11-02-2004, 01:43 PM
பெண்ணின் மாற்றத்தை கதைத்து ஆணின் மாற்றத்தை கதைக்காமல் விட்டால்...அப்ப ஆண்களின் மாற்றம் சமூக மாற்றத்துக்க வருகுதோ...அப்ப பெண்கள் சமூகத்துக்க இல்லாத வேறாக்களா.. இல்ல இதில ஏதோ தவறு உணரப்படுவதாயே எங்களுக்குப்படுகுது...!
சமூக அநீதி என்றால் என்ன இன அடக்குமுறை என்றால் என்ன எல்லாவற்றிற்கும் எதிராக ஆண்களும் பெண்களும் சேர்ந்து புரட்சி செய்வதுதான் உயிரின் இயல்பு...! குறிப்பா குரங்குகளில் பார்த்தால் கூட சண்டையென்று வந்துவிட்டால் ஆண் தலைமை தாங்கினும் பெண்ணும் அடிபடும்.... அதை யாரும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை...ஆனால் மனிதருக்குள் மட்டும் ஏன் இந்த நிலை...பெண்ணை இப்படிப் பிரித்துக் காட்டுவதுதான் பெண்ணிற்குள் என்னவோ விசேடம் என்பது போல சிந்திக்கத் தூண்டுகிறது என்பதாகவே எமக்குத் தோன்றுகிறது...!
கவிஞரின் தவறு என்பது பெண்ணை மட்டும் விளித்ததுதான்... இதற்குள் ஆணையும் இணைத்திருந்தால்...பெண்ணின் மாற்றங்களை அவனும் எதிர்பார்க்கின்றான் வரவேற்கிறான்... மாற்றங்களால் பெண் தனிமைப்படுத்தப்படவில்லை....என்பதை காட்டியிருக்கலாம்....!
நாம் சமூகத்தில் அவதானித்த ஒன்றையும் இங்கு சொல்ல வேண்டும்... இன்று தமிழ் ஆண்கள் (பெரும்பாலும் படித்தவர்கள்) அழகான செக்கச்செவேல் என்று அன்று கவிஞர்கள் சித்தரித்த அதே புளுகுகளுடன் கூடிய பெண்களைத்தான் தேடுகின்றனர்... போராளிப் பெண்களை போராளிப் பையன்கள் தான் அநேகம் திருமணம் செய்கின்றனர்... காரணம் அந்தப் பெண்களோடு வாழ்ந்து அவர்களின் கஸ்டத்தை அநுபவங்களை கண்ணால் கண்டு அவர்களின் மாற்றங்களுக்கு ஏற்ப தங்களையும் மாற்றிக் கொள்வதால்....!
அப்படியான ஆண்களையும் மாற்றம் விரும்பாத காவிய இல்ல சினிமா நாயகன்கள் போல வாழ எண்ணும் ஆண்களையும் இன்னும் அதே பழைய காவியக் கன்னிகள் போல இல்ல சினிமா நாயகிகள் போல வாழும் வாழ எண்ணும் மாற்ற விரும்பாத பெண்களையும் கவிஞர் ஏன் இனங்காணத் தவறிவிட்டார்...அடித்துச் சொல்வோம் அவர்கள் தான் இன்னும் எம் தமிழ் சமூகத்தில் எண்ணிக்கையில் அதிகம்....! உலகெங்கினும் இதையே அவதானிக்கலாம்...! :twisted:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>