07-27-2003, 06:06 AM
கிறுகிறுக்க வைக்கும் திரிசங்கு திருமணங்கள்!
<img src='http://www.vikatan.com/jv/2003/jul/30072003/p19.jpg' border='0' alt='user posted image'>
'விடிஞ்சா கல்யாணம்' என காத்திருக்கும் சுபமுகூர்த்த வேளையில், 'பொண்ணு ஓடிப் போயிட்டாப்பா' என்றோ.. 'வரதட்சணை கேஸ் கொடுக்க பொண்ணு போலீஸ் ஸ்டேஷன் போயிருக்காப்பா‘ என்றோ எதிர்பாராத க்ளைமாக்ஸ்களால் சமீபகாலமாக கல்யாண மண் டபங்கள் கவலை மண்டபங்களாக ஆகிவருகின்றன.
குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் விதவிதமான காரணங்களால் கல்யாண நிகழ்ச்சிகள் தடைபட்டு, அதிர்ச்சியலைகளைக் கிளப்புவது வாடிக்கையாகவே ஆகிவிட்டது.
கல்யாணத்தரகர்கள் நடராஜ் மற்றும் மொட்டையப்பன் சொன்ன விபரீதமான சில கல்யாண கலாட்டாக்கள் இங்கே..
கடந்த ஜகூலை முதல் வாரம்.. கரூர் அருகே தாந்தோணி மலையில் உள்ள அந்தத் திருமண மண்டபம் வண்ணவிளக்குகள், தோரணங்கள் என்று விதவிதமான அலங்காரங்களால் ஜொலித்துக் கொண்டிருந்தது. ஆனால், அதன் கதவுகள் மட்டும் பூட்டப்பட்டு கிடந்தது. மணமக்களுக்கான அன்பளிப்பு பார்சல்களோடு மண்டபம் நோக்கி உற்சாகமாக வந்தவர்கள், திடுக்கிட்டு திரும்பிப் போனார்கள்.
கல்யாணம் ஏன் தடைபட்டது? காரணம் இதுதான்..
வெள்ளியணை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த சித்ராதான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மணமகள். மாப்பிள்ளை, பக்கத்து ஊரைச் சேர்ந்தவர். திருமண ஏற்பாடுகள் பக்காவாக முடிந்த நிலையில், திருமணத்துக்கு முதல் நாள் இரவு மணப்பெண்ணின் வீட்டில் ஒரு விசேஷம்! அப்போது, பெண்ணின் உறவுக்காரப் பையன் ஒருவன் யாரும் எதிர்பாராத ஒரு சமயம் அவள் கழுத்தில் தாலி கட்டிவிட்டான்.
விஷயம் மாப்பிள்ளை வீட்டாரை எட்டிவிட, ஆவேசத் தோடு வந்திருக்கிறார்கள். ''தெரியாமல் தவறு நேர்ந்து விட்டது. இந்தத் தாலியைக் கழட்டிவிட்டு, மாப்பிள்ளை காலையில் புதிய தாலி கட்டட்டும். நிச்சயித்த திருமணம் தடைபட வேண்டாம்' எனச் சொல்லி அவர்களை சமாதானப்படுத்த முயன்றிருக்கிறார்கள் பெண் வீட்டார்.
ஆனால், மாப்பிள்ளை வீட்டார் ஏற்கவில்லை. 'ஒரு பெண்ணுக்கு ஒரு முறைதான் தாலி ஏறணும்.. தாலி ஏறின பெண் எங்களுக்கு வேணாம்..‘‘ என துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு நடையைக் கட்டிவிட்டார்கள்.
சித்ராவுக்கு மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை என்றும் தாலி கட்டிய அந்த உறவுக்காரப் பையனை அவர் ஏற்கெனவே காதலித்து வந்தார் என்றும் ஊருக்குள் பேச்சு!
குளித்தலை அருகே ஒரு கிராமம்.. ஸ்பீக்கர் செட், பச்சை பந்தல் என்று மாப்பிள்ளை வீடு களைகட்டி இருந்தது.
திருமணத்துக்கு முதல் நாள் இரவு, பெண்ணை அழைத்துவர கிளம்பியிருக் கிறார்கள் மாப்பிள்ளை வீட்டார். பெண் வீடு ஐம்பது கிலோ மீட்டர் தூரம்.
