Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"கோணல் கறுணாவை" வாழ்த்துங்கள்!!!
#8
கருணாவிற்கு முன்னாள் போராளியின் கடிதம் - 2


என் முன்னாள் தளபதி கருணாவிற்கு,


மேலுமொரு கடிதம் எழுத சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி.

போன கடிதத்தை நான் எழுதியதற்கு என் சுயநலனே முக்கிய காரணம். என் மனதை அரித்துக்கொண்டிருக்கும் பல சுமைகளுக்கு வடிகால் தேடவேண்டிய கட்டாயம் எனக்கிருந்தது. என் மனச்சாட்சிக்கு நான் ஏதாவது பதில் சொல்லியாக வேண்டியிருந்தது. அஞ்ஞாதவாசம் செய்வதால் என் மனவுணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு ஆறுதல்பெற என்னருகே என் மொழி தெரிந்த நண்பர்கள் இல்லை. ஆனால், என் மடலுக்கு உலகெங்கணும் இருந்து வந்த பதில் கடிதங்களைக் கண்டபோது பெரும் ஆறுதலாக இருந்தது. குறிப்பாகத் தாயகத்தில் இருந்து வந்த கடிதங்கள் என்னைத் தெம்பூட்டின. என் தவறை நான் உணர்ந்த கணமே தமிழன்னை என்னை மன்னித்துவிட்டாள் என்ற அந்த ஒரு கடிதம் போதும். என் சாவு நிம்மதியானதாக இருக்கும். உங்களுக்கும் எத்தனையோ வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், அதை உணர்ந்துகொள்ள முடியாத படி உன்மத்தம் உங்கள் அறிவை புறந்தள்ளிற்று.

உங்களின் பாணியில் அமைந்த பதில் கடிதங்களும் சில வந்திருந்தன. அவற்றின் சொற்பிரயோகங்களில் எல்லாம் உங்கள் பாரம்பரிய நெடிகலந்த ~அந்த| ரகமான வார்த்தைகள். கைக்கெட்டாத தொலைவிலிருப்பவர்களை அச்சமூட்ட நீங்கள் கடைப்பிடிக்கும் வழக்கமான உத்தி அது என்று எனக்குத் தெரியாதா? உங்களின் செயற்பாடுகளின் தரம் தாழ்ந்துகொண்டே போகும்போது ஒரு தமிழன் என்று நினைத்து உங்களுக்காகத் துயரப்படுகிறேன். ஆனால் உங்களின் உண்மையான அடிப்படைகள் என்ன என்பது எம் மக்களுக்குத் தெரியாமல் போகக்கூடாது. பேரினவாத கட்சிகளுக்கு வால்;பிடித்து வளர்ந்ததே உங்கள் பரம்பரை என்பதை ஊரறியும். இனி உலகும் அறிந்து கொள்ளும். யு.என்.பி.; கட்சியின் உள்ளுர்; பிரமுகரான உங்கள் மாமனாரின் செல்வாக்கில் சகோதரிகள் தொழில் பெற்று கொஞ்சம் கொஞ்சமாக நிமிர்ந்தது உங்களின் குடும்பம். அந்;த நன்றிக்கடன்களின் சாயல் உங்களின் முற்காலச் செயற்பாட்டில் அவ்வப்போது தொனித்ததைப் பலர் கவனிக்காது விட்டிருக்கலாம். பின்பு அதே மாமனார், கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினருக்கு அடுத்த நிலையில் இருந்ததையும் பலர் மறந்திருக்கலாம். நான் எப்படி மறப்பது?

