Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜெயலலிதாவின் அதிரடிப்படை செய்த சில்மிசம்...!
#1
<b>அதிரடிப்படை வீரரின் ஈவ் டீசிங்... ! - மக்கள் செருப்படி...!!</b>

வீரப்பனைப் பிடித்த சிறப்பு அதிரடிப் படையில் இடம் பெற்று முதல்வர் ஜெயலலிதாவிடம் ரூ. 3 லட்சம் பரிசு, வீட்டு மனை, பதவி உயர்வு, பதக்கம் வாங்கிய அதிரடிப்படை வீரர்களில் ஒருவர், இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்து பொது மக்களிடம் செருப்படி வாங்கினார்.

சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்ட தமிழக அதிரடிப்படையில் இடம் பெற்றிருந்தவர் காவலர் கண்ணன். திருச்சியைச் சேர்ந்தவர். தற்போது இவருக்கு தலைமைக் காவலர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

சொந்த ஊரான திருச்சி வந்த இவர், பஸ்ஸில் சத்தியமங்கலம் அதிரடிப்படை முகாமுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

பஸ் கரூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, அதில் பயணம் செய்த ஒரு பெண்ணிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதை அந்தப் பெண் தட்டிக் கேட்டபோது, நான் அதிரடிப்படை வீரன், என்னை யாரும் ஒன்னும் செய்ய முடியாது என்று வாய்ச்சவடால் பேசினார்.

மேலும் தொடர்ந்து அப் பெண்ணிடம் திமிராக சில்மிஷத்தைத் தொடர்ந்தார். இதையடுத்து அந்தப் பெண் கூச்சலிட்டு பஸ்சை நிறுத்தினார். கோபமடைந்த பயணிகள் ஆத்திரத்துடன் அதிரடிப்படை வீரர் கண்ணன் மீது பாய்ந்தனர்.

நிலைமை விபரீதமாவதை உணர்ந்த கண்ணன், பஸ் நின்றதும் கீழே இறங்கி ஓடியுள்ளார். ஆனால், பயணிகள் அவரை விரட்டிச் சென்று பிடித்தனர். பயணிகளும், சாலையில் சென்று கொண்டிருந்த பொது மக்களும் சேர்ந்து கண்ணனை அடித்து துவம்சம் செய்தனர்.

வீரப்பனை தேடுதறா சொல்லி மலைப் பகுதி பெண்களிடம் இதே வேலையைத் தான் அதிரடிப்படையினரில் சிலர் செய்தார்கள் என்று ஒரு சிலர் சூட்டைக் கிளப்பிவிட, அடிஉதை அதிகமானது. சில பெண்கள் அவருக்கு செருப்படியும் தந்தனர்.

தர்ம அடியில் நிலை குலைந்த கண்ணனை கரூர் போலீஸாரிடம் பொது மக்கள் ஒப்படைத்தனர்.

சமீபத்தில் நடந்த பாராட்டு விழாவின்போது பேசிய அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார், அதிரடிப்படை வீரர்கள் யாரும் எந்தவித தவறான செயலிலும் ஈடுபடக் கூடாது. அதிரடிப் படையின் மாண்பை கெடுத்து விடக் கூடாது என்று அறிவுரை கூறியிருந்தார்.

அவர் சொன்ன வாய் முகூர்த்தமோ என்னவோ, அதிரடிப்படை வீரர் ஒருவர் பெண் விவகாரத்தில் பொது மக்களிடம் நாறியுள்ளார்.

thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
ஜெயலலிதாவின் அதிரடிப்படை செய்த சில்மிசம்...! - by kuruvikal - 11-09-2004, 11:32 AM
[No subject] - by tamilini - 11-09-2004, 03:34 PM
[No subject] - by கறுணா - 11-09-2004, 04:09 PM
[No subject] - by Bond007 - 11-09-2004, 05:16 PM
[No subject] - by கறுணா - 11-09-2004, 08:47 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)