11-01-2004, 02:55 PM
<b>இலங்கை தமிழரை கடத்திய இராக் தீவிரவாதிகள்</b>
இராக்கில் அமெரிக்கப் படைகளுக்கு லாரி டிரைவராகப் பணியாற்றிய இலங்கைத் தமிழர் தினேஷ் தர்மேந்திரன் ராஜரத்தினம் (36) என்பவரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.
தினேஷ் கடத்தப்பட்டது குறித்து அவரது பெற்றோர் கொழும்பில் கூறியதாவது:
தினேஷýக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். முதலில் தினேஷ் குவைத்தில்தான் வேலை பார்த்தார். ரூ.68,000 கொடுத்துதான் குவைத்தில் அவருக்கு டிரைவர் வேலை வாங்கினோம். அவரது உரிமையாளர்கள் அவரை வலுக்கட்டாயமாக இராக்குக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
3 வாரங்களுக்கு முன்பு தான் இலங்கை வருவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தினேஷ் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் தீவிரவாதிகள் அவரைப் பிடித்துச் சென்றுள்ளனர்.
அவரை மீட்பதற்கான முயற்சியை இலங்கை அரசு மேற்கொள்ளவேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இராக்கில் இலங்கைக்கு தூதரகம் கிடையாது. லெபனானில் உள்ள இலங்கைத் தூதரகம் தினேஷை மீட்பதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதற்கிடையே, இராக்கில் கடத்தப்பட்டுள்ள எங்கள் சகோதரரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று இலங்கையில் உள்ள முஸ்லீம் லீக் அமைப்பு இராக் தீவிரவாதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
thatstamil.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>