சூறாவளிக்கு முன்பு இரண்டு நேரப் பாடசாலை நடந்த காலத்தில் மதிய உணவிற்காக நீங்கள் எல்லோரும் வீட்டுக்கு வருவீர்கள். உங்கள் அண்ணனும் அப்போது சிறியவாராகவே இருந்தார். பசி உங்கள் வயிற்றைக் கிள்ளும். வேட்டைத்தொழில் செய்துவந்த உங்களின் தகப்பனார் நல்ல உழைப்பாளிதான். இருந்தாலும் அவருக்கு எப்போதுமே வேட்டை கிடைத்து விடாது. உங்களின் பசி பொறுக்காத சகோதரி தென்னை மரத்தில் ஏறி இளநீர் பிடுங்குவார். ஆளுக்கொன்றாக குடித்து வழுக்கல், கயறு என்பவற்றையும் சாப்பிட்டுவிட்டு எல்லோரும் பின்னேரப் பள்ளிக்குப் போவீர்கள். இரவுநேரச் சமையல் கூட அளவுச்சாப்பாடாக இருக்கும். பாத்திரத்தில் இருக்கும் உணவு போதாது என்று எத்தனை நாள் தட்டை எறிந்திருப்பீர்கள். அப்போது உங்கள் அம்மா நினைத்திருப்பாரா என் வீட்டில் ஒரு துரோகி வளர்கிறான் என்று? பரிவாகத்தானே உங்களை வளர்த்தார்கள். இந்தத் தமிழ்ச் சமூகம் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தது? ~முரளி| என்ற பெயரை உச்சரிக்க முடியாமல் ~முதலி| என்று அழைத்த உங்களின் பாட்டி, உண்மையிலேயே நீங்கள் ஒரு சுயநல முதலை என்பதை அன்றே அறிந்திருந்தாளோ?

உங்களின் இப்போதைய அடாவடிச் சுபாவத்தின் அடிப்படையை என்னால் நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. கொலைகளும் அடிதடிகளும் விசங்கேணிக்குப் புதிதல்ல. உங்களின் தகப்பனார் குடிவெறியில் ஏற்பட்ட அடிதடியில் உள்ளங்கையில் கத்திக்குத்து வாங்கி வலது சுட்டுவிரலை இன்றுவரை மடக்க முடியாது இருப்பவர். உங்களின் சகோதரியொருவர் இஸ்லாமியர் ஒருவரை மணந்து இஸ்லாமிய சமயத்தைக் கைக்கொண்டிருப்பவர். இந்து கிறிஸ்தவப் பிரச்சனையால் உங்களின் நெருங்கிய உறவுகளுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் வேட்டைக்குப் போவதாக அழைக்கப்பட்டு நஞ்சுச் சாராயம் கொடுத்து ஒருவர் கொல்லப்பட்டவர். இன்னுமொருவர் பாலியல் தொடர்பான பிணக்கொன்றில் தொண்ணு}றுகளின் ஆரம்பப்பகுதியில் தலையில் அடித்துக் கொல்லப்பட்டவர். இந்தப் பின்னணியைக் கொண்ட உங்களிடம் தயவு தாட்சணியத்தை எதிர்பார்ப்பது உண்மையிலேயே மடவேலை. ஏன்னம்மான் நஞ்சூட்டப்பட்ட கள்ளை நீங்கள் திருடிக்குடித்து மயிரிழையில் உயிர்தப்பிய அந்தச் சம்பவத்தை இன்னும் மறந்திருக்க மாட்டீர்கள். தாங்கள் என்றும் வெளியில் கூறாத, கூறவிரும்பாத அனேகர் அறியாத உங்கள் அடிப்படைகள் அரங்கேறுகின்றன என்று அவதியுறுகிறீர்களா? (நஞ்சென்றவுடன் இன்னும் ஒரு சம்பவம் சட்டென ஞாபகத்துக்கு வருகிறது. உங்கள் மனைவியின் வாகனத்தில் கட்டுக்கட்டாக இலட்சக் கணக்கில் காசைக் கண்டேன். என்று கூறியதற்காக மீனகத்தில் உங்களால் நஞ்சூட்டி கொல்லப்பட்ட எம் நண்;பன் ரஞ்சனை எப்படி மறக்க முடியும்? எத்தனை களங்கள், எத்தனை விழுப்புன்கள்...)

