11-02-2004, 12:34 AM
<b>டினேஸ் இராசரத்தினம் விடுதலை தொடர்பாக ஈராக்கிய பிரதிநிதி ஒருவரின் தகவல். </b>
ஈராக்கியத் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பார ஊர்திச் சாரதி டினேஸ் இராசரத்தினம் விடுதலைக்கு இலண்டனில் உள்ள ஈராக்கிய ஆயுதக்குழுகளின் பிரதிநிதிகளுடன் தொடர்பு கொண்டால் டினேஸ் இராசரத்தினம் விடுதலையாகலாம் என ஈராக்கில் படைநகர்த்தும் மிகப்பெரும் தளபதி ஒருவரின் குரல்தரவல்ல அதிகாரி தெரிவித்துள்ளார். டினேஸ் இராசரத்தினம் தொடர்பாகத் தாம் கேள்விப்பட்டதாகவும் இவருடைய விடுதலை தொடர்பாக இலண்டனில் தொடர்புகளை ஏற்படுத்துவதன் ஊடாக அவரின் விடுதலையை இலகுவாக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
ஈராக்கில் நீண்டகாலமாக பெயர் குறிப்பிட விரும்பாத மிகப்பெரும் அமைப்பினை நாடாத்தி வரும் தலைவரின் உடன் பிறந்த பெயர் குறிப்பிட விரும்பாத சகோதரர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். இந்த அமைப்பு ஈராக்கிற்குள் அதிக தொடர்புகளை மக்கள் மத்தியில் பேணிவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எமது கருத்து...
தமிழ் இளைஞரின் விடுதலை தொடர்பாக ஈராக்கில் போராடிவரும் பயங்கரவாத அமைப்பு ஒன்றின் தலைவருடன் தொடர்பு கொண்டு ஓர் தமிழ்ப் பத்திரிகையாளர் கலந்துரையாடி இத்தகவலை எமக்கு மின்னஞ்சலூடாக அனுப்பி வைத்துள்ளார்.
சமீபத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்க் குடும்பத்தின் நன்மை கருதி இச்செய்தியைப் பிரசுரம் செய்கிறோம். இச்செய்தியை அனுப்பியவரின் செய்தியே தவிர நிதர்சனத்தின் செய்தி இல்லை என்பதையும் நிதர்சனம் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறது. பல காரணங்களிற்காக தீவிரவாத அமைப்பின் பெயரும் அதன் தலைவரின் பெயரும் குரல் கொடுத்தவரின் பெயரும் மறைக்கப்பட்டிருக்கிறது.
<img src='http://www.nitharsanam.com/public/gallery/lanka/em0aillll.JPG' border='0' alt='user posted image'>
nitharsanam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>