11-03-2004, 03:27 AM
தமிழ் அரசர்கள் இந்தக் கோயில்களைக் கட்டியதாலை எங்களிற்கோ அல்லது அவர்கள் கோயில் கட்டிய நாடுகளில் உள்ள மக்களிற்கோ என்ன பிரியோசனம் ஏற்பட்டிருக்கு. இண்டைக்கு எங்களுடைய இனம் ஒரு பண்பாடற்ற(சொந்தப் பண்பாடில்லாத) இனமாக இருக்கிறத்துக்கு என்ன காரணம்? இந்தச் சாக்கடைச் சமயங்களைத் தவிர வேறை ஒண்டுமில்லை. சங்க காலத்திலை(கி.மு. 300) வாழ்ந்த காக்கைப் பாடினர் என்ற கவிஞர்(அறிஞர்) வட்டத்தின் பரப்பளவைக் காண்பதற்கு சூத்திரத்தையே எழுதி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். (இதற்கு தொள்ளாயிரம் ஆண்டுகள் கழித்துத்தான் ஆரியப்பட்டரால் பை (22/7) அறிமுகப் படுத்தப்பட்டு வட்டத்தின் பரப்பளவு கண்டுபிடிக்கப்பட்டது)சங்க காலத்தில் கணிதத் துறையில் தமிழன் ஆராட்சிகளைச் செய்திருக்கிறான் என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். இதேவேளை தாமாக ஒளிவிடும் நட்சத்திரங்களை நாண்மீன்கள் என்றும் சூரிய ஒளியினால் ஒளிரும் கோள்களை மீன்கள் எனவும் சங்க காலத் தமிழர்கள் பெயரிட்டிருக்கிறார்கள் இதன் மூலம் சங்க காலத் தமிழர்களிடம் வானியல் ரீதியான அறிவு ஓரளவுக்கு இருந்துள்ளது என்று அறியலாம்
<i>நக்கீரனின் சோதிடப் புரட்டிலிருந்து</i>
சங்க காலத் தமிழர்களுக்கு இருந்த வானியல் பற்றிய அறிவு அதன் பின்னர் வந்த தலைமுறையினரால் மேம்படுத்தப் படவில்லை. கோள்களைப் பற்றி ஆராய்வதற்குப் பதில் அவற்றுக்குத் தெய்வீகம் கற்பிக்கப்பட்டு அவை வழிபடப்பட்டன. கோள்களுக்குத் தனிக் கோயில்கள் கட்டப்பட்டன. 'எல்லாம் விதிப் பயன்" 'ஈசன் விட்ட வழி" 'அன்றெழுதியதை யார்தான் அழித்தெழுத முடியும்?" என்ற ஆரியர்களின் வெட்டி வேதாந்தத்தில் மயங்கி மதியிழந்த தமிழர் கெட்டொழிந்தனர். இந்த அவல நிலை இன்றும் நீடிக்கிறது.

<b>
?
- . - .</b>
?
- . - .</b>