இந்தளவு அதீத பின்னணியில் இருந்த உங்களைச் சாக்கடையில் இருந்து எடுத்தது போல எடுத்து வளர்த்தது யாரென்பது நீங்கள் மூடிமூடிப் பொத்தினாலும் எல்லோருக்கும் தெரியும். நீங்கள் சொல்லிக்கொள்ளும் பிரதேசப் பற்று என்பது வெறும் வெத்துவேட்டு என்பதும் எல்லோருக்கும் புரியும். இன்று நீங்கள் சொல்வதாகச் சொல்லப்படும் வெளியிடப்படும் விசயங்களில் உங்களுடையது எது அல்லாதது எது என்பதை நான் நன்றாக அறிவேன். அண்மையில் மட்டக்களப்பு நகரில் சீருடையணிந்தவர்கள் விநியோகித்ததாம் என்று ஒரு துண்டுப்பிரசுரத்தை நண்பனொருவன் மின்னஞ்சல் நகலில் அனுப்பியிருந்தான். எழுத்துப் பிழைகளோடு சேர்த்து தகவல் பிழைகளும் கொண்ட அந்தத் துண்டுப் பிரசுரம் உங்களின் சார்பில் ஏரிக்கரை வீதி என்ற விலாசத்தில் வெளியாகியிருந்தது. ரமேசண்ணனுக்கு பெண் பார்த்துக் கட்டிவைத்தது நீங்கள் தான் என்பது எல்லாருக்கும் தெரியும். அப்படியிருக்க ரமேசண்ணனின் மனைவி சூசையண்ணனுக்குச் சகோதரி என்று சொதப்பும் அளவிற்கு நீங்கள் மக்கன் அல்ல என்பதும் தெரியும். மூன்றாந்தரப் பிரச்சாரங்கள் எல்லாம் உங்களின் பெயர் தாங்கி வருகின்றன. நீங்கள் நாலாந்;தரம் ஆகிவிட்ட பின்னர் எது எப்படி வந்தாலும் உங்களுக்கு என்ன. உங்களையே நீங்கள் விற்றுவிட்ட பின்பு. எத்தனையோ மணிநேரம் உங்களுக்காகக் காவல் நின்றிருக்கிறேன். அப்போது நான் தாங்கி நின்றது ஆயுதத்தை மட்டுமல்ல. உங்கள் மேல் உள்ள பயபக்தியையும்தான். என்னைப் போன்ற எத்தனை மனங்களை நொருக்கிவிட்டீர்கள் அம்மான்.

உங்களிடம் இருந்தது வீரமா முரட்டுத்தனமா என்ற சந்தேகம் எனக்கு எப்போதுமே இருந்தது. அதற்குக்காரணம் இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் நடந்த ஒரு சம்பவம். காட்டிற்குள்ளால் நகர்ந்து கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு கரடி உங்கள் எம்-16 ரைபிளைப் பிடித்துவிடுகிறது. வெலவெலத்துப்போன நீங்கள் ரைபிளை அப்படியே விட்டுவிட்டுத் தப்பியோட மற்றப் போராளிகள் அதை மீட்டுத் தருகிறார்கள். வெறும் கரடிக்கே முதுகு காட்டியதை பட்டென்று மறந்து இப்போது சிங்களக் கதிரையின் கால்களுக்கிடையில் இருந்து வீரமுழக்கம் செய்வதாக நினைத்து ஊளையிடுகிறீர்கள். வட பகுதி சமர்க்களங்களில் நீங்கள் காட்டிய ~வீரம்| பற்றி சிலர் சிலாகித்து கூறும் போதெல்லாம் அன்று என்னால் எனக்கு சிரிக்க மட்டுமே முடிந்நது. பூநகரி சண்டையைத் தவிர நீங்கள் சமர் முன்னணியில் நின்ற ஒரு சண்டையையாவது தங்களால் கூற இயலுமா? ஜெயசிக்குறு எதிர் நடவடிக்கையைத் தவிர நீங்கள் வட பகுதியில் எங்கு படை நடத்தினீர்கள் என இயம்பலாமா? (இதற்குள்ளும் நிகழ்ந்த எத்தனையோ ~அற்புதங்கள்| நான் அறிவேன்.)

