11-03-2004, 04:34 PM
Sriramanan Wrote:சங்க காலத்திலை(கி.மு. 300) வாழ்ந்த காக்கைப் பாடினர் என்ற கவிஞர்(அறிஞர்) வட்டத்தின் பரப்பளவைக் காண்பதற்கு சூத்திரத்தையே எழுதி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். (இதற்கு தொள்ளாயிரம் ஆண்டுகள் கழித்துத்தான் ஆரியப்பட்டரால் பை (22/7) அறிமுகப் படுத்தப்பட்டு வட்டத்தின் பரப்பளவு கண்டுபிடிக்கப்பட்டது)சங்க காலத்தில் கணிதத் துறையில் தமிழன் ஆராட்சிகளைச் செய்திருக்கிறான் என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
இது ஒரு முக்கியமான வரலாறு. இதைப்பற்றி மேலும் அறியத்தர முடியுமா? எங்கேயிருந்து இந்த வரலாற்றை படித்தீ÷கள்?
பல வருடங்களுக்கு முதல் பழ. நெடுமாறன் அவ÷கள் ஒரு தொகுதி பிரசுரங்களை (posters) அனுப்பியிருந்தா÷. அவற்றில் எப்படி இந்தோ-அரபிக் இலக்கங்கள் தமிழ் இலக்கங்களில் இருந்து தோற்றம் பெற்றன என்று அகழ்வாராயச்சி ஆதாரங்களோடு விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. தமிழ் இலக்கங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட போ÷த்துக்கேய÷ காலத்து ஆவணங்களை நான் பா÷த்து பழக்கப்பட்டிருந்தமையால் இந்த ஆதாரங்கள் ஆ÷வத்ததை தூண்டுபவையாக இருந்தன. ஆனால் வட்டத்தின் பரப்பளவை கணித்த காக்கைப்பாடினா÷ பற்றியோ ஆரியப்பட்ட÷ பற்றியோ நான் பெயரைத்தவிர வேறெதையும் அறியவில்லை. சிறி ரமணன், மேலும் தகவல்கள் தெரிந்தால் தந்துதவுங்கள். ஒரு கட்டுரை எழுத முடிந்தால், இணையத்தளங்களிலும், தமிழ் செய்தித்தாள்களிலும் பிரசுரம் செய்து மக்களுக்கு அறியத்தரலாம். பயனுள்ளதாக இருக்கும்.
''
'' [.423]
'' [.423]

