Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முரளிதரன் தூஸ்ராவிற்கு ஐ.சி.சி. அனுமதி!
#1
முரளிதரன் தூஸ்ராவிற்கு ஐ.சி.சி. அனுமதி!

புதன், 10 நவம்பர் 2004
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களை கலக்கி வந்த தூஸ்ரா பந்துகளுக்கு விதித்திருந்த தடையை சர்வதேச கிரிக்கெட் பேரவை விலக்கிக்கொண்டுவிட்டது!

தூஸ்ரா வகை பந்துகளை முரளிதரன் வீசும்போது அவருடைய முழங்கை அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் அதிகமாக நீள்கிறது என்று கூறி அளித்த அறிக்கையின் அடிப்படையில் அதனை விதிமுறைகளுக்குப் புறம்பானது என்று கடந்த மே மாதம் ஐ.சி.சி. அறிவித்தது!

இதனைத் தொடர்ந்து ஐ.சி.சி.யின் சிறப்பு ஆலோசகரும், இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான ஆங்கஸ் ஃப்ரேசரிடம் ஆலோசனை கேட்டிருந்தது ஐ.சி.சி..

சுழற்பந்து வீச்சாளர்கள் 15 டிகிரி வரை தங்களுடைய கரத்தை நீட்ட அனுமதிக்க வேண்டும் என்று ஆங்கஸ் ஃப்ரேசர் அளித்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டு முரளிதரனுக்கு விதிக்கப்பட்ட தடையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் நீக்கிக்கொண்டதாக தி இண்டிபெண்டண்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆங்கஸ் ஃப்ரேசர், தி இண்டிபெண்டண்ட் நாளிதழின் கிரிக்கெட் செய்தியாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுழற்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சுக் கரம் 5 டிகிரிக்கு மேல் நீட்டப்படக்கூடாது என்று 2001 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விதிமுறையை தளர்த்தி அதனை 15 டிகிரியாக உயர்த்தியுள்ள ஐ.சி.சி..

டெஸ்ட் கிரிக்கெட்டில் 532 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள முத்தையா முரளிதரனை இதற்குமுன் இரண்டு முறை பந்தை எறிவதாகக் கூறி சர்ச்சைiயை ஏற்படுத்தியது ஐ.சி.சி. என்பது குறிப்பிடத்தக்கது.

webulagam
Reply


Messages In This Thread
முரளிதரன் தூஸ்ராவிற்கு ஐ.சி.சி. அனுமதி! - by yarl - 11-11-2004, 09:34 AM
[No subject] - by hari - 11-11-2004, 10:04 AM
[No subject] - by kuruvikal - 11-11-2004, 11:39 AM
[No subject] - by MEERA - 11-11-2004, 12:01 PM
[No subject] - by yarl - 11-11-2004, 01:58 PM
[No subject] - by tamilini - 11-11-2004, 05:03 PM
[No subject] - by kirubans - 11-11-2004, 11:59 PM
[No subject] - by kavithan - 11-12-2004, 12:30 AM
[No subject] - by Sriramanan - 11-12-2004, 02:49 AM
[No subject] - by kuruvikal - 11-12-2004, 04:12 AM
[No subject] - by Sriramanan - 11-12-2004, 08:42 AM
[No subject] - by hari - 11-12-2004, 09:21 AM
[No subject] - by kuruvikal - 11-12-2004, 12:47 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)