11-04-2004, 11:59 AM
காத்தான்குடியைச் சேர்ந்த சுமார் ஆயிரம் முஸ்லீம் மதத்தவர்கள் சொந்த மதத்தவர்களால் தம்வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டுள்ளனர். இவ்வாறு வெளியெற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் காத்தான்குடிக்கு அருகிலுள்ள ஆரையம்பதியில் தஞ்சமடைந்துள்ளனர். சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள் காத்தான்குடியை விட்டு வெளியேறி ஆரையம்பதிக்குச் சென்ற போது இவர்களை ஆரையம்பதியைச் சேர்ந்த தமிழ் மக்கள் வரவேற்று ஆரையம்பதி மகா வித்தியாலயத்தில் தங்க வைத்துள்ளனர். அனைத்துத் தென்னிலங்கை முஸ்லீம் அரசியல் தலைமைகளினாலும் கைவிடப்பட்ட நிலையில் இவர்களுக்கான அவசர மனிதாபிமான உதவிகளைத் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் செய்து வருகிறது. அதேநேரம் இவர்களுக்குச் சமைத்த உணவு மற்றும் நீராகாரங்கள் ஆரையம்பதி கிராமத்தைச் சேர்ந்த தமிழ் மக்களால் வழங்கப்பட்டுள்ளது

