07-27-2003, 04:51 AM
இடைத்தரகர்களின்றியே அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை நேரடியாகப் பெற்றுக்கொள்வதற்கு அரசு திட்டமிட்டிருக்கிறது.காணி அமைச்சர் ராஜிதசேனாரத்ன இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறார். ஒரு குறிப்பிட்ட வீதகழிவுடன் ஆயுதங் களைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத் திட அரசு தீர் மானித்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.உத்தேச உடன்படிக்கையின்படி விமானப்படை விமானங் களை நவீன மயப்படுத்துவதற்கு 400கோடி அமெரிக்க டொலர் களை அமெரிக்கா வழங்கவுள்ளது.கடற்படையின் ~ராடர்| கருவிகளைப் புனரமைத்து நவீன மயப்படுத்த 769 கோடி யுூரோவையும் அமெரிக்கா வழங்கும்.
திடீரென யுத்தம் மூண்டால் அதை எதிர்கொள்ள பாது காப்புப் படையினரைத் தயார்ப்படுத்திக்கொள்ளும் நோக்குடன் அரசு இத்திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது.
- இவ்வாறு அமைச்சர் சேனாரத்ன கூறியிருப்பதாக ~லக்பிம| பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.