11-02-2004, 04:26 PM
<img src='http://tamilchurch.homestead.com/MrsThineshRajaratnam.jpg' border='0' alt='user posted image'>
ஈராக்கில் தீவிரவாதிகளினால் கடத்தப்பட்டுள்ள ட்ரக் வண்டி சாரதியான தினேஷ் தர்மேந்திரா ராஜரத்தினம் 'அன்சாருள் சுன்னா" என்ற அமைப்பினாலேயே கடத்தப்பட்டுள்ளதாக இலங்கை பிரதி வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால இன்று தெரிவித்துள்ளார்.
இதை உறுதிப்படுத்தும் வகையில் குவைத்திலுள்ள இலங்கை தூதராலயம் ஊடாக இன்று தொலைநகல் தகவலொன்று அமைச்சிற்கு கிடைத்துள்ளதாகவும், கடத்தல் காரர்களினால் இதுவரை எந்தவொரு கோரிக்கையும் முன் வைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈராக் டைம்ஸ் பத்திரிகை உட்பட அந் நாட்டில் வெளியாகும் அநேகமான பத்திரிகைகளில் கடத்தப்பட்டவரின் குடும்பம் விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள் இன்று பிரசுரமாகியுள்ளது.
இது அவரது விடுதலைக்கு சாதகமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதே வேளை குறிப்பிட்ட ட்ரக் வண்டி சாரதி பணியாற்றிய குவைத் அல் ஜசீரா போக்குவரத்து நிறுவனம் கடத்தல் காரர்கள் கப்பம் கோரினால் அதனை செலுத்துவதற்கு தாம் தயார் என்று அறிவித்துள்ளது.
இதற்கிடையில் இலங்கை வெளி விவகார அமைச்சு அதிகாரிகள் இன்று தினேஷ் தர்மேந்திரா ராஜரத்தினத்தின் வத்தளை வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்து உரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பு காரணமாக தனது கணவன் விடுவிக்கப்படுவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக அவரது மனைவி டொரீன் ரீட்டா ராஜரத்தினம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஈராக்கியத் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த வாகனச் சாரதி தினேஸ் இராசரத்தினத்தின் விடுதலைக்கு அனைத்துத் தமிழர்களும் குரல் கொடுக்க வேண்டுமென தினேஸ் இராசரத்தினம் அவர்களின் குடும்பத்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
தனது கணவர் குடும்பச்சுமை காரணமாகவே ஈராக்கில் உள்ள குவைத் கம்பனி ஒன்றில் வாகனச் சாரதியாக வேலை செய்து வந்தவர்.
குடும்பத்தைக் காப்பாற்ற தொழில் hPதியாக இவர் குவைத் கம்பனியில் இணைந்து கொண்டார் என்றும், இவர் அமெரிக்கப் படைகளின் உதவியாளராகத் தொழிற்படவில்லை என்றும், குடும்பத்தைப் பாதுகாக்க அவரால் மட்டுமே முடியும் என்பதால் இளம் குழந்தைகளின் தந்தை என்ற வகையில் அவரை விடுதலை செய்து உதவும்படியும் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைத் தாயகமாகவும் தற்போது வத்தளையில் வசித்து வருபவருமான இவரது மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜரோப்பா, கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியாவில் வாழ்கின்ற இலங்கைத் தமிழ் உறவுகள் பலரும் தமது ஆழ்ந்த அனுதாபங்களை இவருடைய குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்வதாகவும் இவரின் விடுதலைக்கு உதவுவதாகவும் பலவித ஊடகங்களுடாகவும் இணையத் தளங்களுடாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்கள்.
ஈராக்கில் தீவிரவாதிகளினால் கடத்தப்பட்ட 38 வயதுடைய தினேஸ் தர்மேந்திரா இராசரத்தினம் விடுதலை செய்யப்படலாம் என நம்புவதாக அல்-ஜசீரா தொலைக்காட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நன்றி புதினம்..!

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>