11-10-2004, 02:24 AM
sOliyAn Wrote:Quote:கவிஞரே....
மங்கைக்குள்
மலரும் இல்லை இதழும் இல்லை
மதுவும் இல்லை தேனும் இல்லை
ஏன் உமக்கு இந்தப் பித்தலாட்டம்...!
மலரும் உணர்வுகளுள் தழுவும் மலராய்
இதழில் சிறக்கும் செவ்வாய் தினமாய்
மதுவும் அடங்கும் 'மாது'வடிவாய்
தேனும் ஊறும் சிற்றின்ப ஊனாய்
மானுட பந்தம் வலுக்கும் உறவாய்
இயற்கை அளித்த இளைப்பாறு மடமாய்
சிறக்கும் மலர்களை பெண்ணென்பேன் யான்!
காண்டாமிருகமும் தனது பாசையில்
மலரை எப்படிப் போற்றிப் புணருமோ?!
அறிந்தால் சொல்லுங்கள்!
குட்டி ஈன்ற காரணத்தை!! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அட கடவுளே...
மங்கையென்றால்
மனையாள்பவளாய் ஆவதுண்டு....
இங்கோ மங்கையவள்
மதுபானச்சாலையாய்
உல்லாச விடுதியாய்
ஊற்றெடுக்கும் சிற்றின்பக் கிணறாய்
கொவ்வை படரும் வேலியாய்
கனி தாங்கும் மரமாய்
முற்றிலும் உயிரற்ற சடமாய்
பாவம்....
என்ன பாவம் செய்தாளோ
அந்த மங்கை....!
காண்டாமிருகம்....
பூ என்று புணராவிடினும்
தன் துணை என்று
அடிக்கொருதடவை என்றில்லாவிடினும்
அரவணைக்கத் தவறுவதில்லை...!
தவறியும்
இப்படியெல்லாம் விளிக்காது
அது சத்தியம்....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