அங்கே போனவர்கள், ''கிளம்பும்மா போகலாம்..‘ என்று எவ்வளவோ கெஞ்சியும், பெண் அசைந்து கொடுக்க வில்லை. ''எங்க (தாய்) மாமன் வந்தால் தான் கிளம்புவேன்..‘‘ என 'சண்டியர் தனம்' பண்ணியிருக்கிறாள்.
தாய் மாமனோ ஊரில் இல்லை. ஆளை அனுப்பி விடிய விடிய தேடியும் அவர் சிக்கவில்லை. கடைசியில் ஒருவழியாக சமாதானப்படுத்தி, பெண்ணை அழைத்துப் போனார்கள்.
அவர்கள் ஊர்வந்து சேர்வதற்குள் முகூர்த்த நேரம் நெருங்கிவிட்டது. தாமதத்துக்கான காரணம் மாப்பிள் ளைக்கு தெரிவிக்கப்பட, அவர் வெகுண்டெழுந்தார். 'இப்படியரு பிடிவாதம் பிடித்த பெண்ணின் கழுத்தில் நான் தாலி கட்ட மாட்டேன்‘ என்று அறிவித்து விட்டார்.
மாப்பிள்ளை மீது குளித்தலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள் பெண்வீட்டார். கதை முழுக்கக் கேட்ட போலீஸ், 'இதில் நாங்கள் தலையிட முடியாது‘ என்று கைவிரித்துவிட, கல்யாணம் தடைபட்டது.
சிறு வயது முதலே தாய்மாமன் மீது அந்தப் பெண் வைத்திருந்த அபரிமிதமான பாசம்தான் இந்த பிடிவாதத்துக்குக் காரணம் என்கிறார்கள் ஊர்க்காரர்கள்.
மாயனூர் அருகே நடந்த ஒரு திருமண ஏற்பாடு வேடிக்கையானது.
ஆர்டரின் பேரில் திருமணம் கவர் செய்யச் சென்ற விடியோகிராபரை ஓரங் கட்டிய மணப்பெண், ''சார், எங்கம்மா வோட நிர்ப்பந்தத்துக்காகத்தான் நான் இந்தக் கல்யாணத்துக்கே ஒத்துக்கிட்டேன். இந்த ஆளோட நான் ஒரு நாள் கூட வாழப்போறதில்லை. அதனால தயவுசெய்து 'தலையை நிமிர்ந்து பாரும்மா, சிரிம்மா, மாப்பிள்ளையோட சேர்ந்து நில்லும்மா'னெல்லாம் சொல்லாதீங்க. எப்படி நிக்கிறேனோ அப்படியே எடுங்க..'' என தடாலடி உத்தரவு போட, ஆடிப்போன விடியோகிராபர் கல்யாணம் முடியும்வரை அதை அப்படியே அனுசரித்திருக்கிறார்.
திருமணம் முடிந்து சில நாட்களுக்குப் பிறகு காஸெட்டையும் ஆல்பத்தையும் எடுத்துச் சென்ற விடியோகிராபருக்கு முழுத்தொகையும் செட்டில் செய்திருக்கிறாள் அந்தப் பெண். 'மாப்பிள்ளை எங்கேம்மா?' என விடியோகிராபர் கேட்க, நீண்டதொரு உரையே நிகழ்த்தினாளாம் அந்தப் பெண்.
''நான்தான் சொன்னேனே.. எங்க அம்மாவோட கட்டாயத்துல நடந்த கல்யாணம் அது. எங்கம்மாவுக்கும் அந்த மாப்பிள்ளையோட அப்பாவுக்கும் தப்பான உறவு இருக்கு. என்னை அவர் பையனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சுட்டா சம்பந்தி முறையில் எப்பவும் எங்க வீட்டுக்கு வந்துட்டுப் போலாமேனு நினைச்சுத்தான் இப்படி ஒரு ஏற்பாடு செஞ்சாங்க.
