11-03-2004, 03:58 PM
tamilini Wrote:பரத நாட்டியம் என்பது நல்ல ஓரு கலை.. அதை ஆண்களும் தான் ஆடுகிறார்கள் அதனால் நன்மைகள் பல இருக்கிறது.. இப்ப நாம் பார்த்தால் இந்தியாவில் கு}டுதலான பிள்ளைகக் பரதநாட்டிம் சங்கீதம் என்று எல்லாத்திலையம் திறமையுடனும் இருக்கிறார்கள் எல்லாத்தையும் கற்கிறார்கள்.. அது தவறல்ல.. நம்மாக்களும் இப்ப கற்கிறார்கள்... ஆனால் அவர்களிடம் அது ஒரு பசன் ஆகிவிட்டது அரங்கேற்றம் முடிக்கனும் என்பது ஒருவரது பிள்ளை பரதநாட்டியம் கற்றால் மற்றவர்களும் தங்கள் பிள்ளையை அனுப்பிறார்களாம் அது அவர்களது விருப்பமாக இருக்கலாம் இல்லையா..?? மற்றப்படி பரதநாட்டியம் ஒன்றும் இழிவானது கிடையாது.. நம்ம முன்னோர்கள் பரதநாட்டியத்திற்கு பலபல பேர்கள் வைத்து அழைத்துவந்தார்கள் கு}த்து சதிர் ஆட்டம் இப்படியே போன்று தான் அதைவிட இது கடவுளால் அருளப்பட்ட நடனம்.... தெய்வக்கலைபொருந்திய நடனம் புனிதமாய் கற்றகப்பட வேண்டும்.. இங்க காசைக்கொடுத்தால் ஆசிரியர்கள் அரங்கேற்றம் முடிக்கிறார்களாம் அது தான் வேதனைக்குரிய விடையம்...!
பரத நாட்டியம்... தேவதாசிகள்... உயர்குலத்தோரை மகிழ்விக்க நடனம் ஆடும் பெண்கள்...கலை என்றுதான் ஒரு இந்திய நாட்டிப் பெண்மணி சொல்லக் கேட்டம்...அதுதான் பின்னர் இறைவனுக்காக ஆடும் நடனம் என்றாகியது....ஆண்கள் ஆடுவது கூத்து தாண்டவம்....இப்படி...பெண்கள் ஆடும் நடனத்திலும் ஆண்களின் நடனம் வேறுபட்டது...இப்ப எல்லாத்தையும் கலந்தடிச்சிட்டினம்....அதுவேற கதை....!
ஏதோ இப்போதைய நிலையில் நாட்டியக் கலை வளர்ப்பதற்காக நாட்டியம் ஆடுபவர்களை விட கலேசுக்கு ஆடுபவர்கள் தான் மிக மிக அதிகம்...அது வரவேற்கத்தக்கதல்ல.. இதன் மூலம் கலையை வளர்க்க முடியுமா என்பதும் கேள்விக்குறிதான்...!
ஒரு கலையை அதன் நுட்பங்களை அறிந்து பயில்வதற்கும் மேலோட்டமாக ஏதோ பசனுக்கு பழகுவதற்கும் நிறைந்த வேற்பாடுண்டு....! குறிப்பாக நட்டுவக் கலையை பாரம்பரியமாக எடுத்துச் செல்வார்கள் சிறிய வயதில் இருந்தே நுட்பங்களைச் சொல்லிக் கொடுத்து கலையை முறையாக வளர்த்துக் கொள்வார்கள்...அந்த நிலையை பரத நாட்டியத்தில் இன்று பல இடத்தில் காணவே முடியாது...அது இன்று பணம் சம்பாதிக்கும் தொழில் ஆகிவிட்டது....! ஏதோ கையை பிசையுறதும் துள்ளுறதும் குதிக்கிறதுமா இருக்குது...அவ்வளவும் தான்...இப்படி ஆடினா...சிலவேளை மூட்டுவலி வந்தாலும் வரலாம்....நன்மை கிடைக்கவே வழி இல்லாமல் போயிடும்...அதையதை அதற்கென்ற விதியின் படி செய்தாத்தான் நன்மை கிட்டும்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

