Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ரி.ரி.என் தொலைக்காட்சியில்
#4
மிகவும் மகிழ்ச்சியான விடையமிது. புகலிடக் கலை வெளிப்பாடுகள் சிறந்த முறையில் மக்களிடம் சென்றடைய எமது ஊடகங்கள் தொடர்ந்தும் பணியாற்றவேண்டும். நாம் ஊடகங்களை நடாத்துவதன் தார்மீகப் பொறுப்பாகவும் இது அமையும்.
நேற்றைய தினம் நாடகவியலாளர் அரியரெத்தினம் அவர்களின் -நாடக அறுவடைகள்- நிகழ்வைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. இதில் அம்மா என்ற சிறு நாடகமும், சடங்கு என்ற நாடகமும் பெரிதும் கவர்ந்திழுத்தது. மிகக்குறைந்த பார்வையாளர்களுடன் நடந்தேறிய இந்நிகழ்வு பல கேள்விகளை விட்டுச் சென்றுள்ளது.
1. சடங்காகத் தொடரப்படுகிறதோ நம் நிகழ்வுகள்?
2. சமூகத்தை விமர்சித்தவாறே நம்மவர்களும் புகலிட இயந்திர வாழ்வோட்டத்தில் மூழ்கிறார்களா?
3. தொடர்ந்தும் கலைப் பணிபுரிபவர்கள் ஏன் வாணிப வெற்றியையும் பெறும் தொடர்பிணைப்புகள் கிட்டாமல் தவிக்கிறார்கள்?
4. புகலிடத்தின் புதிய அரங்கவியல் வளர்ச்சிகளை உள்வாங்கி நம் அடுத்த தலைமுறையினர் பெரிதும் பங்கேற்கும் புது முயற்சிகள் தொடராமல் இருப்பதேன்?
5. தொலைக்காட்சியில் நித்திரையையும், வேலைப் பழுவையும் மறந்து தொடர்களைச் சலிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் நம்மவர்களின் யதார்த்தத்தைப் புரிந்து படைப்பாளிகள் புதிய உத்திகளுடன் சின்னத் திரையைப் பீடித்திருக்கும் அழுக்குப் படையை அகற்ற வேண்டிய காலகட்டமிது.
இந்த வகையில் படைப்பாளிகள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வத் தாராளர்கள் ஒன்றிணைவேண்டும்.
குறும்படங்களாக நிறையவே மக்களிடம் கொண்டு செல்லலாம்.
இவ்வகையிலான உந்துதலை ஊடகங்கள் ஊக்குவிக்கவேண்டும்.
- பலமாகவே அழுத்தத்தைக் கொடுப்போம்.
- புகலிட, தாயக இருப்பின் கலைப்பதிவுகள் நம்மவர் தொலைக்காட்சிகளில் முழுமையாக இடம்பெறும் இலக்கை நோக்கிய கலைப் பயணத்தை முடுக்கிவிடுவோம்.

-முகிலன்
Reply


Messages In This Thread
[No subject] - by hari - 10-31-2004, 05:05 PM
[No subject] - by mukilan - 11-01-2004, 07:23 PM
[No subject] - by shanmuhi - 11-01-2004, 09:14 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)