07-26-2003, 10:03 PM
கெட்டிமேளம் கொட்டுற கல்லாணம்
தங்கத்தாலி கட்டுற கல்யாணம்
பூவிலங்கு மாட்டுற கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்கள் கல்யாணமடி கல்யாணம்
வெத்தலை பாக்கு வைச்சு
அதிலே ஊரை வரவழைச்சு
குத்துவிளக்கு வைச்சு நடுவே
கோலம் வரைஞ்சு வைச்சு
மாவிலைப் பந்தலில்
மாப்பிள்ளைப் பையன் மாலையிடுவானாம்
வண்ணச் சேலை அணிந்தவள்
மாலை கொடுத்தவன் காலைத் தொடுவாளாம்
இந்த ஏமாளிக்கும் கோமாளிக்கும்
கல்யாணமாம் கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்கள் கல்யாணமடி கல்யாணம்
மஞ்சளைப் பூசிக்கிட்டு
காலிலே மிஞ்சி அணிஞ்சுக்கிட்டு
அஞ்சி நடந்துக்கிட்டு
மாமியார் சொன்னதைக் கேட்டுக்கிட்டு
வீட்டுச் சிறையிலே கூட்டுக்கிளியென
பெண்ணுமிருப்பாளாம்
அவள் கண்ணும் கலங்கிட
கட்டிய புருசன் ஆட்டிப் படைப்பானாம்
அந்தக் கோணங்கிக்கும் பூங்கொடிக்கும்
கல்யாணமாம் கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்கள் கல்யாணமடி கல்யாணம்
பட்டுச் சிறகடிக்கும் நானொரு
சிட்டுக் குருவியடி
கட்டுக் கடங்காமல் மலையில்
கொட்டும் அருவியடி
பாடிப்பறக்கவும் ஆடித்திரியவும் ஆசைபிறக்குமடி
அந்தி மாலை அழகிலும் சோலை அழகிலும்
இன்பம் பிறக்குமடி
வண்ண மயில்களுக்கும் மந்திகளுக்கும்
கல்யாணமாம் கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்கள் கல்யாணமடி கல்யாணம்
படம்- சந்ரோதயம்
பாடல் -வாலி
பாடியவர்கள்- பி.சுசீலா
இசை- எம்.எஸ்.வி.
தங்கத்தாலி கட்டுற கல்யாணம்
பூவிலங்கு மாட்டுற கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்கள் கல்யாணமடி கல்யாணம்
வெத்தலை பாக்கு வைச்சு
அதிலே ஊரை வரவழைச்சு
குத்துவிளக்கு வைச்சு நடுவே
கோலம் வரைஞ்சு வைச்சு
மாவிலைப் பந்தலில்
மாப்பிள்ளைப் பையன் மாலையிடுவானாம்
வண்ணச் சேலை அணிந்தவள்
மாலை கொடுத்தவன் காலைத் தொடுவாளாம்
இந்த ஏமாளிக்கும் கோமாளிக்கும்
கல்யாணமாம் கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்கள் கல்யாணமடி கல்யாணம்
மஞ்சளைப் பூசிக்கிட்டு
காலிலே மிஞ்சி அணிஞ்சுக்கிட்டு
அஞ்சி நடந்துக்கிட்டு
மாமியார் சொன்னதைக் கேட்டுக்கிட்டு
வீட்டுச் சிறையிலே கூட்டுக்கிளியென
பெண்ணுமிருப்பாளாம்
அவள் கண்ணும் கலங்கிட
கட்டிய புருசன் ஆட்டிப் படைப்பானாம்
அந்தக் கோணங்கிக்கும் பூங்கொடிக்கும்
கல்யாணமாம் கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்கள் கல்யாணமடி கல்யாணம்
பட்டுச் சிறகடிக்கும் நானொரு
சிட்டுக் குருவியடி
கட்டுக் கடங்காமல் மலையில்
கொட்டும் அருவியடி
பாடிப்பறக்கவும் ஆடித்திரியவும் ஆசைபிறக்குமடி
அந்தி மாலை அழகிலும் சோலை அழகிலும்
இன்பம் பிறக்குமடி
வண்ண மயில்களுக்கும் மந்திகளுக்கும்
கல்யாணமாம் கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்கள் கல்யாணமடி கல்யாணம்
படம்- சந்ரோதயம்
பாடல் -வாலி
பாடியவர்கள்- பி.சுசீலா
இசை- எம்.எஸ்.வி.

