11-01-2004, 03:17 PM
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40474000/jpg/_40474529_kez203.jpg' border='0' alt='user posted image'>
<b>நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்....!</b>
அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில் தற்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிக்கும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜான் கெர்ரிக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.
3 தினங்களுக்கு முன்பு யாருக்கு வெற்றிவாய்ப்பு என்பது குறித்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவில் ஜார்ஜ் புஷ்ஷுக்கு 50 சதவீத ஆதரவும், ஜான் கெர்ரிக்கு 44 சதவீத ஆதரவும் சுயேச்சை வேட்பாளருக்கு ஒரு சதவீத ஆதரவும் இருப்பது தெரியவந்தது.
இதற்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் புஷ்ஷுக்கு 48 சதவீதமும் கெர்ரிக்கு 46 சதவீதமும் ஆதரவு இருந்தது. எனவே இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவது தெரிய வந்துள்ளது.
இந் நிலையில் முஸ்லீம் அடிப்படைவாதி பின் லேடனின் விடியோ டேப் வெளியாகியுள்ளது, புஷ்ஷýக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் பின் லேடனை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டுவர ஏற்பாடு செய்யப்படும் என்று 3 ஆண்டுகளுக்கு முன்பு புஷ் உறுதி கூறியிருந்தார். ஆனால் அவரால் அதை நிறைவேற்ற முடியவில்லை.
thatstamil.com