதும்
அதற்காய் அன்பு உள்ளங்களை
கூந்தலில் இட்ட மலராய்
சீரழிக்காதே....!
ஆடவன் மனது
மலரிலும் மென்மை
அதை பாறையாய் மாற்றுதல்
மங்கையர் செயலே....!
புதிய உலகு மங்கையே
நீயாவது
புரிந்துகொள் தெளிந்துகொள்
உன்னவன் வாழ்வும் உன் வாழ்வும்
ஓர் இலக்கணம் ஆகும்...!
நிச்சயமாய்
பொழுதுபோக்கு இலக்கியமாய்
உண்மைக் காதல்
தன் வரலாறு எழுதாது....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