இந்தக் கல்யாணத்தை நிறுத்த எவ்வளவோ முயற்சி பண்ணினேன். முடியலை. 'கல்யாணத்துக்கு மறுத்தா நான் தூக்குப் போட்டு செத்துப் போயிடுவேன்'னு எங்க அம்மா மிரட்டினாங்க. வேறுவழியில்லாம ஒத்துக்கிட்டேன். ஆனா எனக்கு மனசு ஆறல. ரெண்டுபேரையும் பழிவாங்கணும்னு மனசு துடிச்சுது. 'முதல் இரவில்' என்னை அவர் தொட வந்தப்போ நெருப்புக் குச்சியை கிழிச்சு என் நெஞ்சில் போட்டு காயப்படுத்திட்டு கத்த ஆரம்பிச்சேன். அந்த இடத்துல தீக்காயம் ஆகிப்போச்சு. காலையில இதையே காரணம் சொல்லி புகுந்த வீட்டை விட்டுக் கிளம்பி வந்துட்டேன். எங்கம்மாவுக்கு கணவரா (கள்ளக் காதலன்) இருந்தவரோட பையன் எனக்கு அண்ணன் முறைதானே!'' என்ற அந்தப் பெண், விடியோகிராபர் முன் னாலேயே அந்த ஆல்பத்தையும் விடியோ காஸெட்டை யும் மண்ணெண்ணை ஊற்றிக் கொளுத்தியிருக்கிறாள்.
அரவக்குறிச்சி அருகே நடந்த சம்பவம்இ இன்னொரு கல்யாண வேதனை.
முகூர்த்த வேளை நெருங்க.. மணமேடையில் அமர்ந்திருந்த மணமகள் படு டென்ஷனாகக் காணப்பட்டாள். நேரம் ஆக ஆக கழுத்தில் போட்ட மாலையில் இருந்து பூக்களைப் பிய்த்து போட்டபடி இருந்தாள். மணமகளின் காதில் மாப்பிள்ளை அடிக்கடி 'டென்ஷன் ஆகாதே' என சொல்லிக் கொண்டிருக்கஇ மணமகளை கண்ணால் மிரட்டிக் கொண்டிருந்தார் அவளது அப்பா.
தங்களது பெற்றோர்களுக்கு மணமக்கள் இருவரும் பாதபூஜை செய்யும் நேரம் வந்தது. மாப்பிள்ளை பாதபூஜையை செய்து முடித்ததும் பெண்ணிடம், 'டென் ஷன் ஆகாம பாதபூஜை பண்ணும்மா' என்றிருக்கிறார்.
அடுத்த விநாடி, 'பளார்' என சற்றும் எதிர்பாராத நிலையில் மாப்பிள்ளையின் கன்னத்தில் ஓர் அறை விட்டாள் மணமகள். அதிர்ச்சியில் நிலை குலைந்து போனார் மாப்பிள்ளை. ''கோபப்படாமல் செய்ய வேண்டிய காரியம் இது..‘‘ என்று புரோகிதர் அட்வைஸ் செய்ய, அவருக்கும் விழுந்தது அறை!
சூடாகிவிட்ட மாப்பிள்ளை வீட்டார், ''இப்படி ஒரு பைத்தியக்காரப் பெண்ணை கட்டி வைக்கப் பார்த்தீங்களே..‘‘ என மல்லுக்கு நிற்க, ''பொண்ணுக்கு பைத்தியம்னு சொன்னா யாரும் கட்டிக்க மாட்டாங்கப்பா‘' என பெண்ணின் தந்தை மன்னிப்பு கேட்க.. அப்படியே நின்று போனது நாகஸ்வர ஓசை.
இப்படி பாதியில் நிற்கும் திருமணங்கள் பற்றி மனநல மருத்துவர் ஒருவரிடம் பேசியபோது, ''ஒரு சில திருமணங்கள் வேண்டுமானால் ஏதாவது விநோதமான காரணங்களால் தடைபட்டிருக்கலாம். ஆனால், பெரும்பாலான திருமணங்கள் தடைபட காரணமே, அந்த திருமணத்தில் பெண்ணின் விருப்பம் என்ன என்று அறிய முற்படாததுதான்.
பெண்ணுக்குப் பதினாறு வயசு ஆனாலே அவளை எப்படியாவது வீட்டைவிட்டு அனுப் பிடணும்னு பல பெற்றோர்கள் அவசரப்பட றாங்க. திருமண விஷயத்துல ஒரு பையன் கிட்ட அபிப்பிராயம் கேட்கிற அளவுக்கு பொண்ணுகிட்டயும் கேட்கற நிலைமை என்னிக்கு வருதோ அன்னிக்குத்தான் இந்தச் சிக்கல்களெல்லாம் தீரும்..‘‘ என்று வருத்தத்தோடு சொன்னார் அவர்.
நன்றி
ஜுனியர் விகடன்
30.07.03