11-04-2004, 11:49 PM
kirubans Wrote:60களில் திராவிட இயக்கம் (அண்ணாவின் கட்சி) தமிழ் நாட்டில் கம்பராமாயணத்தைக் கொளுத்தினார்கள். கம்பர் எழுதிய ராமாயணம் காமம் சொட்டுவதுதான் காரணம். இதற்காகவே அண்ணா "கம்பரசம்" என்ற புத்தகத்தில் ராமாயணத்தின் காமம் சொட்டும் பாடல்களை விலாவாரியாக விபரித்தார். இது எதிர்மறையான விளைவுகளை உருவாக்கியதால்தான் தற்போதைய கவிஞர்கள் தரம் தாழ்ந்துள்ளார்கள்.
காமம் ஒன்றும் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய விடையமல்ல... அது நீ வெறுத்தாலும் உன்னை அந்தப் பருவத்தில் வந்தடையும்.... ஆனால் அதை
அடக்கி ஆளத் தெரிந்திருக்க வேண்டும் என்று....குருவிகளுக்கு எங்கையோ ஒரு குருஜி சொல்லித்தந்திருந்தார்... இப்ப வளர்த்தாப் பிறகு குருஜி சொன்னது உண்மையாத்தான் தெரியுது...!
எப்பையும் நிஜ உலகத்தை தரிசிக்கத் தயாராக இருக்க வேண்டுமே தவிர கற்பனை உலகைத் தரிசிக்க தயாராக்கவும் கூடாது தயாராகவும் கூடாது....அது எப்படி இருக்கும் தெரியுமா நாங்கள் போட்ட கோட்டுக்குள் நின்றுதான் எங்கள் எதிரியைப் போரிடச் சொல்வது போல....எதிரி கேட்பானா செய்வானா...???!
இலங்கையில் பழைய பாடத்திட்டத்தில் கம்பராமாயனம் ஒரு பாடம்...அப்ப அதைப்படித்தவர்கள் எல்லாம் என்ன காமுகர்களா...அதை அறிமுகப்படுத்தியவர்கள் காமுகர்களா...காமுகனுக்குத்தான் கம்பராமாயனமும் காமமாய்த் தெரிந்திருக்கும்.... பெரிய கவிஞரான கண்ணதாசன் ஒரு காவாலி.. கவிஞர் என்பதற்காக அவரின் குற்றங்களை மறைக்க முடியுமா... மறைப்பார்கள் மறைக்க முயல்வார்கள் அவரைப் போன்றோர் மட்டும்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

