11-07-2004, 01:29 PM
சோழியான்
நீங்கள் குறிப்பிட்ட விடயங்கள் நடக்காமலில்லை.
அதே நேரம் கடந்த வருடம் 44வயது நிரம்பிய ஒரு இலங்கைத் தமிழ்ப் பெண் தனது நான்கு குழந்தைகளையும், கணவரையும் விட்டு விட்டு தனது மகனின் 22 வயது யேர்மனிய நண்பனுடன் போய் விட்டா. இது நடந்தது வடக்கு யேர்மனியின் பிரபல்யமான ஒரு நகரில்.
ஒரு கடைக்குச் சொந்தக்காரரான இன்னொரு தமிழரின் மனைவி கணவர் வேறு பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்ற கோபத்தில் அவரை விட்டு இன்னொருவருடன் சேர்ந்து வாழத் தொடங்கியது மட்டுமல்லாது அவரது கடையின் முன்னாடியே போயிருந்து புதிய நண்பருடன் சல்லாபித்துள்ளார். இது நடந்ததும் வடக்கு யேர்மனியில்.
பல தமிழ்ஆண்கள் தமது மனைவியருக்கு வயதாகி விட்டது என்பதற்காக சிறு பெண்களைத் தேடும் பல சம்பவங்கள் யேர்மனி, டென்மார்க், கனடா.. என்று உலகளாவிய ரீதியில் நடக்கிறது.
ஒரு ஆண் தனது மகனுக்குப் பெண் பார்ப்பதாகச் சொல்லி ஊருக்குப் போய் பெண் பார்த்துக் கூட்டி வந்து, தானே அப்பெண்ணுடன் வாழ்கிறார்.
இப்படியான சமூகச் சீரழிவான விடயங்கள் எமது தமிழ்ச்சமூகங்களில் தாராளமாகவே நடக்கிறது. இது இன்று நேற்றல்ல. ஊரிலும் சில குடும்பங்களில் நடந்துதானிருக்கின்றன. ஆதலால் நீங்கள் சொன்ன உதாரணத்தை வைத்து எங்கள் ஊர்க்காதல் சிறந்தது என்றோ ஐரோப்பியக் காதல் பிழையானது என்றோ சொல்லி விட முடியாது. மேற்கூறியதெல்லாம் காதல்களே அல்ல.

nadpudan
alai
alai