11-04-2004, 02:13 AM
Quote:இது தீபத்திருநாள் மனிதனை பீடித்துள்ள துன்பமாகிய அரக்கனை ஒரு நாளிலாவது அகற்றி மகிழ்ச்சியாக இருக்க விடுங்களேன்...அதுக்கும் விடுறியள் இல்ல...!அரக்கனை அழிச்சதுக்காக அந்த நாளிலை கெட்டவன் ஒளிஞ்சான் எண்டு தீபாவளி கொண்டாடுறீங்கள் (அந்த அரக்கன் அழிப்பின் மூலம் எங்களிற்கு என்ன நன்மை ஏற்பட்டிருக்கு எண்டு தெரியாது அது வேறை விடயம் )
ஆனால், கிளாலி நீரேரியில் வைத்து எம் மக்களை அழித்த கடற்படை அரக்கர்களின் கொட்டத்தை விடுதலைப் புலிகள் நாகதேவன்துறை (பூநகரி இராணுவத் தளத்துடன் இணைந்த கடற்படைத்தளம்) அழிப்பின் மூலம் அடக்கினார்கள். அதற்குப் பிறகு எம் மக்கள் பயமின்றி சுதந்திரமாக கிளாலி நீரேரியில் பயணம் செய்தார்கள். அதற்கு வழிவகுத்த அந்த புனிதமானவர்களினின் நினைவு நாளும் உங்களின் தீபாவளி வரும் அதே நாளில்த்தான் வருகிறது. உங்களை நான் தீபாவளி கொண்டாட வேண்டாம் எண்டு சொல்லவில்லை. தீபாவளிக்கு ஏற்றும் தீபங்களுடன் அவ் வீரர்களுக்கும் தீபம் ஏற்றி ஒரு நிமிசம் அஞ்சலி செலுத்தி அவர்கள் செய்த உயிர்த் தியாகத்திற்கு நன்றி செலுத்துவோம் எண்டுதான் சொல்கிறேன்.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

