Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சந்தனக்கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொலை!
#25
வீரப்பன் சமாதியை பார்ப்பதற்கு தினந்தோறும் மக்கள் குவிவதால், சமாதியை கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக, கர்நாடக அரசுகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் மற்றும் அவனுடைய கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா, சேதுமணி ஆகியோர் கடந்த 18-ந்தேதி இரவு தர்மபுhp மாவட்டம் பாப்பா ரப்பட்டி அருகே உள்ள பாடி என்னும் இடத்தில், ஒரு ஆம்புலன்ஸ் வேனில் சென்று கொண்டிருந்தபோது தமிழக அதிரடிப்படை போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதையடுத்து அவர்களது உடல்கள் தர்மபுhp அரசு மருத்துவமனையில் பிரேத பாpசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வீரப்பனின் உடல் அவனது மனைவி முத்து லட்சுமியிடம் ஒப்படைக்கப் பட்டது. பின்னர் வீரப்பன் உடல் கடந்த 20-ந் தேதி சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்து உள்ள மூலக்காட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து பல் வேறு பகுதிகளில் இருந்தும் வீரப்பன் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அவனது உறவினர்களும் ஏராளமான பொதுமக்களும் தினமும் வந்து பார்த்துச் சென்ற வண்ணம் உள்ளனர். மேலும் வெளிமாநில, மற்றும் வெளி நாட்டு பத்திhpக்கையாளர் களும் வீரப்பன் புதைக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு புகைப்படங்களை எடுத்துச் சென்றனர். இதனால் வீரப் பன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படுகிறது. வேன் மற்றும் பல்வேறு வாகானங்களில் ஏராளமானோர் மூலக்காட்டுக்கு வந்து வீரப்பன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை பார்வைவிட்டு சென்றவண்ணம் உள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் மேட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இருந்தும், தர்மபுhp மாவட்டம் ஏமனு}ர், நெருப்பூர், அந்தியூர் ஆகிய பகுதிகளிலும் இருந்தும் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ஏராளமானோர் நாள்தோறும் வீரப்பன் சமாதிக்கு வந்து வீரப்பன் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் மலர்அஞ்சலி செலுத்தியும், ரோஜh மலர் பூச்செண்டுகள் வைத்தும், கற்பூரம் கொளுத்தியும், வீரப்பன் உடல் புதைக் கப்பட்ட இடத்தில் மண்ணை எடுத்து நெற்றியில் பூசி வழி பட்டும் செல்கின்றனர். மேலும் ஒரு சிலர் அந்த இடத்தில் இருந்த மண்ணையும் எடுத்துச் செல்கிறhர்கள்.

இதனால் எதிர்காலத்தில் வீரப்பன் புதைக்கப்பட்ட இடம் கோயிலாக மாறினாலும் ஆச்சாpயப்படுவதற்கில்லை என்று கூறப்படுகிறது. வீரப்பனை பற்றி பல்வேறு கருத்துக்கள் உலாவி வந்தாலும், ஏராளமானோர் அவனை ஏழைகளுக்கு உதவுபவ னாகவும், சாமியாகவே பலர் தங்கள் மனதில் நினைத்துள்ளனர். சிலர் வீரப்பன் சாமி என்று அழைக்கின்றனர்.

வீரப்பனை பிடிக்கவே முடியாது என்று இருந்த சூழ்நிலையில் அவன் கொல்லப்பட்டதை அறிந்ததும், அவனை பார்க்க முடியாமல் போனவர்கள் அவனது சமாதியையாவது பார்த்துவிட்டு போகலாம் என்ற ஆர்வத்திலும் வீரப்பன் உடல் புதைக்கப்பட்ட இடத்தை பார்த்துவிட்டு செல்வதாக தொpவித்தனர். இதனால் வீரப்பன் உயிருடன் இருக்கும்போது இருந்த பரபரப்பு தற்போது அவன் சுட்டுக்கொல்லப்பட்டு இறந்த போதும் தொடர்கிறது.

¿ýÈ¢ - ¾¢É¸Ãý
Reply


Messages In This Thread
[No subject] - by Thiyaham - 10-19-2004, 01:02 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 01:18 AM
[No subject] - by Thiyaham - 10-19-2004, 03:37 AM
[No subject] - by Sriramanan - 10-19-2004, 06:15 AM
[No subject] - by hari - 10-19-2004, 06:58 AM
[No subject] - by hari - 10-19-2004, 07:12 AM
[No subject] - by shanmuhi - 10-19-2004, 08:29 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 09:21 AM
[No subject] - by hari - 10-19-2004, 10:36 AM
[No subject] - by hari - 10-19-2004, 11:08 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 11:33 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 11:36 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 11:45 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 12:00 PM
[No subject] - by yalini - 10-19-2004, 01:05 PM
[No subject] - by hari - 10-19-2004, 03:54 PM
[No subject] - by hari - 10-20-2004, 07:40 AM
[No subject] - by kuruvikal - 10-20-2004, 12:17 PM
[No subject] - by kuruvikal - 10-20-2004, 12:27 PM
[No subject] - by kuruvikal - 10-20-2004, 12:34 PM
[No subject] - by tamilini - 10-20-2004, 02:22 PM
[No subject] - by kavithan - 10-20-2004, 09:54 PM
[No subject] - by kuruvikal - 10-22-2004, 11:02 AM
[No subject] - by shanmuhi - 11-02-2004, 11:10 AM
[No subject] - by kuruvikal - 11-02-2004, 01:23 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)