Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விடுதலைப்புலிகள் பத்திரிகையின் செய்தி
#8
<b>ஓஸ்லோ, டோக்கியோ பிரகடனங்கள் எந்த வகையிலும் எம்மைக் கட்டுப்படுத்தாது</b>: <i>அன்ரன் பாலசிங்கம்</i>

நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவிலும், ஜப்பானிய தலைநகரான டோக்கியோவிலும் நிகழ்ந்த உதவி வழங்கும் நாடுகளின் மாநாடுகளும் அவற்றில் நிறைவேற்றிய பிரகடனங்களும் விடுதலைப் புலிகளை எந்தவகையிலும் கட்டுப்படுத்தாதென விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும், தத்துவாசிரியருமான திரு. அன்ரன் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

ஓஸ்லோ பிரகடனம் தொடர்பாக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக தமிழ்நெட் இணையத்தளத்துக்கு நேற்றைய தினம் கருத்துத் தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையின் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு உதவி வழங்கும் நாடுகள் ஆதரவு வழங்கலாம். சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஊடாக இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணுமாறு இருதரப்பினரையும் ஊக்குவிக்கலாம். ஆனால் அரசியல் தீர்வு எவ்விதம் அமைய வேண்டுமென வரையறைகளை திணித்துவிட முடியாதென அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் நடைபெற்ற உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டை விடுதலைப் புலிகள் புறக்கணித்துள்ளனர். எனவே இந்த மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களைக் கொண்ட பிரகடனம் விடுதலைப் புலிகளை கட்டுப்படுத்த முடியாது.

விடுதலைப் புலிகள் இயக்கம் மீது தனது யோசனைகளை பலவந்தமாக திணித்துவிடும் நோக்கத்துடன் சிறிலங்கா அரசு தனது தோழமை நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் பல தீர்மானங்களை நிறைவேற்றியது.

சமாதான முயற்சியில் அந்நிய சக்திகள் அநாவசியமாக தலையிடுவதாக குற்றம் சுமத்தி டோக்கியோ பிரகனடத்தை ஏற்கனவே நாம் நிராகரித்துவிட்டோம்.

கடந்த வருடம் ஜூன் மாதம் 22ஆம் திகதி விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் விடுத்த அறிக்கையில், இலங்கையில் தலைதுாக்கிய அரசியல் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க முடியாத நிலையில், சர்வதேச சதிவலைப் பின்னலுக்குள் சராணகதி அடைந்திருப்பதாக ரணில் விக்கிரமசிங்க அரசை கடுமையாக சாடியிருந்தது.

இதனால் மூன்றாம் தரப்பு அனுசரணையுடன் நிகழ்ந்துவந்த சமாதான முயற்சிகள் சர்வதேச மத்தியஸ்தத்திற்கு திசை திருப்பப்பட்டுள்ளதாக அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான திரு. அன்ரன் பாலசிங்கம் கூறியுள்ளார்.

கூட்டாட்சி முறையை ஆராய்ந்து பார்ப்பது என்ற தீர்மானம் தொடர்பாக குறிப்பிடும் ஒஸ்லோ பிரகடனம் எதுவுமில்லையென்பதை பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஒப்புக் கொண்டமை குறித்து அவரைப் பாராட்டியுள்ள திரு. அன்ரன் பாலசிங்கம்,

மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் முடிவில் நோர்வே அரசாங்கம் வெளியிட்ட பத்திரிகை அறிக்கையிலேயே ஒரு பிரகடனமாக பெரிதுபடுத்தப்பட்டு வித்தியாசமான விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

2002ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதி ஒஸ்லோவில் நடைபெற்ற உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டின் போது ஒரு பிரகடனம் வெளியிடப்பட்டது. அதில் குறிப்பிடத்தக்கதாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த பிரகடனம் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஆதரவு தெரிவித்ததுடன், வன்முறையைத் தவிர்த்து சமாதான வழிமூலம் அடிப்படைப் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண ஒஸ்லோ, டோக்கியோ பிரகடனங்களையும் மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தையின் விபரங்களைக் கொண்ட பத்திரிகை அறிக்கையையும் அடிப்படையான ஆவணங்களாக முன்வைத்து இவற்றிலிருந்து அரசியல் தீர்வுக்காக கூட்டமைப்பு உருவாகி விட்டதென ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள் வாதிடுவது அபத்தமானது. ஏற்றுக் கொள்ள முடியாதது.

உதவி வழங்கும் நாடுகளின் மநாடுகள் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பிரகடனங்களின் அடிப்படையில் இனப்பிரச்சனைக்கான தீர்வின் வரையறைகளை முன்கூட்டியே நிச்சயித்துவிட முடியாது.

இனப்பிரச்சனையாது அந்நிய சக்திகளின் அழுத்தமும் தலையீடுமின்றி சம்பந்தப்பட்ட இருதரப்பினரும் பேசித்தீர்மானிக்க வேண்டியதொன்றாகுமென விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகருமான தத்துவாசிரியருமான அன்ரன் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

நன்றி புதினம்
நன்றி TamilNet
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 07-22-2004, 01:54 AM
குருவிகளே - by Mayuran - 07-23-2004, 12:52 AM
[No subject] - by kuruvikal - 07-23-2004, 12:58 AM
[No subject] - by Kanani - 10-28-2004, 11:49 AM
[No subject] - by Kanani - 10-28-2004, 01:15 PM
[No subject] - by kuruvikal - 10-28-2004, 01:34 PM
[No subject] - by Kanani - 11-04-2004, 02:16 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)