Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பலஸ்தீன அதிபர் யசீர் அரபாத் கோமாவில்...!
#6
<b>தொடர்ந்தும் கோமாவில் அராபத் : நிலைமை கவலைக்கிடம்</b>

பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் (வயது 75) கோமா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் உயிர் பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

இஸ்ரேலிய அரசால் கிட்டத்தட்ட வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த அராபதின் உடல் நிலை மோசமடைந்தையடுத்து ஜோர்டான் வழியாக அவர் பிரான்ஸ் கொண்டு செல்லப்பட்டார்.

பாரிசில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு லுகேமியா அல்லது புற்று நோய் இருக்கலாம் என்று கருதப்பட்டு அதற்கான உடல் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வந்தன.

இந் நிலையில் அவரது உடல் நிலை நேற்று படுமோசமடைந்தது. அவர் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார். அடுத்தடுத்து மாரடைப்புகளும் ஏற்பட்டதால், அவரது நிலைமை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது.

இந் நிலையில் அராபத் இறந்துவிட்டதாக இஸ்ரேலிய டிவி நேற்று செய்தி வெளியிட்டு புரளியைப் பரப்பியது. பின்னர் அச் செய்தி திரும்பப் பெறப்பட்டது.

இப்போதுள்ள நிலையில் அராபத் பிழைப்பது கடினமே என பாரிஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர் இறந்தால் அவரது உடலை காஸா பகுதியில் தான் அடக்கம் செய்ய அனுமதிப்போம், ஜெருசலேமில் அடக்கம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என இஸ்ரேல் அரசு கூறியுள்ளது.

ஆனால், தன்னை ஜெருசலேமில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என அராபத் ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருப்பது குறிப்பிடக்கத்தது.

இந்த இடத்தை மௌன்ட் கோவில் என யூதர்களும், ஹராம்ஏஷெரீப் என இஸ்லாமியர்களும் அழைக்கின்றனர். இந்த இடத்துக்கு இருவருமே உரிமை கோரி வருகின்றனர்.

இந் நிலையில் அராபத்தின் உடல் நிலை மிகவும் மோசமாகி வருவதால், அவரது இறந்து உடல் பாலஸ்தீனத்திற்குக் கொண்டு வரப்பட்டால், லட்சக்கணக்கான மக்கள் அங்கு குவிய வாய்ப்புள்ளது. இதையடுத்து தனது பாதுகாப்பை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by mukilan - 11-04-2004, 09:46 PM
[No subject] - by Sriramanan - 11-05-2004, 07:57 AM
[No subject] - by கறுணா - 11-05-2004, 05:27 PM
[No subject] - by vasanthan - 11-05-2004, 08:39 PM
[No subject] - by kuruvikal - 11-06-2004, 11:16 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)