11-10-2004, 12:38 AM
நிறைஞ்ச மனசு
நடிப்பு : விஜயகாந்த், சூசன், மஹிமா, மனோரமா மற்றும் பலர்
இசை : கார்த்திக் ராஜா
இயக்கம் : சமுத்திரகனி
அதிரடி சண்டைக்காட்சிகள், தீவிரவாதிகள், அரசியல் பஞ்ச் வசனங்கள் அதிகம் இல்லாத விஜயகாந்த் படம். இதில் கதைதான் ஹீரோ. அதில் அய்யனார் என்ற கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறாராம் விஜயகாந்த். உன்னைச் சரணடைந்தேன் வெற்றிக்குப் பறகு அதே யதார்த்தமான கதைப் போக்கில் சமுத்திரகனி இயக்கும் படம் என்பதால் குடும்பத்துடன் கண்டுகளிக்கலாம் என்கிறார்கள். மனசு நிறைந்துவிடுமா?
அட்டகாசம்
நடிப்பு: அஜித், பூஜா, மகாதேவன், பாபுகண்டன், சுஜாதா மற்றும் பலர்
இசை: பரத்வாஜ்
இயக்கம்: சரண்
திரையுலகில் முதலிடத்தைப் பிடிக்கிற ரேஸில் அஜித் பெரிதும் நம்பியிருக்கும் படம். வாலி, வில்லன்படங்களை அடுத்து மீண்டும் இரட்டை வேடம். ஆனால் ஒரே ஹீரோயின் பூஜா. வில்லன்கள் அதிகமாக நடிக்கும் படமாம். எனவே அடிதடிக்கு பஞ்சமிருக்காது. தூத்துகுடி தாதா, டிரைவிங் ஸ்கூல் நடத்துபவர் என்ற இரு பாத்திரங்களில் அஜித்தும், ஃபாரின் ரிட்டர்ன் பெண்ணாக பூஜாவும் கலக்குகிறார்கள். அஜித் அட்டகாசப்படுத்துவாரா _ வசூலில்.
மன்மதன்
நடிப்பு : சிம்பு, ஜோதிகா, மந்த்ராபேடி, யானாகுப்தா, சிந்துதொலாணி, அதுல் குல்கர்ணி, கவுண்டமணி
கதை, திரைக்கதை, வசனம்: சிம்பு
இசை: யுவன்ஷங்கர் ராஜா
இயக்கம்: முருகன்
முதல் முறையாக சிம்பு, கதை, திரைக்கதை வசனம் எழுதி கிட்டத்தட்ட டைரக்டராக அவதாரம் எடுத்திருக்கும் படம். தீபாவளிக்கு வரும் படங்களில் பெரிய பட்ஜெட் படம் இதுதான் என்கிறார்கள். முதல்முறையாக சிம்புவுடன் ஜோதிகா இணைகிறார். முதல்முறையாக தமிழில் கிரிக்கெட் புகழ் மந்த்ராபேடி நடிக்கிறார். கவுண்டமணி கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கலாய்த்திருக்கிறார்.
உலகத்தில் எத்தனை விஷயங்கள் ஏமாற்றுவதற்கு இருக்கு. லவ் பண்ணி ஏமாத்தாதீங்க என்பதுதான் கதையின் கரு.
சிம்பு ஜெயிப்பாரா?
சத்ரபதி
நடிப்பு: சரத்குமார், நிகிதா, வடிவேல், மகாதேவன், இளவரசு மற்றும் பலர்...
இசை: ஷி.கி. ராஜ்குமார்
இயக்குநர்: ஸ்ரீமகேஷ்.
சமூகத்தின் மீது அக்கறை கொண்ட, காயப்பட்ட இளைஞனின் கோபம்தான் படத்தின் கரு. ஹீரோயின் நிகிதா சமையல் கலை மாணவியாக நடிக்கிறார். ஐந்து பாடல்கள். ஐந்து ஃபைட் என்று பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி இருக்கிறது சத்ரபதி. சரத்தும் நிறைய ரிஸ்க் எடுத்து உழைத்திருப்பதால் மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் புதுமுக இயக்குநர் ஸ்ரீமகேஷ்.
கிரிவலம்
நடிப்பு : ஷாம், ரிச்சர்ட், ரோஷிணி, ரமேஷ்கண்ணா, சார்லி
இசை: தேவா
இயக்கம்: ஷிவ்ராஜ்.
ஷாம், ரிச்சர்ட், ரோஷிணி ஆகிய மூன்று பேரைச் சுற்றிலும் விறுவிறுப்பாக த்ரில்லிங்காக நகரக் கூடிய கதை. ரோஷிணியிடம் ஒரு ரகசியம் இருக்கிறது. ரிச்சர்ட் அந்த ரகசியத்தை மறைக்கிறார். ஷாம் அந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்கிறார். இந்த மூவரும் ஒருவரையருவர் பழிவாங்கத் துடிப்பது கதையாம். கிரி என்பது ரிச்சர்ட்டின் கேரக்டர் பெயர். அவரைச் சுற்றி கதை வலம் வருவதால் கிரிவலம் என்பது தலைப்பு. அடிதடி படத்தை இயக்கிய ஷிவ்ராஜ் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.
ட்ரீம்ஸ்
நடிப்பு: தனுஷ், தியா, பாரு, பிரமிட் நடராஜன், ராஜேஷ் மற்றும் பலர்
இசை: பரத்வாஜ்
இயக்கம்: கஸ்தூரி ராஜா
சக்தி என்ற பெயரில் தனுஷ் கல்லூரி மாணவனாக களம் இறங்கி இருக்கும் படம். அவர் சந்திக்கும் காதல், கனவுகள், அனுபவங்கள்தான் படத்தின் கதை. மார்டன் ஹீரோயினாக தியாவும், ஹோம்லி ஹீரோயினாக பாருவும் வலம் வருகிறார்கள். இதுவரை கிராமத்துக் காதல்கதையைச் சொல்லி வந்த கஸ்தூரிராஜா, தன் மகன் மூலம் நகரத்து காதல் கதையைச் சொல்லும் படம். கோர்ட், கேஸ் என்று பல பிரச்னைகளைத் தாண்டி தீபாவளிக்கு வருகிறது. கல்லூரி வாழ்க்கை தரும் பாடங்கள்தான் படத்தின் கரு.
இவை தவிர சத்யராஜ் கலக்கலாக நடித்திருக்கும் ‘மகாநடிகன்’, புதுமுகங்கள் இணைந்திருக்கும் ‘அயோத்தியா’, ‘ஜனனம்’ ஆகிய படங்களும் தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும் என்று கோலிவுட் செய்திகள் கூறுகின்றன.
_ வீ. மீனாட்சிசுந்தரம்
படங்கள்: சித்ராமணி
kumudam.com