07-27-2003, 04:51 AM
பலாலி விமான நிலையத்தின் விமான ஓடுபாதைகள் மிக வும் சேதமடைந்துள்ளதை அடுத்து அங்கு விமானங்களைத் தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று விமானப் படையினரால் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான ஓடுபாதைகளைப் புனரமைப்பதற்கு 360 கோடி ரூபா தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இப்புனரமைப்பு வேலைகள் புூர்த்தியடைய சுமார் 4 மாதங்கள் தேவைப்படும் எனவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.இதனால் விமானங்கள் ஏறி இறங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்படலாம் என்று சிங்களப் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.கடந்த காலங்களில் விமானப்படைக்குச் சொந்தமான ~அன்ரனோவ் 32| ரக விமானங்களின் இயந்திர சாதனங்கள் பழுதடைந்தமைக்கும் இந்த ஓடு பாதைகள் சேதமடைந்தமையே காரணம் என்று அவற்றைப் பரிசோதனைக்கு உட்படுத்திய குழுக்கள் தெரிவித்திருக்கின்றன.இந்தியாவின் ~கிரடிற் லைன்| நிறுவனத்தின் கடன்திட்ட அடிப்படையில் ஓடுபாதைகளைப் புனரமைப்பதற்கு இந்தியத் து}தரகத்தின் ஊடாக இந்திய அரசிடம் உதவி கோரப்பட்டி ருப்பதாகவும் இதுதொடர்பாக இந்திய அரசின் பதில் கிடைப் பதில் ஏற்பட்டுள்ள தாமதமே புனரமைப்புப் பணிகள் ஆரம் பிக்கப்படாமைக்குக் காரணம் எனவும் அந்தப் பத்திரிகைச் செய்தியில் மேலும் தெரிவிக் கப்பட்டிருக்கிறது.