Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜெயலலிதாவின் சுய தம்பட்டம்...!
#8
ஜெயலலிதாவின் சுயதம்பட்டத்துக்கு கருணாநிதி எனும் கிழநரியின் பதில்...


<b>நினைவாற்றலை விட மறதியே சிறந்தது: கருணாநிதி</b>

நான் நினைவாற்றலில் நெப்போலியன் மாதிரி என்று முதல்வர் ஜெயலலிதா கூறியதற்கு பதிலளிக்கும் விதமாக, நினைவாற்றலை விட மறதியே சிறந்தது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

மறைந்த திமுக நிர்வாகி பழக்கடை ஜெயராமனின் பேரனும், தி.நகர் தொகுதி எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் மகனுமான ராஜாவின் திருமணத்தை அண்ணா அறிவாலயத்தில் நடத்தி வைத்து கருணாநிதி பேசியதாவது:

இந்த சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைப்பதில் பெருமை அடைகிறேன். ஜெயராமனை பழக்கடை ஜெயராமன் என்றால்தான் அனைவருக்கும் தெரியும். தமிழகம் முழுவதும் அறிமுகமான ஒரு தன்மான வீரர்.

அவர் பெயரிலே 'ஜெய' என்று இருக்கின்ற காரணத்தினால் பொய் பேசுவார் என்றும் யாரும் எண்ணிவிடக் கூடாது. தவறை தவறுதான் என்று ஒப்புக் கொள்வார். அப்படிப்பட்ட ஒரு அருமைத் தம்பியை நான் இழந்த போது எந்த அளவிற்கு கதறினேன் என்பதை அவருடைய குடும்பத்தார் அறிவார்கள்.

இங்கே பேசியவர்கள் அனைவரும் நினைவாற்றலை பற்றி பேசினார்கள். அரசு நிலத்தை (டான்சி நிலம்) சொந்தமாக்கிக் கொண்ட வழக்கில் நீதிபதிகள் விசாரணை நடத்தினார்கள். நீதிபதிகள் கேட்ட 25 கேள்விகளுக்கு குற்றம் சாட்டப்பட்டவர் (முதல்வர் ஜெயலலிதா) தெரியாது என்று பதிலளித்தார். அவர் தனக்கு நினைவாற்றல் இருக்கிறதென்று சொன்னால் அதை எந்த பைத்தியக்காரனும் நம்ப மாட்டான்.

எதையும் சொல்லிவிட்டு, இல்லை என்று மறுநாளே மறுக்கலாமென்றால், ஒன்று பணம் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் பதவி இருக்க வேண்டும். இவை இருந்தால் எதையும் செய்யலாம் என்கின்ற ஆணவம் ஏற்பட்டு விடுகிறது.

எல்லாவற்றையும் நினைவிலே வைத்துக் கொள்வது என்பது இயலாத காரியமாகும். நினைவை விட மறதிதான் ஒரு மனிதனை வாழவைக்கும். என் வீட்டில் நடைபெற்ற ஒரு துக்க நிகழ்ச்சியை நான் நிமிடத்திற்கு நிமிடம் நினைத்துக் கொண்டிருந்தால், நான் நிம்மதியாக வாழ முடியாது.

எனவே நினைவாற்றலை விட மறதிதான் சிறப்பானது. மறதி இல்லாவிட்டால் மனிதன் சுகமாகவோ, மகிழ்ச்சியாகவோ வாழ முடியாது.

மறதி இருக்கின்ற காரணத்தினால்தான் எத்தனையோ கொடுமைகளை மக்கள் மறந்து, யார் யாரையோ (ஜெயலலிதா) எங்கேயோ கொண்டு வந்து உட்கார வைத்து விடுகிறார்கள்.

இந்த மறதி மணமக்களுடைய வாழ்க்கைக்கும் மிகவும் முக்கியமானது. அதனால்தான் அண்ணா, மறப்போம்.. மன்னிப்போம் என்று சொன்னார். மன்னிப்பது கூட இரண்டாவது; மறப்பதுதான் முக்கியம்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by கறுணா - 11-02-2004, 09:51 PM
[No subject] - by kuruvikal - 11-02-2004, 09:58 PM
[No subject] - by kavithan - 11-02-2004, 11:00 PM
[No subject] - by cannon - 11-02-2004, 11:47 PM
[No subject] - by hari - 11-03-2004, 08:27 AM
[No subject] - by கறுணா - 11-03-2004, 12:47 PM
[No subject] - by kuruvikal - 11-04-2004, 01:32 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)