11-05-2004, 11:03 PM
Eelavan Wrote:யூட் நீங்கள் கூறியவை எனக்கும் ஏற்புடையவையாகத் தான் படுகின்றன.ஆனால் புலிகளின் ஆதரவு உண்டு என்று யார் சொன்னது?
ஈழவன்,
விடுதலைப்புலிகளும் ஆதரவளித்து வருவதாக <b>தெரிகிறது</b> என்று தானே எழுதினேன்? எனக்கு அப்படி தெரிகிறது. மேற்படி ஆதரவாள÷ பிரபலமான ஆதரவு இணையத்தளம் ஒன்றை விடுதலைப்புலிகளின் புகழ்பெற்ற ஊடகத்தின் பெயரில் நடத்திவருகிறா÷. மேலும் ஐரோப்பாவில் பிரபலமான வானொலிகள் இரண்டில் ஆதரவு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறா÷. ஊரிலிருந்து கூட உடனுக்குடன் செய்திகளை பெறுகிறா÷. தமிழ்நெற்றுக்கு முதல் இவருடைய இணையத்தளத்தில் உண்மையான செய்திகள் வருகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக கருணாவின் இணையத்தளங்களை வழக்கறிஞ÷களை வைத்து மூடவைக்கும் அளவுக்கு பணம் செலவிட்டு செய்யும் முயற்சிகளை பற்றி அவை நடக்குமுதலே இந்த கருத்து களத்தில் எழுதுகிறா÷.
10 வருடங்களுக்கு முதல் நான் இணையத்தளங்களில் எழுதியவை தமக்கு பாதிப்பை தரக்கூடும் என என்னுடன் விடுதலைப்புலிகள் தொட÷புகொண்டு சொல்ல நான் எழுதுவதை விட்டுவிட்டு அவ÷கள் கேட்ட உதவிகளை செய்து கொடுக்க ஆரம்பித்தேன். நான் எழுதியவையும் ஆதரவான விடயங்கள் தான். ஆகவே, விடுதலைப்புலிகளின் ஆதரவில்லாமல் இந்த ஆதரவாள÷ இவ்வளவு செயற்திட்டங்களையும் செய்துவருகிறா÷ என்றால் நம்பும்படியாக இல்லை.
''
'' [.423]
'' [.423]

