Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விடியலைத்தேடும் வெண்புறாக்கள்
#4
உங்கள் நினைவலைகளை
நிஜ அலைகளாய் மறுபிரசுரம்
செய்த கவிக்கு வாழ்த்துக்கள்...!

உங்கள் வீட்டைப்போல
எங்கள் கூட்டிலும்
அதே அம்மா....
எங்கள் கூட்டின் பின் வளவுக்குள்
கிரிக்கெட் அடிக்க
கெஞ்சிக் கூத்தாடி
அவசர அவசரமாய் வீட்டுப் பாடம் பண்ணி
அனுமதி பெற்று
மகிழ்ச்சியா வளவுக்குள் இறங்க...
வெடிக்கும் துப்பாகிகள்
பெல்கள் கிணுகிணுக்கும்
புக்காராவும் அவ்ரோவும் கூட வரும்,
எடேய் குஞ்சுகளே
போங்கடா பங்கருக்க
அன்னையின் அலறல் கேக்கும்
வானத்தை விடுப்புப் பார்த்தபடி
எப் எம் ரோடியோவும் கையுமாய்
பங்கருக்குள் பதுங்கல்....
அப்பா சொல்லித்தந்த
சிங்களம் கொண்டு
அரைகுறையாய் விளங்கி
குண்டு இங்க போடப்போறாங்கள் என்று கத்த
பதறி அடிப்போர் பதட்டம் கண்டு
பயத்துடன் ஓர் ஆனந்தம்....
இப்படி நாமும் கனநாள்
கழித்ததுண்டு....!

கெலி அடித்த வெற்றுறவைகள் பொறுக்கி
கோர்வையாக்கி
கிட்டுமாமா வேஷம் போட்டது
இன்னும் நினைவில் இருக்கு....
பொன்னம்மான் பூங்காவில்
புலிக்குட்டி பார்க்க
பதுங்கிப்பதுங்கிப் போனது
ஒரு காலம்....
காலத்தால் அது பெரியோருக்கு
கனத்த நாட்கள்
நமக்கோ அவையே வாழ்வாகிப் போனதால்
இனித்ததும் உண்டு....!
மீண்டும் அவை திரும்பினும்
அன்றும் அவை இன்பமே
நாம் சின்னச் சிட்டுக்களாய் இருந்தால்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 11-04-2004, 05:53 PM
[No subject] - by வெண்ணிலா - 11-04-2004, 07:20 PM
Re: விடியலைத்தேடும் வெண்புறாக்கள் - by kuruvikal - 11-04-2004, 10:01 PM
[No subject] - by kavithan - 11-04-2004, 11:15 PM
[No subject] - by hari - 11-05-2004, 06:16 AM
[No subject] - by V.T Tamileelathasan - 11-05-2004, 12:19 PM
[No subject] - by kavithan - 11-05-2004, 03:18 PM
[No subject] - by hari - 11-05-2004, 03:23 PM
[No subject] - by kuruvikal - 11-05-2004, 03:26 PM
[No subject] - by hari - 11-05-2004, 03:31 PM
[No subject] - by hari - 11-05-2004, 03:33 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)