11-09-2004, 10:30 PM
Quote:எங்கும் மங்கையவள்...மலரே!
தன்னை மலர் என்று
விழித்ததும் இல்லை
அது போல் நினைத்ததும் இல்லை...
பாவலர்கள் பெண்களை
மலர் என்பர் மணியென்பர்
தத்தம் கற்பனைக்கேற்றாற்போல்
உருவகிப்பர்..
முளையாகி மொட்டாகி
இதழ்விரித்து அழகு செய்வாய்
மகரந்தத் துகள்களிலே
தேன்குழைத்து இன்சொரிவாய்
பறந்துவரும் வண்டினத்தை
மேல்தாங்கி விருந்தளிப்பாய்
தேனுண்ட வண்டினத்தை
துறந்தும் தனித்திருப்பாய்
அழகான உருத்துறந்து
பிஞ்சாகிக் காயாகி
அவையே நீயாகி
அடுத்த சந்ததிக்காய்
உன்னை நீமறைப்பாய்
எனினும்
சந்திப் பெருக்கத்துள்
நீயே அகத்திருப்பாய்!
மலரே!
நீ பெண்தானே?! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