என்போல வெளிநாட்டில் இருக்கும் ஒரு முன்னாள் போராளி எனக்கு எழுதிய பதில் கடிதத்தில் ~கொஞ்சம் முந்தி வந்து விட்டேன். இல்லாவிட்டால் அவனைத் தொலைத்திருப்பேன்| என்று எழுதியிருந்தார். அவரின் மன உணர்விற்கு தலைவணங்குகின்றேன். அதே பிழையை நானும் விட்டுவிட்டேனா? செஞ்சுடர் கூட உங்களால் கொல்லப்படுவதற்கு முதல்நாள் உங்களின் தமக்கையின் வீட்டிற்குப் போனபோது; அங்கே தேசத்துரோகியும் உங்களின் மைத்துனனுமான தட்சணாமூர்த்திக்கு விருந்து நடப்பதைக் கண்டு முரண்பட்டு வாக்குவாதம் செய்ததும் மீனகத்தில் பரவலாக அடிபட்ட கதை. கதை எழும்பியபோது நீங்கள் மீனகத்தில் இல்லை. மருதத்திற்குப் போய்விட்டீர்கள். மீனகத்திற்குத் திரும்பி வந்திருந்தால் பெரும்பாலும் நாட்டிற்கு நல்ல செய்தியொன்று கிடைத்திருக்கலாம்.

நீங்கள் கிளாலியில் காயப்பட்டு யாழ் வைத்திய சாலையில் இருந்ததாக வடபகுதி வைத்தியரொருவர் குறிப்பிட்டிருந்தாhர். தகவலில் தவறேதும் இல்லை அது முழுக்க முழுக்க உண்மை. அது சமர்க்களத்து விழுப்புன் அல்ல கட்டையொன்று காலை தாக்கியதால் வந்த காயம் பூநகரிச் சமருக்கு பின்னான நாளொன்றில் திருமால் பின்னோக்கிச் செலுத்திய நீலநிறக் கன்றறின் சில்லில் அகப்பட்ட தடியொன்று கிளம்பியடித்ததில் உங்களின் காலொன்று உடைந்து நீங்கள் படுக்கையில் கிடந்தது உண்மை. பூநகரிச் சமரில் காயப்பட்டதாக நீங்கள் சாடை மாடையாக கதைவிட்டிருப்பது தெரிகிறது. இந்தக் காயத்தையும் புலிபாய்நத கல்லில் நாம் இருக்கும் போது கம்பு கிழித்ததால் யேசுதாஸ் மருந்து போட்ட காயத்தையும் தவிர இயக்க வாழ்க்கையில் சிறு கீறல் கூட உங்களுக்கப் பட்டதாக எனக்கு ஞாபகமில்லை. அடடா! ஓன்றை மறந்து விட்டேன். உங்களுக்கு ஒருதடவை சூட்டுக் காயம் பட்டதுதான். ஆனால் அது துவக்கு சூடல்ல. மோட்டார் சைக்கிளின் சைலஞ்சர் சூடு. உங்கள் அருகிருந்தவர்கள் இன்னும் சிலர்; இருப்பதால் உங்கள் விருப்பத்திற்கு நீங்கள் கதைவிட முடியாது.

இந்தக் கடிதத்தைப் பார்க்கும்போது உங்களின் சிந்தனை ஒட்டம் எப்படியிருக்கும் என்பது எனக்குத் தெரியும். பிழைகளைச் சீர்செய்வதை விட அவை புலப்படும் மார்க்கத்தை அடைப்பதே உங்களின் பாணி. அந்த வகையில் உங்களோடு இருந்து உங்களின் ஆழங்களை அறிந்தபின் உயிரோடு இருந்தவர்கள் மிகவும் சொற்பம் நான் இன்னும் சில கடிதங்கள் எழுதும் வரையாவது நீங்கள் நலமாக இருக்க வேண்டு என விரும்புகிறேன். மறுபடியும் சந்திப்போம்.

