11-03-2004, 07:50 AM
பிரபல கொழும்பு தமிழ் பாடசாலைகளில் கலை நிகழ்ச்சிகளின் போது, இந்தி பாடல்களை பிள்ளைகள் பாடி ஆடுகின்றனர். இப்படி ஒரு சம்பவம் கொழும்பு இராம நாதன் மகளீர் கல்லூரியில் இடம்பெற்றது. இது தொடர்பாக நான் அதிபரை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறிய பதில் , சிங்கள மாணவர்களும் நிகழ்ச்சிகளை பார்க்க வருவார்களாம். அந்த நிகழ்ச்சி ரத்து செய்யும்மாறு தொடர்ந்து நான் வாதடியபோதும் பயன் கிடைக்கவில்லை. அதிபர் கடைசியாக் சொன்னது இதுதான் "இது எங்கள் நிர்வாகம் எடுத்த முடிவு இதில் எந்த விதமான மாற்றமும் இல்லை. விருப்பம் என்றால் உங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிவையுங்கள், இல்லையெனில் வீட்டில் வைத்திருக்கவும்."

