11-01-2004, 04:16 AM
பொது வாழ்வில் இருப்பவர்கள் பொதுச் சொத்து போன்று நோக்கப்படுகிறார்கள். தனிப்பட்ட அறியப்படாதவர்களை பற்றி யார் கவலைப்படுகிறார்..
அண்மையில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில்கிளின்ரன் அவருடைய செயலாளர் மோனிக்காவுடன் திருமணத்துக்கு மீறிய தொடர்பு என்று பலத்த சர்ச்சை, வழக்குகள் வேறு..... ஏன் அமெரிக்காவில் கிளின்ரனை தவிர மற்றவர்கள் அடுத்தவர்களுடன் படுக்கவில்லையா? காரணம் ஊடகங்கள் ஊர் பேர் தெரியாதவர்களை பற்றி செய்தி வெளியிட்டால் அவர்களுக்கு என்ன பயன் ... அத்துடன் கிளின்ரனுடன் தொடர்பு என்றால் தனக்கு மக்களிடையே popularity கிடைக்கும் சம்மந்தப்பட்டவர் நினைப்பார்.
இலங்கயில் அண்மையில் நீதியரசர் ஒருவர் தனது காரில் இளம் பெண் ஒருத்தியுடன் தகாத உறவில் ஈடுபட்டதாகவும். முஸ்லிம் அமைச்சர் ஒருவர் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வந்தன.. இலங்கையில் இவர்களைத்தவிர ஏனையவர்கள் சோரம் போனதில்லையா? இவைகளை எல்லாம் ஊதி பெரிது படுத்துவது ஊடகங்கள் மட்டுமே. ஊடகங்கள் தங்கள் பிழைப்புக்காக இவைகளை செய்ய தயங்குவதில்லை.
இவைகளை விட சினிமாவில் இருப்பவர் பாடு பெரும் பாடு. கிசுகிசு என்று பத்திரிகைகளே நாங்கள் பொய் கூறுகின்றோம் என்று சொல்வதை நாம் விரும்பி படிக்கின்றோம் அதைப்பற்றி விவாதிக்கின்றோம். இதனால் சம்பந்தப்பட்டவர்களின் மனது எப்படி வேதனைப்படும் என்பதை ஒருவரும் சிந்திப்பதில்லை. இது இன்று நேற்றல்ல தொன்று தொட்டு நடந்து வருகின்றது. இப்படியான செய்திகளால் மனம் நொந்த சாளி சப்பிளின் கூறினார் சினிமாவில் என் நடிப்பை பாருங்கள் எனது தனிப்பட்ட வாழ்வை அல்ல.
ஊடகங்கள் தனது பிழைப்புக்காக சிலரை நோகடித்து பலரை தமது நேயர்கள்/வாசகர்கள் ஆக்குகின்றார்கள்.