-அருகிலிருந்தவன்



நன்றி தமிழ்நாதம்
¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä


Messages In This Thread
[No subject] - by கறுணா - 11-07-2004, 01:12 AM
[No subject] - by kirubans - 11-07-2004, 01:14 AM
[No subject] - by kuruvikal - 11-07-2004, 01:25 AM
[No subject] - by kavithan - 11-07-2004, 01:49 AM
[No subject] - by Suji - 11-07-2004, 01:54 AM
[No subject] - by Sriramanan - 11-07-2004, 10:43 AM
[No subject] - by paadai - 11-07-2004, 12:03 PM
[No subject] - by TMR - 11-07-2004, 01:27 PM
[No subject] - by TMR - 11-07-2004, 01:35 PM
[No subject] - by கறுணா - 11-07-2004, 02:50 PM
[No subject] - by Suji - 11-07-2004, 04:26 PM
[No subject] - by Suji - 11-07-2004, 04:36 PM
[No subject] - by கறுணா - 11-07-2004, 04:39 PM
[No subject] - by கறுணா - 11-08-2004, 04:01 PM
[No subject] - by Sriramanan - 11-08-2004, 07:05 PM
[No subject] - by paadai - 11-08-2004, 08:20 PM
[No subject] - by கறுணா - 11-08-2004, 10:27 PM
[No subject] - by Tamilavan - 11-12-2004, 01:04 AM
[No subject] - by கறுணா - 11-15-2004, 10:52 PM
[No subject] - by kavithan - 11-15-2004, 10:55 PM
[No subject] - by கறுணா - 11-16-2004, 02:56 AM
[No subject] - by வெண்ணிலா - 11-16-2004, 07:19 AM
[No subject] - by sinnappu - 11-20-2004, 11:01 AM
[No subject] - by sinnappu - 11-20-2004, 11:10 AM
[No subject] - by sinnappu - 11-20-2004, 12:12 PM
[No subject] - by shiyam - 11-20-2004, 03:04 PM
[No subject] - by ratha - 11-20-2004, 03:47 PM
[No subject] - by sinnappu - 11-20-2004, 06:49 PM
[No subject] - by aswini2005 - 11-20-2004, 07:20 PM
[No subject] - by கறுணா - 11-20-2004, 08:51 PM
[No subject] - by sinnappu - 11-20-2004, 09:18 PM
[No subject] - by sinnappu - 11-20-2004, 09:20 PM
[No subject] - by kirubans - 11-20-2004, 10:15 PM
[No subject] - by sinnappu - 11-20-2004, 10:19 PM
[No subject] - by கறுணா - 11-21-2004, 02:25 AM
[No subject] - by shiyam - 11-21-2004, 03:36 AM
[No subject] - by ratha - 11-21-2004, 12:30 PM
[No subject] - by Haran - 11-21-2004, 12:46 PM
[No subject] - by Haran - 11-21-2004, 12:53 PM
[No subject] - by gururaja - 11-21-2004, 02:22 PM
[No subject] - by gururaja - 11-21-2004, 02:53 PM
[No subject] - by sinnappu - 11-22-2004, 12:12 AM
[No subject] - by MEERA - 11-22-2004, 12:16 AM
[No subject] - by கறுணா - 11-22-2004, 01:59 AM
[No subject] - by Vasan - 11-22-2004, 09:31 PM
[No subject] - by கறுணா - 11-22-2004, 09:48 PM
[No subject] - by kavithan - 11-23-2004, 05:15 AM
[No subject] - by கறுணா - 11-23-2004, 10:00 PM
[No subject] - by sinnappu - 11-23-2004, 11:12 PM
[No subject] - by Double - 11-24-2004, 01:18 AM
[No subject] - by MEERA - 11-24-2004, 02:06 AM
[No subject] - by shiyam - 11-24-2004, 02:13 AM
[No subject] - by MEERA - 11-24-2004, 02:20 AM
[No subject] - by shiyam - 11-24-2004, 02:27 AM
[No subject] - by MEERA - 11-24-2004, 02:32 AM
[No subject] - by shiyam - 11-24-2004, 02:46 AM
[No subject] - by MEERA - 11-24-2004, 10:27 AM
[No subject] - by vallai - 11-24-2004, 11:41 AM
[No subject] - by kuruvikal - 11-24-2004, 12:02 PM
[No subject] - by kosu - 11-24-2004, 12:17 PM
[No subject] - by கறுணா - 11-24-2004, 01:03 PM
[No subject] - by MEERA - 11-24-2004, 04:32 PM
[No subject] - by Om_shanthi - 11-24-2004, 05:17 PM
[No subject] - by sinnappu - 11-24-2004, 05:52 PM
[No subject] - by ratha - 11-24-2004, 06:29 PM
[No subject] - by MEERA - 11-24-2004, 08:12 PM
[No subject] - by kosu - 11-25-2004, 01:13 AM
[No subject] - by MEERA - 11-25-2004, 02:25 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)