11-05-2004, 07:38 AM
<b>Nellaiyan</b>, பிழைகள் வரும்போது சுட்டிக்காட்டுங்கள். அதை நிச்சயம் அனைவரும் வரவேற்பார்கள் என நினைக்கின்றேன். இங்கு தற்போது பல இடங்களில் தமிழ்நாதம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. இது அளவுக்கதிகமான ஒன்று. சொந்தமாக, சுய முயற்சியில் ஏராளமான விடயங்களை தொகுத்து தமிழ்நாதம் தந்து கொண்டிருக்கின்றது. முதலில் இவ்வாறான செயற்பாடுகளை / முயற்சிகளை நாங்கள் ஊக்குவிக்க வேண்டும். அதை நாம் செய்வோம். ஏதாவது தவறுகள் நடந்தால் அதை சுட்டிக்காட்டுவோம். அதை விடுத்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அவர்களைச் சோர்வடையச் செய்வதும், சிலர் தங்கள் தனிப்பட்ட கோபதாபங்களை காண்பிக்க இங்கு களத்தினைப் பாவிக்க புறப்படுவதையும் தவிர்ப்போம்.

