11-09-2004, 03:18 AM
கவிஞனே....
மலர் எனக்கு
அழகு கொடை
அழகழகாய்
சந்ததி தந்திட
சத்தியமாய் அது
எனக்குத் தேவை....!
மங்கை அவளுள்
அழகு திமிர்..!
அவள் கொண்டது
இரு இதழ் அல்ல
சொல் கொண்டு கொட்டும்
நச்சுக் கொடுக்குகள்...!
கண்ணி வைத்து
பறந்து திரியும் அவள்
கூந்தலுக்குள்
ஏன் சிக்கியது உன் கண்கள்..??!
வஞ்சகி அவளிடத்தில்
நான் அனுபவித்தேன்
கொடுங்கோல் சிறை
உடல் வாடி அழகொடிந்து
உயிர் வீழும் வரை....
உனக்கும் வேண்டுமோ அக்கதி...!
இளைய கவியே....
நீ பழைய பஞ்சாங்கமல்ல
பழைய பல்லவி பாட...!
புரட்சி உலகம் படைக்க
புறப்பட்ட வரிப்புலி...!
வஞ்சியவள் மெய்யழகில்
மெய் மறந்து உளறாதே
மெய்யாய் நீயும் வீழ்வாய்
பாதாளச் சிறையில்
பறிபோகும் உன்
அழகு சுதந்திரம்....!
பருவ மயக்கத்தில்
பரத்தை அவள் பொய்யழகில்
தடக்கி விழாதே...!
மலர் நான்
மங்கையிடம்
கண்ட உண்மை
உன் கவிக்கு பரிசாய்
தருகின்றேன்
கற்றுத் தேறிக்கொள்
தவறுகள் தொடராதே
இன்றே திருத்திக் கொள்.....!
மலர் எனக்கு
அழகு கொடை
அழகழகாய்
சந்ததி தந்திட
சத்தியமாய் அது
எனக்குத் தேவை....!
மங்கை அவளுள்
அழகு திமிர்..!
அவள் கொண்டது
இரு இதழ் அல்ல
சொல் கொண்டு கொட்டும்
நச்சுக் கொடுக்குகள்...!
கண்ணி வைத்து
பறந்து திரியும் அவள்
கூந்தலுக்குள்
ஏன் சிக்கியது உன் கண்கள்..??!
வஞ்சகி அவளிடத்தில்
நான் அனுபவித்தேன்
கொடுங்கோல் சிறை
உடல் வாடி அழகொடிந்து
உயிர் வீழும் வரை....
உனக்கும் வேண்டுமோ அக்கதி...!
இளைய கவியே....
நீ பழைய பஞ்சாங்கமல்ல
பழைய பல்லவி பாட...!
புரட்சி உலகம் படைக்க
புறப்பட்ட வரிப்புலி...!
வஞ்சியவள் மெய்யழகில்
மெய் மறந்து உளறாதே
மெய்யாய் நீயும் வீழ்வாய்
பாதாளச் சிறையில்
பறிபோகும் உன்
அழகு சுதந்திரம்....!
பருவ மயக்கத்தில்
பரத்தை அவள் பொய்யழகில்
தடக்கி விழாதே...!
மலர் நான்
மங்கையிடம்
கண்ட உண்மை
உன் கவிக்கு பரிசாய்
தருகின்றேன்
கற்றுத் தேறிக்கொள்
தவறுகள் தொடராதே
இன்றே திருத்திக் கொள்.....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

