07-27-2003, 04:53 AM
தமிழ் மக்களின் கைக்கூலியென சிங்கள மக்கள் பலரும் என்னை விமர்சிக்கின்றனர். நாடாளுமன்றத்தில் நான் உரையாற்றும்போது சில சமயங்களில் ~கொட்டி பந்தங்காரயா| புலிகளின் கையாளென ஜே.வி.பி. எம்.பிக்களால் விமர்சிக்கப்பட்டவன். இத்தகைய முத்திரைகள் குத்தப்பட்ட எனக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் காட்டிய எதிர்ப்பு மன வேதனையைத் தருவதாக உள்ளது என அமைச்சர் ஜயலத் ஜயவர்த்தனா தெரிவித்துள்ளார்.

